அம்மோனியா காற்றில் கலந்தால் மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்ன? விவரித்த வேதியியல் பொறியாளர்!
சென்னை: சென்னை எண்ணூர் உர ஆலையில் ஏற்பட்ட அமோனியா வாயுக்கசிவால் மக்கள் கடும் பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ள நிலையில் அம்மோனியாவின் நச்சுத் தன்மை பற்றியும் அதனால் மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விவரித்துள்ளா வேதியியல் பொறியாளர் சுபத்ரா ராஜேந்திரன்.
அமெரிக்காவில் பணியாற்றி வரும் இவர் காணொலி மூலம் செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார். அதன் விவரம் வருமாறு;

''அம்மோனியா வாயு என்பது நச்சுத்தன்மை மிக்கது. இது காற்றில் கலந்து அதை மனிதர்கள் சுவாசிக்க நேர்ந்தால் மூச்சுத்திணறல் ஏற்படும், மயக்கம் ஏற்படும். ரொம்ப நேரம் சுவாசித்தால் நுரையீரலில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி ஆக்சிஜன் இல்லாமல் செய்துவிடும். விவசாய உரத் தேவைகளுக்கு அம்மோனியா அவசியமாக திகழ்வதால் அதன் உற்பத்தி இன்னும் நாளுக்கு நாள் அதிகரிக்குமே தவிர குறைய வாய்ப்பில்லை. ''
''சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் அம்மோனியா என்பது தூங்கும் சிங்கம் போன்றது. அமைதியாக இருக்கும் வரை அம்மோனியாவால் எந்த பாதிப்பும் இல்லை. வெடித்துச் சிதறி காற்றில் கலக்க ஆரம்பித்தால் பாதிப்பு அதிகம். உர ஆலைகளில் உரிய பாதுகாப்பு விதிமுறைகள் கடைபிடிக்காமல் இருக்கும்பட்சத்தில் தான் இது போன்ற விபத்துக்கள் நிகழும்.''
''மேலை நாடுகளில் அம்மோனியா இஞ்சின்களே வரத் தொடங்கிவிட்டது. இதனால் அம்மோனியாவின் உற்பத்தியும், தேவையும் இன்னும் கூடுமே தவிர குறைய வாய்ப்பே இல்லை. ஸ்டோரேஜ் தொடங்கி டிரான்ஸ்போர்டேஷன் வரை மிகக் கடுமையாக விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். இப்போது சென்னை எண்ணூரில் அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டுள்ள நிலையில், அப்பகுதி மக்களை உடனடியாக காற்றோட்ட மிக்க இடங்களுக்கு மாற்ற வேண்டும். இது தான் இப்போதைக்கு உடனடி தீர்வு.''
''அம்மோனியா காற்றில் கலந்தால் 4 முதல் 5 மணி நேரம் வரை அதன் தாக்கமும், நச்சுத் தன்மையும் இருக்கும். லேசான பாதிப்பு என்றால் மயக்கம் மட்டும் வரும். பாதிப்பு அதிகமிருந்தால் மூச்சுத்திணறலும் வரக் கூடும்.''
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications