Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கிளாம்பாக்கம் நடைமேம்பாலம்.. 34,444 சதுர அடி நிலம் .. செங்கல்பட்டு கலெக்டர் முக்கிய அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை வண்டலுாரை அடுத்த கிளாம்பாக்கத்தில், 40 ஏக்கரில், 400 கோடி ரூபாய் செலவில், புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. பேருந்து நிலையம் அமைக்கும் போதே, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த் ஜிஎஸ்டி சாலையில் மேம்பாலம் அமைக்கப்படவில்லை.. அதேபோல் ரயில் நிலையமும் கையோடு அமைக்கப்படவில்லை. தற்போது தான் பணிகள் நடக்கிறது. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் கிளாம்பாக்கம் நடை மேம்பாலத்துக்கு, 34,444 சதுர அடி நிலம் கையகப்படுத்தும் பணிகளை மீண்டும் துவக்கி உள்ளது.

சென்னை மாநகரில் உள்ள போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக, சென்னை பாரிமுனையில் இருந்து 36 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கிளாம்பாக்கத்தில் பேருந்து முனையம் 40 ஏக்கரில், 400 கோடி ரூபாய் செலவில் மிக பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டது. தாம்பரத்தில் இருந்து 6 கிலோ மீட்டர் தள்ளி கோயம்பேட்டுக்கு மாற்றாக கட்டப்பட்டுள்ள இந்த கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் 30-ந்தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த பேருந்து நிலையத்திற்கு தினமும் ஒரு லட்சம் பேர் வந்து செல்கிறார்கள். கோயம்பேடு போல் கிளாம்பாக்கம் மாறிவிட்டது.

Chengalpattu administration has resumed process of acquiring land for Kilambakkam footbridge

ஆனால் சென்னையின் பல பகுதிகளில் இருந்து, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செல்லவும், வெளியூரில் இருந்து வருவோர், அங்கிருந்து தங்கள் பகுதிக்கு செல்லவும், மாநகர பேருந்துகளை மட்டுமே நம்பி இருக்க வேண்டிய நிலை இருக்கிறது. குறிப்பாக அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்தவர்கள் கிளாம்பாக்கத்தில் மட்டுமே ஏற முடியும் என்கிற நிலை உள்ளது. ஆனால் கிளாம்பாக்கத்திற்கு ரயிலில் வர வேண்டும் என்றால், ஊரப்பாக்கம் அல்லது வண்டலூரில் இறங்கி ஒன்றரை கிலோ மீட்டர் வரை நடந்து வர வேண்டியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு, ஊரப்பாக்கம் - - வண்டலுார் இடையே, கிளாம்பாக்கத்தில் மின்சார ரயில்கள் நின்று செல்லும் வகையில், புதிய ரயில் நிலையம் கட்டப்பட்டு வருகிறது.

இதையடுத்து கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தையும், பேருந்து நிலையத்தையும் இணைக்கும் வகையில், 74 கோடி ரூபாய் மதிப்பில் 1,310 மீட்டர் நீளத்துக்கு நடை மேம்பாலம் அமைக்கும் பணிகள் கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இதற்காக, ரயில் நிலையம், ஜி.எஸ்.டி., சாலை இடையே, 1 ஏக்கர், 45 சென்ட் நிலத்தை கையகப்படுத்த, செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டது.

அறிவிப்பை எதிர்த்து தி.மு.க., - எம்.பி., ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்தினர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதை விசாரித்த நீதிமன்றம், நிலம் கையகப்படுத்தும் அறிவிப்பை ரத்து செய்தது. புதிதாக அறிவிப்பு வெளியிட்டு, கையகப்படுத்தும் பணிகளை மேற்கொள்ளலாம் என உயர் நீதிமன்றம் கூறியது.

இதன் அடிப்படையில், செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம், தற்போது நிலம் கையகப்படுத்த புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. இதன்படி, நடைமேம்பால பணிகளுக்கு, 34,444 சதுர அடி நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதுகுறித்து, ஆட்சேபம் எதுவும் இருந்தால் நில உரிமையாளர் தெரிவிக்கலாம் என, செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் அறிவித்திருக்கிறது. இந்த கையகப்படுத்தும் பணிக்கு பிறகு நடைமேம்பாலம் முழுமையாக கட்டி முடிக்கப்படும். இந்த நடைமேம்பாலம் கட்டி முடிக்கப்படாமல் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறப்பது சாத்தியமில்லை என்பது தான் எதார்த்தம் என்கிறார்கள் உள்ளூர் மக்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+