செங்கல்பட்டு டூ சென்னை! மின்சார ரயில்கள் திடீர் ரத்து! சிங்கப்பெருமாள் கோவில் வரை மட்டுமா? என்னாச்சு
சென்னை: சென்னையில் மிக முக்கிய வழித்தடங்களில் இன்று ரயில்கள் இயக்கம் குறித்து, தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பினை வெளியிட்டிருக்கிறது.
சென்னை புறநகர் மின்சார ரயில்களின் சேவை, தவிர்க்க முடியாததாகிவிட்டன.. குறிப்பாக, சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு வரை இயங்கக்கூடிய மின்சார ரயில்கள், சென்னையின் அத்தியாவசிய பயண தேவையை பூர்த்தி செய்து வருகிறது.

இந்த மின்சார ரயில்களில் தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயணித்து வருகிறார்கள்.. பஸ்ஸில் செல்வதைவிட, ரயிலில் பயணிப்பது வசதியாகவும், குறைந்த கட்டணத்தில் உள்ளதாகவும் கூறுகிறார்கள். அதனால்தான் மின்சார ரயில்களின் சேவையையும் அதிகப்படுத்த வேண்டியிருக்கிறது.
அதேபோல, ஒவ்வொரு முறையும் மின்சார ரயில்கள் செல்லும் வழித்தடங்களில் பராமரிப்பு பணிகளையும் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால், இப்படி பராமரிப்புகளை மேற்கொள்ளும்போது, ரயில்கள் வசதி இல்லாமல் பயணிகள் அவதிக்கு ஆளாகிவிடுகிறார்கள்.. எனினும், ரயில் பராமரிப்பு குறித்து முன்கூட்டியே அறிவிப்புகளை வெளியிட்டு, பயணிகளை அலர்ட் செய்து வருகிறது தெற்கு ரயில்வே. அப்படித்தான் இன்றைய தினமும் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
பாதுகாப்பு காரணங்களுக்காக பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு செல்லும் புறநகர் ரயில்கள் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.. குறிப்பாக, சென்னை எழும்பூர் விழுப்புரம் பிரிவில், செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் நாளை 11 மணி முதல் 3 மணி வரை, சில ரயில்கள் பாதி வழியில் ரத்து செய்யப்படுகிறது.
சென்னை கடற்கரையிலிருந்து காலை 9.30, 10.56, 11.40 மதியம் 12.40 மணிக்கு செங்கல்பட்டிற்கு இயக்கப்படும் மின்சார ரயில் சிங்கபெருமாள்கோவில் வரை மட்டுமே இயக்கப்படும். அதேபோல், காலை 11.30, மதியம் 1, 1.45 மற்றும் 3.50 மணிக்கு செங்கல்பட்டிலிருந்து இயக்கப்படும் மின்சார ரயில் சிங்கப்பெருமாள்கோவிலிருந்து இயக்கப்படும். இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பு இதுதான்:
1 . வண்டி எண் 40523 - 9:30 மணி அளவில் சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரும் மின்சார ரயில் பாதி வழி நிறுத்தப்பட்டு சிங்கப்பெருமாள் கோவில் வரை மட்டும் வரும்.
2 . வண்டி எண் 40527- 10:56 மணி அளவில் சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரும் மின்சார ரயில் பாதி வழி நிறுத்தப்பட்டு சிங்கப்பெருமாள் கோவில் வரை மட்டும் வரும்.
3 . வண்டி எண் 40529- 11:40 மணி அளவில் சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரும் மின்சார ரயில் பாதி வழி நிறுத்தப்பட்டு சிங்கப்பெருமாள் கோவில் வரை மட்டும் வரும்.
4 . வண்டி எண் 40533- 12 : 40 மணி அளவில் சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரும் மின்சார ரயில் பாதி வழி நிறுத்தப்பட்டு சிங்கப்பெருமாள் கோவில் வரை மட்டும் வரும்.
5. வண்டி எண் 40532- 11:30 மணி அளவில் செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை வரை செல்லும் ரயில்கள் சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து புறப்படும்
6. வண்டி எண் 40536- 13 மணி அளவில் செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை வரை செல்லும் ரயில்கள் சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து புறப்படும்
7. வண்டி எண் 40538- 13:45 மணி அளவில் செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை வரை செல்லும் ரயில்கள் சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து புறப்படும்.
8. வண்டி எண் 40542 15 :05 மணி அளவில் செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை வரை செல்லும் ரயில்கள் சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து புறப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications