செங்கல்பட்டில் மாமனாருக்கு மருமகளுடன் கள்ளக்காதல்.. தெரிந்ததும் மகன் செய்த காரியம்.. ஆடிப்போன மக்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த நெல்வாய் பகுதியைச் சேர்ந்த சங்கருக்கு 55 வயது ஆகிறது. இவரது மகன் முருகன். இவர் தனது மனைவியுடன் திருக்கழுக்குன்றம் அடுத்த ஆணுர் பகுதியில் உள்ள செங்கல் சூளையில் பணியாற்றி வருகிறார். சங்கருக்கு தனது மருமகளுடன் கள்ளக்காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தெரிந்ததும் சங்கரின் மகன் முருகன் என்ன செய்தார் தெரியுமா? அவரது செயலால் உறவினர்கள் ஆடிப்போனார்கள்.

பொதுவாகவே மாமியார் மருமகன், மருமகள் மாமனார் கள்ளக்காதல் என்பது மிகவும் அபூர்வமாகவே நடக்கும். இந்த கேவலமான வேலைகளை ஒருசிலர் இன்னமும் செய்கிறார்கள். புத்தி தடுமாறிய இரண்டு பேர், தவறான மனநிலையுடன் இப்படி காதலிக்கிறார்கள். இவர்கள் காதலை இந்த உலகம் ஏற்பது இல்லை.. இதனால் இந்த காதல் பொதுவாக குற்றச்சம்பவங்களில் போய் முடிகிறது. பெரும்பாலும் உறவிலும், குடும்பத்திலும், சமூகத்திலும் சிக்கலையும், மனபிறழ்வையும் ஏற்படுத்துகிறது. பொதுமக்கள் யாராக இருந்தாலும் இந்த கள்ளக்காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.

Chengalpattu Father-in-law falls in love with daughter-in-law What did the son do when he found out

செங்கல்பட்டு மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த நெல்வாய் பகுதியைச் சேர்ந்த 55 வயதாகும் சங்கர் என்பவர் கூலி வேலை செய்து வந்தார். இவரது மகன் முருகன் செங்கல் சூளை தொழிலாளியாவார். முருகனுக்கு திருமணம் ஆகிவிட்டது. அவர் தனது மனைவியுடன் திருக்கழுக்குன்றம் அடுத்த ஆணுர் பகுதியில் உள்ள செங்கல் சூளையில் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் சங்கருக்கு தனது மருமகளுடன் கள்ளக்காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இருவரும் முருகன் இல்லாத நேரத்தில் காதலை வளர்த்து வந்தார்களாம். முருகனுக்கு ஒரு கட்டத்தில் கள்ளகாதல் விவகாரம் தெரியவந்தது. ஆத்திரம் அடைந்த முருகன் தனது தந்தை சங்கருடன் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டாராம்.

தகராறு முற்றிய நிலையில் செங்கல்லை எடுத்து முருகன் தனது தந்தை சங்கர் தலையில் சரமாரியாக தாக்கினாராம். இதில் படுகாயம் அடைந்த சங்கர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சங்கர் இறந்தது குறித்து தனது மாமனார் ரவியிடம் முருகன் கூறினாராம். உடனே சம்பவத்தை மறைக்க முருகனுக்கு அவரது மாமனார் ரவி உதவி செய்தாராம். இருவரும் சேர்ந்து மதுராந்தகம் அடுத்த புலிப்பரகோவில் பாலாற்று கரையில் சங்கர் உடலை புதைத்தார்.

அவரது தலை வெளியே தெரிந்ததால் இதுகுறித்து புலிப்பரகோவில் கிராம நிர்வாக அலுவலர் படாளம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். அதில் மருமகள் மீது கள்ளக்காதல் ஏற்பட்டதால் தந்தையை தொழிலாளி தீர்த்துக்கட்டியது விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சங்கர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த ரவியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+