Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'யார் பெத்த பிள்ளையோ'.. மீம் கிரியேட்டர்கள் பார்த்தா என்னாகுறது.. மிரள வைத்த செங்கல்பட்டு போலீஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அனைவரும் அறிய கூடிய பிறந்தநாள், திருமணநாள் போன்ற எண்களை ATM/UPI Pin - ஆக வைக்க வேண்டாம் என செங்கல்பட்டு மாவட்ட காவல்துறையினர் வெளியிட்ட மீம்ஸ் வேற லெவலில் உள்ளது.

பிளாக்ஹேட் ஹேக்கர்கள் எண்ணிக்கை உலகம் முழுவதும் அதிகமாகி வருகிறது. இவர்கள் யார் என்றால் Hacking-ஐ தொழிலாக செய்து பணத்தை சம்பாதிக்க கூடியவர்கள் ஆவர்.

அதாவது கார்டிங்,ஸ்பேமிங், ஃபிஷிங் மற்றும் வெப்சைட் ஹேக்கிங் மூலம் பணத்தினை சம்பாதிப்பது தான் முழு நேர தொழில். அதாவது தங்களின் Hacking திறமைகளை தவறாக பயன்படுத்தி மிரட்டி பணம் பறிப்பார்கள்.

Chengalpattu police release vadivel madavan meme for atm and UPI pin awareness

எப்படி பிளாக்ஹேட் ஹேக்கர்கள் ஹேக்கிங் செய்கிறார்கள்? பணம் எப்போது டிஜிட்டல் மயமானதோ அப்போதே திருட்டும் தொடங்கி விட்டது. மக்கள் பொதுவாக தங்கள் பெயர்களை பாஸ்வேர்டாக வைப்பார்கள். அல்லது தங்களது பிறந்த நாள் , தங்களுடைய குழந்தைகளின் பிறந்த நாள் , தங்களுடைய நெருக்கமானவர்களின் பிறந்தநாள், அல்லது கல்யாண நாள் போன்றவற்றை பாஸ்வேர்ட் ஆக வைக்கிறார்கள்.

கொஞ்சம் வசதியானவர்களாக இருந்தால்,. அவர்களின் கணக்கில் பல லட்சம் ரூபாய் இருப்பதை கண்டுபிடித்து ஹேக்கிங் செய்கிறார்கள். ஹேக்கிங் செய்யும் முன் அந்த குறிப்பிட்ட நபர்களின் facebook விவரங்களை கண்டுபிடித்து மகன் அல்லது மகளின் பெயர்கள், அவர்களின் பிறந்தநாள் அல்லது அவரது பிறந்த நாள் அல்லது அவருடைய மனைவியின் பிறந்த நாள் போன்றவற்றை கண்டுபிடித்து விடுகிறார்கள்.

பின்னர் சரியாக குறி வைத்து , அவருடைய ஆதார் எண் பான் கார்டு போன்றவற்றையும் கண்டுபிடித்து விடுகிறார்கள். இறுதியாக பிறந்தநாள் அல்லது கல்யாண நாள் போன்றவற்றை பாஸ்வேர்டாக வைத்திருப்பதால் ஹேக்கர்கள் வேலை எளிதாக முடிந்துவிடுகிறது.

இப்போதெல்லாம் ஹேக்கர்கள் மிகவும் உஷாராக உள்ளனர். பரிசு விழுந்திருப்பதாகவும், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் அமேசான் பிளிப்கார்ட் போன்ற ஆப் போன்றவற்றில் வந்திருப்பதாகவும் மெசேஜ்களை அனுப்பி அதில் லிங்கும் அனுப்புகிறார்கள். இதே போல் ஏராளமான வகைகளில் தினமும் போர்ஜரி லிங்குகள் எல்லோருக்கும் வந்து கொண்டே தான் இருக்கிறது.

தப்பி தவறி தெரியாமல் அந்த லிங்குகளை கிளிக் செய்து விட்டால், அதன் மூலம் நமது செல்போனை ஹேக் செய்து , பணத்தை எளிதாக திருடி விடுகிறார்கள். otp போன்றவற்றையும் எளிதாக திருட முடிகிறது திருடர்களால்.. எனவே இப்போது உள்ள சூழலில் டிஜிட்டல் திருடர்கள் ஆன பிளாக்ஹேடா கேக்கர்களிடம் இருந்து தப்பிப்பதற்கு விழிப்புணர்வு மிகவும் அவசியமாகும்.

எனவே தமிழகம் முழுவதும் காவல்துறையினர் இந்த டிஜிட்டல் திருடர்கள் குறித்து அவ்வப்போது மீம்ஸ் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். அப்படி விழிப்புணர்வு மீம்ஸ் ஒன்றை செங்கல்பட்டு காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

Chengalpattu police release vadivel madavan meme for atm and UPI pin awareness

இரண்டு படத்தில் நடிகர்கள் வடிவேலு, மாதவன் ஆகியோர் ஆட்டோ டிரைவராக வருபவரிடம் ஏமாற்றி பணத்தை பறிப்பார்கள். இறுதியில் ஆட்டோ ஸ்பேர் பார்ட்ஸ் முதற்கொண்டு பறித்து அவரை அனுப்பி வைப்பார்கள். அதை தங்களது மீம் டெம்ப்லெட்டில் பயன்படுத்தியுள்ளனர் செங்கல்பட்டு காவல்துறையினர். அந்த கேலி சித்திரத்தில் தான் அனைவரும் அறிய கூடிய பிறந்தநாள், திருமணநாள் போன்ற எண்களை ATM/UPI Pin - ஆக வைக்க வேண்டாம் என செங்கல்பட்டு மாவட்ட காவல்துறையினர் வலியுறுத்துள்ளனர்.

இணைய வழி மோசடி குற்றங்களுக்கு 1930 என்ற தொலைபேசி எண்ணை 24 மணி நேரமும் அழைக்கலாம் என்று சைபர் கிரைம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மக்களே ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றிக் கொண்டே தான் இருப்பார்கள். ஏமாற்றுவதற்கு விதவிதமாக யோசிப்பார்கள். நாம்தான் கவனமாக இருக்க வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+