செங்கல்பட்டு டூ உளுந்தூர்பேட்டை .. சென்னைவாசிகள் முடங்கும் ஐந்து இடங்கள்.. வேல்முருகன் கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: செங்கல்பட்டு படாளம் முதல் உளுந்தூர்பேட்டை செங்குறிச்சி வரையிலான 151 கிலோ மீட்டரில் திண்டிவனம், விக்கிரவாண்டி, படாளம், அரசூர் உள்ளிட்ட 5 இடங்களில் மேம்பாலப்பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்றுவருகிறது. இதனால் 151 கிலோ மீட்டர்தூரத்திற்கு கடும்போக்குவரத்து நெரிசல் சாதாரண நாட்களிலேயே ஏற்படுகிறது. தொடர் விடுமுறை நாட்களில் குறிப்பாக தேர்தலுக்கு வாக்களிக்க வந்து செல்லும்போது போக்குவரத்து நெரிசல் 5 மடங்காக அதிகரிக்கிறது. இதனை தவிர்க்க மேம்பாலப்பணிகளை விரைந்து முடிக்கவேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில், "இந்தியாவின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்கை நெடுஞ்சாலைகள் வகிக்கின்றன. ஸ்ரீநகர் தொடங்கி கன்னியாகுமரிவரை தற்போது நூற்றுக்கணக்கான நெடுஞ்சாலைகள் செயல்பாட்டில் உள்ளன. இவற்றை தனியார் நிறுவனங்கள் பராமரித்து வருகிறது.

Chengalpattu to Ulundurpet Velmurugan highlights five locations where Chennai residents get stuck

சுங்கச்சாவடிகளே தேவையில்லை என்பது நம் கொள்கையாக இருந்தாலும், அக்கொள்கையை விரைவில் நாம் செயல்பாட்டுக்கு கொண்டுவருவோம்.

சென்னை முதல் கன்னியாகுமரிவரை சுமார் 710 கிலோ மீட்டருக்கு செல்லும் என் எச் 44 தேசிய நெடுஞ்சாலை உட்பட தமிழ்நாட்டில் மொத்தம் 4,974 கிலோ மீட்டர் நீளத்திற்கு தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. இவற்றில் 2,724 கி.மீ நீள சாலைகள் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், மீதமுள்ள 2,250 கி.மீ. நீள சாலைகள் பராமரிப்புக்காக தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கின்றன.

தற்போது நாடு முழுவதும் தேசியநெடுஞ்சாலைகளில் உள்ள 1,228 சுங்கச்சாவடிகளில் தமிழ்நாட்டில் மட்டும் 78 சுங்கச்சாவடிகள் நெடுஞ்சாலைத்துறையின் கீழ் செயல்படுகின்றன.இது ஆண்டுதோறும் அதிகரிக்கப்பட்டுவருகிறது. ஒவ்வொரு ஆண்டும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படும்.

சுங்கக் கட்டணத்தின் ஒருபகுதியை சாலை பராமரிப்பிற்கும் நெடுஞ்சாலையில் பயணிக்கும் பயணிகளின் வசதிக்கும் பயன்படுத்தப்படுகிறது.ஆனாலும் சாலையோரம் குவிந்துள்ள மணல் மேடுகள் அகற்றப்படுவதில்லை. மேலும் சாலையில் அமைக்கப்பட்ட பேட்ச் ஒர்க் முறையாக செய்யப்படாததால், பயணிகளுக்கு முதுகுவலி உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படுகிறது. ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் உள்ள கழிவறைகள் முறையாக பராமரிக்காததால், உள்ளூர் பேருந்து நிலைய கழிவறையை விட சுகாதாரத்தில் மோசமாகவே உள்ளது.

இதற்கிடையே செங்கல்பட்டு படாளம் முதல் உளுந்தூர்பேட்டை செங்குறிச்சி வரையிலான 151 கிலோ மீட்டரில் திண்டிவனம், விக்கிரவாண்டி, படாளம், அரசூர் உள்ளிட்ட 5 இடங்களில் மேம்பாலப்பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்றுவருகிறது. இதனால் 151 கிலோ மீட்டர்தூரத்திற்கு கடும்போக்குவரத்து நெரிசல் சாதாரண நாட்களிலேயே ஏற்படுகிறது. தொடர் விடுமுறை நாட்களில் குறிப்பாக தேர்தலுக்கு வாக்களிக்க வந்து, செல்லும்போது போக்குவரத்து நெரிசல் 5 மடங்காக அதிகரிக்கிறது. இதனை தவிர்க்க மேம்பாலப்பணிகளை விரைந்து முடிக்கவேண்டும்.

மேலும் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு விழுப்புரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையையொட்டி மேம்பாலம் அமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நிதி ஒதுக்கீடு செய்தும், இன்னமும், மாவட்ட நிர்வாகம் நிலம் கையகப்படுத்தி கொடுக்காததால் அப்பணி தொடங்கப்படாமல் உள்ளது. உடனடியாக அதற்கான பணிகளை விரைந்து மேற்கொள்ளவேண்டும் என வலியுறுத்துகிறேன்" இவ்வாறு வேல்முருகன் அறிக்கையில் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+