ஆதார் கார்டை அரசு மருத்துவமனையில் ஆதாரமாக தந்து பிரசவம்.. திருமணம் செய்த 14 வயது சிறுமி! சென்னை பரபர
சென்னை: 14 வயது சிறுமியை திருமணம் செய்த கணவர், காதலன் இருவரையும் போலீசார் போக்சோவில் கைது செய்துள்ளனர்.. தற்போது 16 வயதான சிறுமிக்கு ஒரு குழந்தையும் உள்ள நிலையில், இது தொடர்பான விசாரணையையும் போலீசார் நடத்தி வருகிறார்கள்.
சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் தீபா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 34 வயதாகிறது.. இவர் மீன் வியாபாரம் செய்து வருகிறார்.. இவரது 16 வயது மகள், பாரிமுனையில் உள்ள துணிக்கடையில் வேலை செய்து வருகிறார்.

தன்னுடைய 14 வயதிலேயே, அதாவது 2 வருடங்களுக்கு முன்பே, பிரகாஷ் என்பவரை காதலித்து இந்த பெண் திருமணம் செய்து கொண்டார்.. இப்போது இந்த பெண்ணுக்கு ஒரு வயதில், ஒரு பெண் குழந்தையும் உள்ளது. ஆனால், கணவருடன் சண்டை போட்டுக் கொண்டு, அவரை விட்டு 6 மாதமாக பிரிந்து, தன்னுடைய அம்மா உடனேயே வசித்து வருகிறார்.
காதலன்: இந்த நேரத்தில் சதீஷ்குமார் என்ற இன்னொரு இளைஞருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டது.. பிறகு அந்த இளைஞருடனேயே வீட்டைவிட்டும் ஓடிப்போய்விட்டார்.. இதனால் பதறிப்போன தீபா, தன்னுடைய மகளை காணவில்லை என்று கடந்த 3ம் தேதி போலீசில் புகார் தந்தார்.. இதையடுத்து, போலீசாரும் வழக்கு பதிவு செய்து, மாயமான சிறுமியை தேட துவங்கினார்கள்.
அப்போதுதான், திருவாலங்காடு பகுதியில் சிறுமி, தன்னுடைய காதலனுடன் தங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, விரைந்து சென்ற போலீசார், சிறுமியையும், அவரது காதலன் சதீஷ்குமாரையும் பிடித்து, போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரணையை துவங்கினர்.. காதலன் சதீஷ்குமாருக்கு டேனி என்ற இன்னொரு பெயர் உள்ளதாம். இவருக்கு 19 வயதாகிறது.
ஆதார் கார்டு: முதல் திருமணம் முடிந்து கர்ப்பமாக இருந்தபோது, மருத்துவமனைக்கு செக்கப் செல்ல வேண்டியிருந்ததாம். அப்போது தன்னுடைய 14 வயதை மறைப்பதற்காக மருத்துவமனையில் போலியான வேறு ஒரு நபரின் ஆதார் கார்டை தந்திருக்கிறார்..
இந்த ஆதார் கார்டை வைத்தே, குழந்தையை பெற்றுக் கொண்டு மருத்துவமனையை விட்டு வெளியேறியது தெரியவந்துள்ளது. இதற்கு பிறகே, சதீஷ்குமாருடன் நெருக்கம் ஏற்பட்டதாம். அவருடன் ஓடிப்போனதாக போலீசில் சொல்லி உள்ளார்..
போக்சோ: இதனையடுத்து சிறுமியை விட்டு பிரிந்து வாழும் முதல் கணவர் பிரகாஷ், இப்போது சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்ற சதீஷ்குமார், ஆகிய 2 பேர் மீதும் போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது.. அத்துடன் 2 வருடத்துக்கு முன்பு 14 வயது சிறுமிக்கு, பெரியோர் முன்னிலையில் திருமணம் நடைபெற்றதா? அல்லது காதல் திருமணமா? இதில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்தும் புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.
-
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்! -
சென்னையில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து.. தாம்பரம் அருகே பரபரப்பு -
நள்ளிரவு ‘பவர் கட்’.. சென்னையில் தொடர் மின்தடைக்கு பின்னணியில் இருக்கும் 3 ‘ஷாக்’ காரணங்கள்! -
1 BHK வீடு கட்டும் செலவில் கட்டிமுடிக்கப்பட்ட எழும்பூர் ரயில் நிலையம்.. இப்போ புத்தம் புதுசா மாறப்போகுது! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
4 மணி நேர மின்வெட்டு.. சென்னை ஆவடியில் கொந்தளித்த மக்கள்! சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications