திருமண வீட்டுக்கு போன பெற்றோர்! சென்னை ஜவுளி கடை அதிபருக்கு வந்த விபரீத ஆசை.. ஆப் நண்பர் வைத்த ஆப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் ஆபாச செயலி மூலம் அறிமுகமான நபரை வீட்டுக்கு அழைத்து உல்லாசத்தில் ஈடுபட்ட ஜவுளிக்கடைக்காரருக்கு வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம் அரங்கேறியுள்ளது. இது தொடர்பாக சிறுமி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை எம் கே பி நகரை சேர்ந்த ஜவுளிக்கடைக்காரருக்கு ஆபாச செயலி பார்க்கும் பழக்கம் இருந்த நிலையில், அதில் அறிமுகமான நபரை வீட்டுக்கு வரவழைத்து தகாத உறவில் ஈடுபட்டுள்ளார். இது தான் வாய்ப்பு என்று நினைத்த அந்த நபர், ஜவுளிக்கடைக்காரகை பாத்ரூமில் கட்டுப்போட்டுவிட்டு, வீட்டில் இருந்து 30 பவுன் தங்க நகைகள் மற்றும் 2 கிலோ வெள்ளி நகைகளை திருடிச்சென்றுள்ளார். இந்த சம்பவம் குறித்து முழு விவரம் வருமாறு:-

chennai-3-arrested-for-robbing-textile-shop-owner-using-dating-app

வீட்டில் தனியாக இருந்தார்

சென்னை எம்கேபி நகரை சேர்ந்தவர் ஹித்தேஷ் (வயது 26). பெற்றோருடன் வசித்து வருகிறார். சொந்தமாக ஜவுளிக்கடை ஒன்றும் நடத்தி வருகிறார். கடந்த 14 ஆம் தேதி அன்று இவரது பெற்றோர் பெங்களூரில் உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சிக்காக சென்றுவிட்டனர். இதனால் வீட்டில் ஹித்தேஷ் மட்டும் தனியாக இருந்துள்ளார்.

அப்போது சிலர் ஹித்தேசை பாத்ரூமுக்குள் வைத்து பூட்டிவிட்டு 30 பவுன் தங்க நகை மற்றும் 2 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்துவிட்டு சென்றனர். இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல் தெரியவந்தன. ஹித்தேசுக்கு ஆபாச செயலி பார்க்கும் பழக்கம் இருந்துள்ளது. இரவு தூங்குவதற்கு முன்பு இந்த செயலியை பார்த்து வந்துள்ளார். இப்படி பார்க்கும் போது அந்த செயலி மூலம் ஹித்தேசுக்கு ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

தகாத உறவு

அந்த நபரிடம் பேசி இரண்டு முறை வீட்டுக்கு வர வைத்து தகாத உறவில் இருந்துள்ளார். அப்படித்தான் பெற்றோர் வீட்டில் இல்லாத சம்பவத்தன்றும் அந்த நபரை வீட்டுக்கு அழைத்து தகாத உறவில் ஈடுபட்டுள்ளார். பின்னர் மீண்டும் ஒருமுறை அழைத்தபோது, அந்த நபர் இன்னொரு சிறுமி மற்றும் நண்பர் ஒருவருடன் ஹித்தேஷ் வீட்டுக்கு வந்துள்ளனர். பின்னர் அவர்கள் 3 பேரும் சேர்ந்து ஹித்தேசை கத்திமுனையில் மிரட்டி கட்டிப்போட்டு நகைகளை கொள்ளையடித்து தப்பி சென்றிருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் 3 பேரது அடையாளமும் தெரிந்தது. அதன்படி, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட வியாசர்பாடியை சேர்ந்த ஜெயந்திநாதன் (34), அம்பத்தூரை சேர்ந்த அய்யப்பன் (34) மற்றும் 17 வயது சிறுமி ஆகியோரை கைது செய்தனர். ஜெயந்திநாதனுக்கு உதவியதாக அவரது மனைவியும் கைதானார். ஜெயந்திநாதன் மீது 10 க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது.

நகைகள் இருப்பதை நோட்டமிட்ட நபர்

ஜெயந்திநாதன் போலீசாரிடம் என்ன நடந்தது என்பதை வாக்குமூலமாக கூறினார். அவர் கூறியதாவது:- "எனது சொந்த ஊர் தாம்பரம். பல்வேறு இடங்களில் கொள்ளை அடித்து இருக்கிறேன். எனக்கு ஆபாச செயலி பார்க்கும் பழக்கம் இருந்தது. இதில் எனக்கு ஹித்தேஷ் அறிமுகமானார். அவரை இரண்டு முறை அவரது வீட்டில் வைத்து சந்தித்தேன். அப்போது அவரது வீட்டில் நிறைய நகைகள் இருப்பதை பார்த்து வைத்தேன்.

அடுத்த முறை வரும்போது நகைகளை எப்படியாவது கொள்ளையடிக்க வேண்டும் என்று நினைத்தேன். அதன்படி தான் கடந்த 14 ஆம், தேதி அன்றும் அவர் என்னை வீட்டுக்கு வாங்க என்று கூப்பிட்டார். அப்போது நான் எனது நண்பர் மற்றும் அவரது தோழியான 17 வயது சிறுமியை அழைத்து வீட்டுக்கு சென்றேன். பின்னர் ஹித்தேசிடம் தகாத உறவில் ஈடுபட்டேன். அவர் உல்லாசத்தின் உச்சத்தில் இருக்கும் போது நைசாக அவரது கை கால்களை கட்டி பாத்ரூமுக்குள் அடைத்து வைத்து விட்டோம். பின்னர் நகைகளை கொள்ளையடித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றோம்" என்று கூறினார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+