சென்னை பிரபல கல்லூரி மாணவர்கள்.. புதுச்சேரியில் அழகிளுடன் இருக்க ஆசைப்பட்டு.. இப்ப புழல் சிறையில்!
சென்னை: சென்னையில் செயல்படும் பிரபல பொறியியல் கல்லூரியில் படிக்கும் தினேஷ்குமார், அப்சர் அலி, வசந்தகுமார் ஆகிய 3 மாணவர்கள் கடந்த சனிக்கிழமை அன்று புதுச்சேரிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். சுற்றுலாவை அழகிகளுடன் கொண்டாட அவர்கள் திட்டமிட்டிருந்தனர். இதற்காக 'ஆன்லைன்' மூலம் ஒன்றரை லட்சம் பணம் தந்துள்ளனர். ஆனால் விபச்சார புரோக்கர் அவர்களை ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இதனால் கோபம் அடைந்த மாணவர்கள், அடுத்து செய்த வேலையால் தற்போது புழல் சிறையில் இருக்கிறார்கள்.
சென்னையில் போலீசார் விபச்சாரத்திற்கு எதிராக என்ன தான் கடுமையாக நடவடிக்கை எடுத்தாலும், விபச்சாரம் செய்வோரும், விபச்சார புரோக்கர்களும் புதிது புதிதான முறைகளில் ஈடுபடுகிறார்கள். ஒரு இடத்தில் கைது செய்யப்பட்ட பெண்கள், காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். அவர்கள் சில நாளில் சொந்த ஊரில் சென்றுவிட்டு, மீண்டும் வேறு ஊரில் அல்லது வேறு இடத்தில் இருந்து விபச்சாரத்தில் ஈடுபடுவது நடக்கிறது.

விபச்சார புரோக்கர்களுமே ஜாமீனில் வெளியே வந்து வழக்கம் போல், வேறு பகுதிகளில் தங்கள் வேலைகளை செய்கிறார்கள். அது சென்னையில் மட்டுமல்ல பல பகுதிகளிலும் இதுதான் நிலைமையாக உள்ளது. அதேநேரம் மசாஜ் சென்டர்கள், அடுக்குமாடி வீடுகள், ஓட்டல்களில் அடிக்கடி விபச்சார தடுப்பு போலீசார் ரெய்டு நடத்துவதை வழக்கமாக வைத்துள்ளனர். அப்படி ரெய்டில் சிக்கும் புரோக்கர்களை கைதும் செய்கிறார்கள். இந்நிலையில் ஆன்லைன் விபச்சாரத்திலும் சில கும்பல்கள் ஈடுபடதொடங்கியுள்ளன.
சென்னையில் செயல்படும் பிரபல பொறியியல் கல்லூரியில் படிக்கும் தினேஷ்குமார், அப்சர் அலி, வசந்தகுமார் ஆகிய 3 மாணவர்கள் கடந்த சனிக்கிழமை அன்று புதுச்சேரிக்கு உல்லாச சுற்றுலா சென்றுள்ளார்கள். உல்லாச சுற்றுலாவை அழகிகளுடன் கொண்டாட அவர்கள் திட்டமிட்டிருந்தார்கள். இதற்காக 'ஆன்லைன்' மூலம் ஒன்றரை லட்சம் லட்சம் பணம் அனுப்பி 4 விபசார அழகிகளை அனுப்புமாறு முன்பதிவு செய்திருந்தார்களாம்.
ஆனால் 'ஆன்லைன்' மூலம் பணத்தை பெற்றுக் கொண்ட விபசார தரகர் அழகிகளை அனுப்பி வைக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் அழகிகள் வேண்டும் அல்லது பணத்தை திருப்பி தர வேண்டும் என்று கல்லூரி மாணவர்கள் 3 பேரும் கோபத்துடன் வந்து எழும்பூரில் வசிக்கும் விபசார தரகரிடம் தகராறில் ஈடுபட்டார்களாம். அப்போது கோபத்தில் மாணவர்கள் 3 பேரும் தரகரை அடித்து- உதைத்து காரில் கடத்தி சென்றுவிட்டதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக எழும்பூர் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் தலைமையிலான தனிப்படை போலீசார் அதிரடியாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். கடத்தியதாக புகார் கூறப்பட்ட தரகர் மீட்கப்பட்டார். மாணவர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டார்கள்.
-
சென்னையில் மாறிய ரூல்ஸ். அடுக்குமாடி வீடுகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்களுக்கு மாநகராட்சி அதிரடி -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications