Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆமா.. சென்னையின் வயது 382 மட்டும் தானா?... ஒரு அலசல்

சென்னையின் சிறப்புகளை இளைய தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை டே இன்றைய தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.. சென்னையின் சிறப்புகளை நம் மக்கள் பொதுவெளியில் பகிர்ந்து வருவது மேலும் மகிழ்வை கூட்டி வருகிறது.

Recommended Video

    Chennai என்றாலே பிடிக்கும் | மக்களின் காதலன் சென்னை | Chennai day special | Oneindia Tamil

    ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 22ம் தேதி மெட்ராஸ் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.சென்னையை பொறுத்தவரை இந்தியாவின் நான்காவது பெரிய நகரம்.. இந்தியாவின் பிரதான கலாச்சார நகரங்களில் ஒன்று... தென் இந்தியாவின் நுழைவாயில் என்ற சிறப்பை பெற்றது.

    சினிமா, அரசியல், தொழில், வணிகம், என பன்முகத்தின் திடமையமாக சென்னை திகழ்கிறது.. சென்னைக்கு என்று பிரத்யேகமான தொழில், அமைப்புகள் எதுவும் இல்லை.. பலவித மொழிகள், பலவித மாநில மக்கள், பலவித கலாச்சாரங்கள், பலவித தொழில்கள் சார்ந்த மண்ணாக சென்னை விளங்கி கொண்டிருக்கிறது.

    சிறப்புகள்

    சிறப்புகள்

    தற்போது சென்னை டே கொண்டாடப்பட்டு வருகிறது.. பலரும் சென்னையின் சிறப்புகளை பட்டியலிட்டு, பாராட்டி வருகின்றனர்.. இப்படிப்பட்ட சூழலில் உண்மையிலேயே சென்னையின் வயது என்ன என்ற சந்தேகம் என்ற நமக்கு இயல்பாகவே எழுகிறது.

     பழமையான வரலாறு

    பழமையான வரலாறு

    ஏனெனில் சென்னை 2000 ஆண்டுகளுக்கும் அதிகமான பழமையான வரலாறு கொண்டது என்கிறார்கள்.. இதே சென்னையில் இருக்கும் எழும்பூர், மயிலாப்பூர், சாந்தோம், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு, தாம்பரம், பல்லாவரம், திருவான்மியூர், நங்கநல்லூர், ஆதம்பாக்கம் இப்படிப்பட்ட பகுதிகள் எல்லாம் அன்றைய காலங்களில் தனித்தனி பெயர்களில் இல்லாமல், மொத்தமாக சேர்த்து புலியூர்க்கோட்டம் என்றே அழைத்துள்ளனர். 2000 வருடங்களுக்கு முன்பே குரும்பர்களால் இங்கு ஆட்சி செய்ததாக வரலாற்று சான்றுகளும் உள்ளதாக தெரிகிறது.

     சென்னை

    சென்னை

    இந்த குரும்பரர்களுக்கு பிறகுதான், சோழர்கள், பல்லவர்கள் என்று பலரும் ஆட்சி செய்து, கடைசியில் அது ஆங்கிலேயரின் கைக்கு சென்றுவிட்டது என்கிறார்கள்.. அப்படியானால் சென்னையின் வயது என்ன? இப்போதுள்ள வயதை எதன் அடிப்படையில் கணித்துள்ளனர் என்ற சந்தேகமும் எழுகிறது.

     டச்சுக்காரர்கள்

    டச்சுக்காரர்கள்

    9-ம் நூற்றாண்டிற்கும் முந்தைய காலக்கட்டத்திலேயே மதராஸபட்டணத்தின் பெயர் 14-ம் நூற்றாண்டு கல்வெட்டு ஒன்றில் இருக்கிறதாம்.. சென்னையில் உள்ள கட்டிடங்களை எடுத்து கொண்டால், டச்சுக்காரர்கள் கட்டப்பட்டவையாக உள்ளன.. பிறகு ஆங்கிலேயர் கட்டி உள்ளனர்.. வெறும் 500 ஆண்டுகள்தான் இந்த வரலாறு சுட்டிக்காட்டுகிறது.. அப்படியானால், 2 ஆயிரம் வருட பழமை என்று சொல்வதற்கான தடயங்கள், ஆதாரங்கள், எங்கே போயின? இயற்கை சீற்றத்தில் அவ்வளவும் அழிந்திருக்குமா? அழிக்கப்பட்டிருக்குமா?

    கோயில்கள்

    கோயில்கள்

    சென்னை கபாலீசுவரர் கோவில் பல்லவ மன்னர்களால் கட்டப்பட்டதாக சொல்கிறார்கள்.. இப்போதுள்ள கட்டுமானமோ, விஜயநகர அரசர்களால் 10-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.. பார்த்தசாரதி கோவில் 8-ம் நூற்றாண்டில் கட்டி உள்ளனர்.. ஜார்ஜ் டவுனில் கடற்கரைக்கு பக்கத்தில் 1640-ம் வருடம் காளிகாம்பாள் கோவில் கட்ட துவங்கப்பட்டு அது 1678-ல் தற்போதுள்ள இடத்துக்கு மாற்றப்பட்டு கட்டி முடிக்கப்பட்டதாம். செயின்ட் மேரி சர்ச் 1680ல் கட்டப்பட்டுள்ளது.. அர்மீனியன் சர்ச் 1712-ல் அர்மீனியர்களால் கட்டப்பட்டது.

     வருடங்கள்

    வருடங்கள்

    பழமையான கோயில்களான திருவொற்றியூர், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில், மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில், திருமுல்லைவாயில் உள்ளிட்ட கோயில்கள் பாடல் பெற்ற தலங்கள், அதாவது, ஆயிரம் வருடங்களுக்கு மேற்பட்ட பழைய கோயில்களைக் கொண்டுள்ளது என்பதால், இந்த நகரம் பல்லாயிரம் ஆண்டுகள் முன்னதாகவே சிறப்பான, புகழ்பெற்ற நகரமாக இருந்துள்ளது என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.

     தடங்கள்

    தடங்கள்

    அதேசமயம், இப்படிப்பட்ட பழமைகளின் அடையாளங்கள் காணப்படாமல் அதற்கான தடங்கள் அழிக்கப்பட்டும் வருவதை நம்மால் ஏற்க முடியாது.. சென்னை என்றால் இப்போதுவரை சென்ட்ரல் ஸ்டேஷனைதான் சினிமாவில் காட்டி கொண்டிருக்கிறார்கள்.. நல்லவேளை, எல்ஐசி பில்டிங்கை இன்னமும் காட்டிக் கொண்டிருப்பதில்லை.

     கறுப்பர் நகரம்

    கறுப்பர் நகரம்

    ஸ்பென்சர் பிளாசா, ஜெமினி பாலம், கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட், கலர் கலர் ஷாப்பில் மால்கள் என்ற மார்டன் அடையாளங்களை முன்னிறுத்தும் போக்கு தலைதூக்கி உள்ளது.. இதே சென்னையில்தான் வடசென்னை என்ற இருள் பகுதியும் வெளிச்சமின்றி ஒளிந்து கிடக்கிறது.. அந்த கறுப்பர் நகரத்தை பற்றியோ, மேற்கில் இருக்கும் பூந்தமல்லி பற்றியோ ஒருத்தரும் பேசுவது இல்லை.. அதை ஆவணப்படுத்துவதும் இல்லை என்பது வருத்தத்திற்குரிய நிகழ்வு.

     தண்ணீர் வளம்

    தண்ணீர் வளம்

    இன்றைக்கு கூவம் என்று மூக்கை மூடிக்கொண்டு சொல்கிறார்களே, இதே கூவம் என்ற அடையாறு பக்கிங்காம் நீர்நிலைதான், சென்னையை அன்று வளமான பகுதியாக வைத்திருக்கிறது.. இந்த தண்ணீரைதான் நம் முன்னோர்கள் குடித்து வந்துள்ளனர்.. இதில் படகு போக்குவரத்தே நடந்துள்ளது. இவை எல்லாமே இன்று இருட்டடிப்பு செய்யப்பட்டுவிட்டதை மறுக்க முடியாது.. சென்னை டே என்ற கொண்டாட்டத்தில், பழமையின் சிறப்புகளை மட்டுமே சொல்லாமல், மண்ணோடு மண்ணாக மக்கி போய்விட்ட அந்த பழமைகளையும் மீட்டுருவாக்கம் செய்யும் நடவடிக்கையில் இனியாவது களமிறங்க வேண்டிய பொதுநல அக்கறை நமக்கு ஏற்பட்டுள்ளது.

     ஆய்வாளர்கள்

    ஆய்வாளர்கள்

    மற்றொரு பக்கம் சென்னைக்கு எத்தனை வயது நிஜமாகவே நமக்கு தெரியவில்லை.. ஆனால், 2 ஆயிரம் வருடங்கள் என்ற வரலாற்று ஆய்வாளர்களின் பேச்சையும் சாதாரணமாக எடுத்து கொண்டு நாம் கடந்துவிட முடியாது.. இதை எளிமையாக ஒரு வழியில் கண்டறியலாம்... நம்முடைய திருவள்ளுவர் 2 ஆயிரம் வருஷத்துக்கு முன்பு வாழ்ந்தார்.. அதுவும் மயிலாப்பூரில்.. கிமு முதல் நூற்றாண்டில், மயிலாப்பூரில் வாழ்ந்து வந்தார் என்று தமிழக அரசே அறிவித்துள்ளது.. அப்படியானால் சென்னையின் வயது என்ன?

     வரலாறுகள்

    வரலாறுகள்

    ஒருவேளை நம் தமிழர்களின் வரலாறுகள் மறைக்கப்பட்டதா? மறக்கடிக்கப்பட்டதா? மாற்றியமைக்கப்பட்டதா? திரிக்கப்பட்டதா? திணிக்கப்பட்டதா? இது எதுவுமே தெரியவில்லை. எனவே, சென்னை நகரத்தின் பழமையை கொண்டாடும் நேரத்தில், அதன் உண்மையான வரலாற்றை அறிய மேலும் முயற்சிகள் செய்யப்பட வேண்டும், அந்த பழமைகளை போற்றும் நடவடிக்கையை கையில் எடுக்க வேண்டும்.. எக்காரணம் கொண்டும், ஆங்கிலேயருக்கு முந்தைய காலத்தில் நம் தமிழர்கள் இந்த நகரத்தில் செழிப்புடன் வாழ்ந்த வரலாற்றையும் நாம் மறந்துவிடக் கூடாது..

     தரவுகள்

    தரவுகள்


    அத்துடன், சென்னையின் வயது குறித்த உண்மை தரவுகளை ஆராய்ந்து, தமிழர்களின் மாண்பையும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு செல்லும் நிர்ப்பந்தத்தில் நாம் உள்ளோம்.. ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம், தமிழர்களின் வரலாற்றை மாற்றியமைக்கும் உரிமை யாருக்குமே கிடையாது.. அப்படி ஒருவேளை மாற்றியமைக்கப்பட்டிருந்தால், அதை ஒருக்காலும் மன்னிக்கவும் முடியாது..!

    எனினும், ஆயிரம் கனவுகளுடன் கால் வைக்கும் ஒவ்வொரு சாமான்யனையும், சலிக்காமலும், விழுந்துவிடாமலும், தாங்கி இறுக்கி பிடிக்கும், நம் நேசமிகு நம் சென்னைக்கு பாசமிகு வாழ்த்துக்கள்..!

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+