"வெல்கம் டூ நம்ம ஊரு சென்னை!" 44ஆவது செஸ் ஒலிம்பியாட்.. கலக்கலான தீம் பாடல் வெளியீடு!
சென்னை: 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான வரவேற்பு பாடல் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது.
44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இந்தியாவில் நடைபெறுவது இதுவே முதல்முறையாகும்.
இந்த செஸ் ஒலிம்பியாட் தொடரில் 187 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் அதிகமான வீரர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

செஸ் ஒலிம்பியாட்
செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வரும் 28ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளைச் சென்னை மாமல்லபுரத்தில் தமிழ்நாடு அரசு தீவிரமாகச் செய்து வருகிறது. ஏற்பாடுகள் அனைத்தும் இறுதிக்கட்டத்தில் உள்ளது. இதற்கான தொடக்க விழா சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள உள்ளார்.

தீம் பாடல் வெளியீடு
இந்த செஸ் செஸ் ஒலிம்பியாட் போட்டியை விளம்பரப்படுத்தும் வகையில், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான வரவேற்பு பாடல் இப்போது வெளியிடப்பட்டு உள்ளது. விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ட்விட்டர் பக்கத்தில் செஸ் ஒலிம்பியாட் பாடலை வெளியிட்டனர்.

முதல்வர் ஸ்டாலின்
வெல்கம் டூ நம்ம ஊரு சென்னை என்று தொடங்கும் இந்த தீம் பாடலில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை விளம்பரப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டு உள்ளது. முதல்வர் ஸ்டாலின் மற்றும் ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் இந்தப் பாடலில் இடம் பெற்று உள்ளனர். முன்னதாக இந்த தீம் பாடலின் டீசல் கடந்த வாரம் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

பேருந்துகள் இலவசம்
செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வரும் 28 முதல் நடைபெற உள்ள நிலையில், சென்னையில் இருந்து மாமல்லபுரத்துக்கு இலவச பேருந்துகள் இயக்கப்படும் எனத் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் இயக்குவதாக அறிவித்துள்ளது. இந்த இலவச பேருந்து சேவை வரும் 25ம் தேதி முதல் ஒருமணி நேரத்துக்கு ஒரு பேருந்து சென்னை முதல் மாமல்லபுரம் வரை இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை வாய்ப்பை பெற்றது எப்படி
செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இந்தியாவில் நடைபெறுவது இதுவே முதல்முறையாகும். இந்தப் போட்டிகள் முதலில் ரஷ்யாவில் தான் நடைபெற இருந்தது. இருப்பினும், உக்ரைன் போர் காரணமாக ரஷ்யாவில் நடைபெற இருந்த பல சர்வதேச போட்டிகள் ரத்து செய்யப்பட்டதைப் போலவே செஸ் ஒலிம்பியாட் போட்டிகளும் ரத்து செய்யப்பட்டது. அப்போது தான் இந்த வாய்ப்பை சென்னை பெற்றது.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications