சென்னையில் பயங்கரம்.. வியாசர்பாடியில் ஒரே குடும்பத்தினர் ஏழு பேருக்கு அரிவாள் வெட்டு.. ஒருவர் பலி
சென்னை: சென்னை வியாசர்பாடி உதயசூரியன் நகரில் நேற்று இரவு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரை 4 பேர் கும்பல் சரமாரியாக வெட்டிவிட் தப்பியது. இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். மற்றவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
Recommended Video
சென்னை வியாசர்பாடி உதயசூரியன் நகரில் உள்ள குடிசைமாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் ராஜி. வயது 45. ரிக்சா ஓட்டும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு 8 மணியளவில் உதயசூரியன் குடியிருப்பு 6வது பிளாக் அருகே ராஜீ தனது குடும்பத்துடன் நின்று பேசி கொண்டிருந்தார்.

அப்பொழுது இரண்டு இரு சக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் ராஜீயை மறைத்து வைத்திருந்த கத்தியால் சராமாரியாக வெட்டியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தார் அதனை தடுக்க முயன்ற பொழுது அவர்களையும் அந்த கும்பல் வெட்டியுள்ளது.
இதில் ராஜீ சம்பவ இடத்திலே பலியானார். மேலும் அதனை தடுக்க சென்ற அவரது மனைவி வசந்தி உறவினர்களான சாந்தி, அருணாச்சலம், சுந்தரி, சுரேஷ், தண்டாபாணி ஆகியோர் வெட்டப்பட்டனர். காயமடைந்த அனைவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்த தாக்குதல் சம்பவம் குறித்த தகவல் அறிந்த வியாசர்பாடி போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் தொண்டை ராஜி, வின்சென்ட், அரி, ஜோசப், காட்டான் ராஜி ஆகியோர் சேர்ந்து ராஜியை வெட்டி கொலை செய்துள்ளனர்.

குடும்ப பகை காரணமாக வெட்டி கொலை செய்தனரா அல்லது மாமூல் தகராறில் கொலை செய்தனரா என கொலைக்காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து












Click it and Unblock the Notifications