சென்னையில் பிரேக்-க்கு பதில் ஆக்ஸிலேட்டரை மிதித்த டிரைவர் .. போனது உயிர்.. பதற வைத்த வீடியோ
சென்னை: சென்னை கீழ்ப்பாக்கத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை கார் ஒன்று அதிவேகமாக சென்று பாதசாரி ஒருவர் மீது மோதியது. இதில் சாலையில் நடந்து சென்றவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பான சிசிடிவி வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.
விபத்துகள் கண் இமைக்கும் நேரத்தில் நடக்கின்றன. யாரோ ஒருவர் செய்யும் சிறு தவறு அல்லது கவனக்குறைவு அல்லது அலட்சியம் மிகப்பெரிய பாதிப்பை ஒருவருக்கோ அல்லது பலருக்கோ ஏற்படுகிறது.சில நேரங்களில் மரணத்தை விளைவிக்கிறது.

சென்னை போன்ற பெருநகரங்களில் இப்படிப்பட்ட விபத்துகள் தினசரி நடக்கின்றன. தண்ணீர் லாரிகள், குப்பை லாரிகள், மணல் லாரிகள், அரை பாடி லாரிகள், அரசு பேருந்துகள், பள்ளி பேருந்துகள், கார்கள் போன்றவற்றால், இருசக்கர வாகனங்களில் செல்வோர், நடந்துசெல்வோர் விபத்தில் சிக்குவது அடிக்கடி நடக்கிறது. இதில் தவறு சில நேரங்களில் இருசக்கர வாகங்களின் ஓட்டுநர்கள் மீதும், நடந்து செல்பவர்கள் மீதும் கூட இருக்கும்.
ஏனெனில் சைட் கண்ணாடி பார்க்காமல் வாகனத்தை திருப்புவதே சென்னையில் பல விபத்துகளுக்கு காரணமாக உள்ளது. அதாவது இண்டிகேட்டர் போடாமல், சைடு மிரர் பார்க்காமல் வாகனங்களை திருப்புவது விபத்தை ஏற்படுத்த முக்கிய காரணமாக இருக்கிறது.
சென்னையில் பாதசாரிகள் சாலையை கடக்கும் போது, முன்பின் பார்க்காமல் சாலையை வேகமாக கடக்க முயல்வதும் விபத்துகளுக்கு காரணமாக உள்ளது.இதேபோல் கனரக வாகனங்கள் காலையில் பீக் அவர்ஸில் வருவதும் விபத்துக்கு முக்கிய காரணமாக உள்ளது. பீக் அவர்ஸில் பள்ளி அல்லது அலுவலகத்திற்கு அதிவேகமாக செல்ல முயலும் போது, கனரக வாகனங்களை முந்தி செல்ல முயல்கிறார்கள். அப்படி போகும் போகும் போது விபத்தில் சிக்குவது அடிக்கடி நடக்கிறது. அல்லது கனரக வாகனங்கள் இருசக்கர வாகனங்களை முந்த முயலும் போதும் விபத்து ஏற்படுகிறது.
சென்னை: பிரேக்-க்கு பதில் ஆக்ஸிலேட்டரை அழுத்திய L Board ஓட்டுனர் - பாதசாரி பரிதாப பலி! | #Chennai | #CarAccident pic.twitter.com/TFShOhfgyd
— velmurugan (@velmurugantheni) September 28, 2023
இது ஒருபுறம் எனில் சாலையில் உள்ள மோசமான பள்ளங்கள் காரணமாகவும் சென்னையில் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. இந்த சூழலில் சென்னையில் நடந்த ஒரு விபத்து வீடியோ பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. சென்னை கீழ்ப்பாக்கத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை கார் ஒன்று அதிவேகமாக சென்று பாதசாரி ஒருவர் மீது மோதியது. இதில் சாலையில் நடந்து சென்றவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கீழ்ப்பாக்கத்தில் சாலையோரத்தில் பழனி என்பவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென ஒரு கார் மின்னல் வேகத்தில் வந்து பழனி மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். யஷ்வந்த் என்பவரும் விபத்தில் படுகாயம் அடைந்தார். கார் ஓட்டுநர் பிரேக்-க்கு பதில் ஆக்ஸிலேட்டரை மிதித்ததே விபத்திற்கு காரணம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications