கோயம்பேடு மார்க்கெட்டில் 9 கிரகங்களும் உச்சம் பெற்றவர்.. திருடியவரிடமே விற்க போய்.. தரமான சம்பவம்
சென்னை: ஒன்பது கிரகங்களும் உச்சம் பெற்ற ஒருவருக்கு தான் இப்படி எல்லாம் நடக்கும் என்று நாம் கிண்டலாக கூறி கேள்விப்பட்டிருப்போம். அப்படித்தான் ஒரு சம்பவம் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் நடந்துள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் திருடிய செல்போனை அதன் உரிமையாளரிடமே விற்க முயன்றுள்ளார் இளைஞர் ஒருவர்.. அவருக்கு வாழ்நாளில் மறக்க முடியாத அளவிற்கு சம்பவம் அங்கேயே நடந்துள்ளது. இறுதியாக புழல் சிறையில் கம்பி எண்ணுகிறார். அவருடன் வந்தவர் தப்பி ஓடிவிட்டார்.
திருடர்களுக்கு பொதுவாக திருடிய பொருளை உடனே யாருக்காவது விற்றுவிடுவார்கள். சில நேரங்களில் திருடிய பொருளை திருடியவரிடமே விற்கும் நிலை வந்தால், அதனை அவர்கள் வாழ்நாளில் மறக்கமாட்டார்கள். ஏனெனில் சம்பவம் அந்த அளவிற்கு அப்போதே அவருக்கு நடக்கும். ஒன்பது கிரகங்களும் உச்சம் பெற்ற ஒருவருக்கு தான் இப்படி எல்லாம் நடக்கும் என்று சில விஷயங்களை கூறுவார்கள்.. அப்படித்தான் கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு தரமான சம்பவம் நடந்துள்ளது.

கோயம்பேடு மார்க்கெட்
சென்னை கோட்டூர்புரம், ஏரிக்கரை சாலையைச் சேர்ந்த 43 வயதாகும் உமாசங்கர் என்பவர் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி கடை ஒன்றை நடத்தி வருகிறார். நேற்று காலை கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள மற்றொரு கடையின் அருகே நின்றிருந்தபோது உமாசங்கர் பேண்ட் பையில் வைத்திருந்த செல்போனை மர்மநபர்கள் யாரோ அசந்த நேரத்தில் திருடிச்சென்று விட்டனர். அதிர்ச்சி அடைந்த உமா சங்கர், வியாபாரம் முடிந்த பிறகு போலீசில் புகார் செய்யலாம் என நினைத்து தனது கடையில் இருந்துள்ளார்.
அடையாளம் தெரியாமல் சிக்கினார்
கோயம்பேடு போலீசார் நடத்திய விசாரணையில் அவரது பெயர் சந்தோஷ் (23) என தெரியவந்தது. உமா சங்கரிடம் செல்போனை திருடியிருக்கிறார். ஆனால் அடையாளம் தெரியாமல் மீண்டும் அவரிடமே செல்போனை விற்க முயன்றிருந்தது விசாரணையில் தெரியவந்தது. சந்தோஷ் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. சந்தோசை கைது செய்த போலீசார், தப்பி ஓடிய அவரது கூட்டாளியை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications