Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையில் வெப் சீரிஸ் எடுப்பதாக செக்ஸ் டார்ச்சர்.. ஈசிஆர் பங்களாவில் கதறிய நடிகை.. இயக்குனர் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை : சென்னையில் வெப்சீரிஸ் எடுப்பதாக அழைத்துச்சென்று, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஷூட்டிங் பங்களாவில் அடைத்து வைத்து நடிகையிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இளம் இயக்குனர் ரஞ்சித் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

Recommended Video

    சென்னை: ரிசார்ட்டில் அடைத்து.. நடிகைக்கு டார்ச்சர்: பாலியல் புகாரில் இளம் இயக்குநர் கைது!

    சென்சார் இல்லை என்பதால் வெப் சீரிஸ் எடுப்பதில் அதிக ஆர்வம் காட்டுகிறார். ஆனால் அப்படி எடுக்கப்படும் பல வெப் சீரியஸ்கள் வரம்பு மீறி காட்சிகளை அமைக்கின்றன. இந்த வெப்சீரியஸ் ஓடிடியில் வெளியிடப்படுகிறது. அப்படி வெளியான வெப் சீரியஸ்கள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.

    இதனால் பல இளம் இயக்குனர் வெப் சீரிஸ் எடுக்க அதிக ஆர்வம் காட்டுகின்றார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர் தான் இளம் இயக்குனர் ரஞ்சித்.

    வெப் தொடர்

    வெப் தொடர்

    சென்னையை அடுத்த சோழிங்கநல்லூர் பகுதியில் வசிப்பவர் ரஞ்சித் (வயது 25). இவரது சொந்த ஊர் உடுமலைப்பேட்டை ஆகும். இவர், வெப் தொடர்களை இயக்கி வருகிறார். இவர் இயக்கும் த்ரீ சம் என்ற புதிய வெப் தொடரின் படப்பிடிப்பு சென்னை கிழக்கு கடற்கரை சாலை அக்கரையில் உள்ள தனியார் ரிசார்ட்டில் நடந்து வந்தது.

    போலீசுக்கு வந்த போன்

    போலீசுக்கு வந்த போன்

    இவரது இணையதள தொடரில் சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த 22 வயதான இளம் நடிகை கதாநாயகியாக நடித்து வந்தார். ரஞ்சித்துக்கு உதவியாக கார்த்திக், ரியாஸ் உள்ளிட்ட பலர் பணியாற்றி வந்தார்கள். இந்நிலையில் கடந்த 15ம் தேதி இளம் இயக்குநர் ரஞ்சி தனக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுப்பதாக காவல்துறை கட்டுபபாட்டு அறைக்கு புகார் தெரிவித்தார்.

    இயக்குனர் ரஞ்சித்

    இயக்குனர் ரஞ்சித்

    சம்பவ இடத்திற்கு ,இன்ஸ்பெக்டர் வேலு தலைமையில் சென்ற கானத்தூர் காவல்துறையினர், அந்த நடிகையை பத்திரமாக மீட்டு காவல் நிலையம் அழைத்துச்சென்றார்கள். அந்த தொடரின் இயக்குனர் ரஞ்சித், மற்றும் புகாருக்குள்ளான உதவியாளர்கள் இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

    வாக்குவாதம்

    வாக்குவாதம்

    விசாரணையில் இளம் இயக்குனர் ரஞ்சித், அந்த நடிகை மீது கொண்ட காதலால் அவருடைய பெயரை கைகளில் பச்சை குத்தியதும் காதலிக்குமாறு டார்ச்சர் செயதும் தெரியவந்துள்ளது. சம்பவத்தன்று படப்பிடிப்பின்போது வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. ஏமாற்றத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் ரஞ்சித் நடிகையை தாக்கியது தெரியவந்தது.

    கதறிய நடிகை

    கதறிய நடிகை

    அத்துடன் தன்னை காதலிப்பதாகக் கூறி ரஞ்சித் தன்னை அடைத்து வைத்து கண்மூடித்தனமாக அடித்து உதைத்ததாக இளம் நடிகை போலீசாரிடம் கூறியிருக்கிறார். அத்துடன் ரஞ்சித் அடிக்கடி பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து வந்ததாகவும் கூறினார்.

    உதவியார்கள் விடுதலை

    உதவியார்கள் விடுதலை

    இதையடுத்து இளம் இயக்குனர் ரஞ்சித் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த கானத்தூர் போலீசார் ரஞ்சித்தை கைது செய்து அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று கொரோனா பரிசோதனை நடத்திய பின்பு ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.. ரஞ்சித் உதவியாளர்கள் கார்த்திக், ரியாஸ் இருவரையும் கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+