ஆபாச யூடியூபர் பப்ஜி மதன் மீதான குண்டாஸ் உறுதி.. அறிவுரைக் கழகம் உத்தரவு
சென்னை; யூடியூபர் பப்ஜி மதன் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை நீக்க அறிவுரைக் கழகம் மறுத்துள்ளது. ஜூலை 6ஆம் தேதி பப்ஜி மதன் மீது குண்டர் சட்டம் போடப்பட்ட நிலையில் அதனை அறிவுரைக் கழகம் உறுதி செய்துள்ளது.
Recommended Video
தான் ப்பஜி விளையாடுவதை இணையத்தில் ஒளிபரப்பி அதன் மூலம் சம்பாதித்து வந்தவர் யூடியூபர் பப்ஜி மதன். இதற்காக மதன் மற்றும் டாக்சிக் மதன் 18 பிளஸ் என்ற யூடியூப் சேனல்களையும் அவர் நடத்தி வந்தார்.

இவர் ஆன்லைனில் விளையாடும் போது பெண்கள், சிறுவர்கள், சிறுமிகள் என அனைவரையும் காதில் கேட்க முடியாத வார்த்தைகளால் ஆபாசமாக திட்டுவார். இது குறித்து முதலில் புளியந்தோப்பு சைபர் க்ரைம் பிரிவில் இருவர் புகார் அளித்திருந்தனர்.
இதையடுத்து பப்ஜி மதன் தலைமறைவானார். இதில் அவரது மனைவி கிருத்திகாவுக்கும் தொடர்பு இருந்தது தெரிய வந்ததைத் தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து கடந்த ஜூலை 18ஆம் தேதி பப்ஜி மதன் கைது செய்யப்பட்டார். மேலும், அவர் மீது குண்டர் சட்டத்திலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாகச் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள அறிவுரை கழகத்தில் பப்ஜி மதன் தரப்பில், "தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை நாங்கள் விளையாடவில்லை. கொரியா வெர்ஷனை தான் விளையாடினோம். மேலும், குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும் அளவிற்கு மோசமான தவறு எதையும் செய்யவில்லை. சாதாரண பிரிவுகளிலேயே நடவடிக்கை எடுத்திருக்கலாம்" என்றும் பப்ஜி மதன் தரப்பில் அறிவுரைக் கழகத்தில் வாதிடப்பட்டது.
மேலும், இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இதில் தமிழக அரசு, சென்னை காவல் ஆணையர் 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், யூடியூபர் பப்ஜி மதன் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை நீக்க அறிவுரைக் கழகம் மறுத்துள்ளது. ஜூலை 6ஆம் தேதி பப்ஜி மதன் மீது குண்டர் சட்டம் போடப்பட்ட நிலையில் அதனை அறிவுரைக் கழகம் உறுதி செய்துள்ளது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications