கனத்த இதயத்துடன்! சென்னை அடையாறு கேட் கிரவுன் பிளாசா 5 ஸ்டார் ஹோட்டலுக்கு மூடுவிழா.. ஏன் என்னாச்சு?
சென்னை: சென்னை அடையார் கேட் பகுதிகளில் உள்ள ஹோட்டல் கிரவுன் பிளாசா வரும் டிசம்பர் 20 ஆம் தேதியுடன் மூடப்படுகிறது.
ஆழ்வார்பேட்டையில் உள்ள டிடிகே சாலையில் அமைந்துள்ளது 5 நட்சத்திர ஹோட்டலான கிரவுன் பிளாசா. அடையாறு ஷெராடன் பார்க் மற்றும் டவர்ஸ் என்று அழைக்கப்பட்டு வந்த இந்த கட்டடம், 2015 ஆம் ஆண்டு கிரவுன் பிளாஸாவாக மாறியது.

இந்த கட்டடத்தை இன்டர்கான்டினென்டல் ஹோட்டல் குழுமம் வாங்கிவிட்டனர். இந்த ஹோட்டலில் 283 அறைகள் இருக்கிறது. 32 சூட் அறைகள், 5 உணவகங்கள் உள்ளன. இது மொத்தம் 8 அடுக்குகளை கொண்டதாகும். இந்த கிரவுன் பிளாசா வரும் டிசம்பர் 20ஆம் தேதியுடன் மூடப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்த ஹோட்டலில் தங்களுக்கு ஆதரவை அளித்து வந்த வாடிக்கையாளர்களுக்கு ஹோட்டல் நிர்வாகம் நன்றி தெரிவித்துள்ளது. மேலும் டிசம்பர் 20 ஆம் தேதி முதல் விருந்தினர் வருகைக்கான தங்கள் ஹோட்டல் கதவு மூடப்படும் என்பதை கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்வதாகவும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.டிசம்பர் 20 வரை ஹோட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு வழக்கம் போல் சேவை வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த ஹோட்டல் கட்டடத்தை பாஷ்யம் நிறுவனம் வாங்குகிறது. இந்த ஹோட்டல் அடுக்குமாடி குடியிருப்புகளாக மாறுகிறது.
இந்த ஹோட்டல் சென்னை சாமியர்ஸ் சாலையில் உள்ளது. இந்த கட்டடம் 38 ஆண்டுகள் பழமைவாய்ந்ததாகும். இதை துணி ஏற்றுமதியாளரான டி டி வாசு வாங்கியிருந்தார். இது பின்னாளில் பார்க் ஷெராட்டன் ஹோட்டலாக மாறியது. இதை ஐடிசி நிர்வகித்து வந்தது.
அடையாறில் ஐடிசி சோழா கட்டி முடித்தவுடன் பார்க் ஷெராடன் ஹோட்டல் கிரவுன் பிளாசா என பெயர் மாற்றப்பட்டது. இந்த ஹோட்டலை ஸீப்ரோஸ் எனும் கட்டுமான நிறுவனம் வாங்கிவட்டது. இதை ஒரு சொகுசு குடியிருப்பாக மாற்ற முடிவு செய்துள்ளது. ஆனால் ஒப்பந்தத்தில் ஏதோ ஒரு மித்த கருத்து ஏற்படவில்லை.
இதையடுத்து பாஷ்யம் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தியது. அதில் ஒன்றை ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளது. ஒரு கிரவுண்ட் நிலம் 10 முதல் 12 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இந்த இடத்தில் 130 அடுக்குமாடி குடியிருப்புகளை கட்ட போகிறது. ஒவ்வொன்றும் 5000 முதல் 7000 சதுர அடியில் இருக்கும். அவை கட்டி முடித்தவுடன் ஒரு சதுர அடி ரூ 30 ஆயிரம் என்றும் ஒரு அபார்ட்மென்ட் 15 கோடி முதல் 21 கோடிக்கு விற்பனை ஆகும் என்றும் தெரிகிறது.
அனைத்து தளங்களின் மொத்த பரப்பளவு குறியீட்டுக்கான தமிழக அரசின் அனுமதிக்காக பாஷ்யம் காத்திருக்கிறது. ஒரு வேளை கிடைத்துவிட்டால் ஒரு சதுர அடியை ரூ 50000 க்கு விற்பனை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது கிரவுன் பிளாசாவில் ஒரு நாள் இரவு தங்குவதற்கு ரூ 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications