பல்லிளித்த மேட்டர்.. சென்னையில் மட்டுமல்ல, டெல்லியிலும் நிலைமை மோசம்.. காலையிலேயே கண்ணு தெரியலையாமே
சென்னை: மனிதன் சுவாசிக்க உகந்த காற்றின் தரக்குறியீடு 50 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், அதைவிட 3 மடங்கு காற்று மாசு அடைந்துள்ளது, சென்னைவாசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.
மாசு பாதிப்பு என்பது, இந்தியாவின் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்து கொண்டிருக்கிறது.. நம் இந்தியாவை பொறுத்தவரை எந்த நகரமும் உலக சுகாதார அமைப்பின் காற்றின் தர அளவை எட்டவில்லை. குறிப்பாக வட இந்தியாவில் காற்றின் தரம் மிக மோசமாகவே இருக்கிறது.. அதுபோலவே சென்னையிலும், காற்றின் தரம் மாசடைந்து வருகிறது.

காற்று மாசுபாடு: அதனால்தான், மின்சார போக்குவரத்து உள்கட்டமைப்பை உருவாக்குவது, சாலை துப்புரவு பணிகளை இயந்திரமயமாக்கல் போன்ற நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி முன்னெடுத்து வருகிறது என்றாலும், சென்னையில், உலக தரத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடந்து கொண்டிருப்பதாலும், மாசு சமீபகாலமாக மேலும் பெருகிவிட்டதாக சொல்கிறார்.
பொதுவாக, காற்று மாசு தொடர்பான கணக்கீடு என்பது, ஒரு இடத்தில், மனிதர்கள் மற்றும் பிற உயிரினங்கள் சுவாசிக்க தேவையான சுத்தமான காற்று உள்ளதா என்பதை கண்டறியும் அளவீடு ஆகும். இதைவைத்துதான் காற்றின் தரம் அளவீடு செய்யப்படுகிறது.
இந்த அளவீட்டின்படி, காற்றின் தரக்குறியீடு 50-ஐ தாண்டினாலே, அதில் நுண்ணிய துகள்கள், கண்ணுக்கு புலப்படாத கிருமிகள் பரவிக் கிடக்குமாம்.. அதை சுவாசிக்கும்போது மனிதர்களுக்கு உடல்நல பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்கிறது மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம். ஆனால், நம்முடைய சென்னையிலோ, காற்றின் தரக் குறியீடு 117 முதல் 195 வரை பதிவாகி பீதியை கிளப்பிவருகிறது.
வழக்கமாக, தீபாவளி பண்டிகையின்போது, காற்று மாசுபாடு, நாடு முழுவதுமே அதிகமாகிவிடும். அதனால்தான், டெல்லி உட்பட சில மாநிலங்களில் பட்டாசு வெடிக்க ஒவ்வொரு வருடமும் தடை விதிக்கப்படுகிறது.. இந்த வருடமும் பட்டாசு வெடிக்க டெல்லி அரசு 3வது ஆண்டாக தடை செய்தது. ஆனால், இந்த உத்தரவில் தலையிட சுப்ரீம் கோர்ட்டும் மறுத்துவிட்டது.
எனினும், பட்டாசு வெடிக்க ஏற்கனவே தடை உள்ள நிலையில், மக்கள் அதைப்பற்றி கவலையேப்படவில்லை.. டெல்லியின் பல்வேறு பகுதிகளில் பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடினார்கள்.. இதனால் டெல்லியில் காற்று மாசு மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்பட்டு வந்தது.. அனைவரும் பயந்ததுபோலவே இப்போதும் நடந்துவிட்டது.
டெல்லி: தலைநகர் முழுவதையும் பட்டாசு புகை, சூழ்ந்து கொண்டுள்ளதாம். இதனால், பல்வேறு பகுதிகளில் காற்றின் தரக்குறியீடு மிக மோசமாக மாறியிருப்பதாக சொல்கிறார்கள்.. மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் குறியீடு 4 புள்ளிகளுக்கு மேல் நேர்ந்ததால், வயதானவர்களுக்கு மூச்சு திணறல், கண் எரிச்சல் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட்டிருக்கிறது.
இன்றும்கூட, அதிகாலை முதலே டெல்லியில் பனிமூட்டத்துடன் கூடிய புகை மூட்டம் சூழ்ந்து கொண்டது. இதனால், வாகன ஓட்டிகளுக்கு கண்ணே தெரியவில்லை.. சுற்றிலும் புகைமூட்டமாக இருந்ததால், வாகனங்களை ஓட்டுவதில் சிரமங்களை எதிர்கொண்டனர்... காற்று மாசுக்கு எதிரான டெல்லி அரசின் நடவடிக்கை தொடர்ந்தாலும், காற்றின் தரத்தில் முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை என்று டெல்லி மக்கள் குமுறி வருகிறார்கள்.
கண்ணெரிச்சல்: ஏற்கனவே, பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் வேளாண் கழிவுகள் எரிக்கப்படுவதும், டெல்லியில் காற்று மாசு ஏற்பட பெருத்த காரணியாக உள்ள நிலையில், தற்போதைய தீபாவளி பட்டாசு விவகாரமும் சேர்ந்து கொண்டுள்ளதால், தலைநகரில் "புகைச்சல்" அதிகமாகி உள்ளது.












Click it and Unblock the Notifications