மெரினா ஏர் ஷோ.. பலியான 5 பேர்! இதிலுமா அரசியல் செய்வீங்க! சண்டைக்கு வந்த சரவணன்.. கையில் 9 பாயிண்ட்
சென்னை : சென்னை மெரினாவில் நேற்று நடைபெற்ற இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சியை பார்வையிட்ட போது ஐந்து பேர் பலியான சம்பவம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் மெரினா மரணத்திற்கு மாநில அரசு பொறுப்பேற்க வேண்டும் என அரசியல் செய்ய ஆரம்பித்து விட்டதாகவும், இது சிலரின் காழ்ப்புணர்ச்சி அரசியல் என திமுக செய்தி தொடர்பாளர் சரவணன் விமர்சித்துள்ளார்.
இந்திய விமானப்படை சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் நேற்று சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இந்திய விமானப்படையை சேர்ந்த விமானிகள், போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் சாகசம் செய்து பார்வையாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினர்.

இதனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க .ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு உற்சாகம் ததும்ப பார்வையிட்டனர்.
இதனை தொடர்ந்து ஒரே நேரத்தில் மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கானோர் குவிந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வெயில் காரணமாக சிலர் மயக்கம் அடைந்த நிலையில் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதே நேரத்தில் சிகிச்சை பலனின்றி 5 பேர் உயிரிழந்ததோடு நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இந்நிலையில் தமிழ்நாடு அரசின் மெத்தனப் போக்கே மெரினா மரணத்திற்கு காரணம் என எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.
இந்த நிலையில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே தமிழ்நாடு அரசு மீது விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதாக கூறியிருக்கிறார் திமுக செய்தி தொடர்பாளரான சரவணன். மேலும் இது தொடர்பாக 9 கேள்விகளையும் அவர் முன் வைத்துள்ளார். அதில்,"நேற்று இந்திய விமானப்படை, மெரினாவில் நடத்திய சாகசக் காட்சிகள் ஒருங்கிணைக்கப்பட்ட முறை சரியல்ல, ரயில்கள் இயக்கப்படவில்லை, 5 பேர் இறந்து விட்டனர், மாநில அரசு பொறுப்பேற்க வேண்டும் என இதையும் வைத்து அரசியல் செய்ய ஆரம்பித்து விட்டனர்.
நானும் அந்த சாகசத்தை காண சென்றிருந்தேன், 3 கிமீ நடந்து, பார்த்து, மீண்டும் நடந்து வீடு வந்து சேர்ந்தோம்.
முக்கியமான கேள்விகள்..
1. 10லட்சம் பேர் கூடுவார்கள் எனும் பொழுது, அனைவரது வாகனங்களையும், சாகசம் நடத்தும் இடத்திற்கே அனுமதிக்க முடியுமா?
2. முன்னரே இறங்கி விட்டு கடைசி 2 அல்லது 3 கிமீ நடந்து தானே செல்ல முடியும்.
3. நேற்று வெயில் 36டிகிரி அளவு கொளுத்தியது, அந்த வெயிலில் நடந்து சென்று, உச்சி வெயிலில் நின்று தான் இந்த சாகசத்தை பார்க்க முடியும். அதற்கான குறைந்த பட்ச முன்னேற்பாடுகளுடன் தானே செல்ல வேண்டும். தொப்பி, தண்ணீர், குடை.
4. தேவையான அளவு ஆம்புலன்ஸ்கள் இருந்தது, வெயிலில் மயக்கம் அடைந்தோர்க்கு முதலுதவி சிகிச்சைகள் கொடுத்த வண்ணம் இருந்தனர்.
5. எல்லோருக்கும் ஒரு ஆசை தான், நேரில் பார்த்து விட வேண்டும் என்று. இந்த வெயில் சூழல், அவர்களின் உடல் அதற்கு ஒத்துழைக்குமா என்பதனை உணர்ந்து நிகழ்ச்சிக்கு வந்திருக்க வேண்டும். சுமார் 3 மணி நேரமாவது, உச்சி வெயிலில் நிற்க நடக்க வேண்டும்.
5. 5 பேரின் இறப்பு மிகவும் வருத்ததிற்கு உரியது, அவர்களின் உடல் நலம் என்னவாய் இருந்தது என்பதனையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
6. போதுமான ரயில்களை ஏன் இயக்கவில்லை என்பதற்கு தென்னக ரயில்வே விளக்கமளிக்க வேண்டும்.
7. 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஒரு குறுகிய காலத்தில் சென்று வரக்கூடிய கட்டமைப்பா அங்கு உள்ளது?
8. நம் காவலர்கள் சிறப்பான பணியை செய்தனர், முதலுதவி சிகிச்சை முதல், போக்குவரத்து ஒழுங்கு வரை கடமையுணர்ந்து செயலாற்றினர்.
9. நிகழ்ச்சிக்கு வந்திருந்த பெரும்பான்மையான சென்னைவாசிகள், நிகழ்ச்சியை கண்டு களித்து மன நிறைவோடே சென்றனர். இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளில் என்னென்ன வசதிகள் இருக்கும், வசதி குறைபாடுகள் இருக்கும் என அறிந்தே நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர்.
இதனை ஒன்றிய அரசு தானே நடத்தியது, அவர்கள் பங்கு தான் என்ன? இது ஏதோ ஒரு நிர்வாகத் தோல்வி என சித்தரிக்க முயல்பவர்களுக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சி தவிர வேறொரு நோக்கமும் இல்லை." என கூறியுள்ளார்.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications