சென்னைக்கே ஹேப்பி நியூஸ்.. டெர்மினல் 1 + டெர்மினல் 4.. சூப்பர் வசதிகள்.. இன்னும் 1 நாள்தான் இருக்கு
சென்னை: சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையம் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ள நிலையில், அதுகுறித்த குட்நியூஸ் ஒன்று வெளியாகி உள்ளது.
சென்னை விமான நிலையத்தில் புதிய ஒருங்கிணைந்த சர்வதேச முனையத்தை, 2.21 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில், ரூ.2,467 கோடி திட்டத்தில் 2 கட்டங்களாக கட்டுவதற்கு, இந்திய விமான நிலைய ஆணையம் கடந்த 2018-ம் ஆண்டில் முடிவு செய்தது.. இதன் முதல்கட்ட பணிகளை, 1.36 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில், ரூ.1,260 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டது.

இந்த ஒருங்கிணைந்த சர்வதேச முனையம், டெர்மினல் 2-ஐ (டி 2) கடந்த ஏப்ரலில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.. இதையடுத்து, இந்த புதிய முனையத்தின் சேவைகள், கடந்த ஜூலை 7-ம் தேதியிலிருந்தே நடைமுறைக்கு வந்துவிட்டது.
கட்டுமான பணிகள்: டெர்மினல் 3, 4 ஆகியவை முழுவதுமாக மூடப்பட்டுவிட்டதால், இவைகளை இடிக்கும் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.. இந்த இடத்தில், விமான நிலைய 2ம் கட்ட கட்டுமான பணிகள் நடக்க போவதாக சொல்கிறார்கள்.
ஆனால், பழைய சர்வதேச முனையத்தின் டெர்மினல் 4, நல்ல நிலையில் இருப்பதால், அவைகளை இடிக்கவில்லை.. அதற்கு பதிலாக, கூடுதல் உள்நாட்டு விமான முனையமாக பயன்படுத்த, இந்திய விமான நிலைய ஆணையம் முடிவு செய்தது. அதன்படி, சர்வதேச முனையமாக இருந்த, டெர்மினல் 4-ஐ, உள்நாட்டு முனையமாக மாற்றி அமைக்கும் பணிகளும் நடந்து முடிந்துள்ள நிலையில், நாளை மறுநாள் அதாவது நவம்பர் 15-ம் தேதி இந்த புதிய உள்நாட்டு முனையம் செயல்பாட்டுக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு முனையம்: இதற்காக, நாளை 14-ம் தேதி, புதிய உள்நாட்டு முனையம் டெர்மினல் 4-ல் சோதனை அடிப்படையில் விமானங்கள் தரையிறங்குவது, புறப்படுவது போன்றவை நடைபெற உள்ளன.
இது கடந்த செப்டம்பர் மாதமே, செயல்பாட்டுக்கு வரும் என்று முதலில் சொன்னார்கள்.. பிறகு, கடந்த அக்டோபர் மாதம் 29ம் தேதியிலிருந்து செயல்பாட்டுக்கு வரும் என்றார்கள்.. எனினும் பணிகள் முழுமையாக முடிவடையாததால், திறப்பு விழா இழுபறியிலேயே இருந்தது.. தற்போது மொத்த பணிகளும் முடிந்த நிலையில், நாளை மறுநாள் திறக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
பெரிய நம்பிக்கை: அதுமட்டுமல்ல, சென்னை உள்நாட்டு விமான நிலையம் டெர்மினல் 1, டெர்மினல் 4 என்று 2 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளதால், கூடுதல் இடவசதி இனி கிடைக்கும் என்பதுடன், கூடுதல் விமான சேவைகள் இயக்க முடியும் என்றும் விமான நிலைய அதிகாரிகள் பெருத்த நம்பிக்கையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications