சென்னை விமான நிலைய விரிவாக்க பணி.. கொளப்பாக்கத்தில் வீடுகளை இடிக்க முடிவு.. பொதுமக்கள் எதிர்ப்பு
சென்னை: சென்னை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இந்த பணிக்காக கொளப்பாக்கத்தில் வீடுகளை இடித்து அகற்ற அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்காக 15 ஏக்கர் நிலம் எடுக்க முடிவு செய்துள்ளனர். இதற்காக வீடுகளை அளவீடு செய்ய அதிகாரிகள் சென்ற போது, எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் வாக்குவாத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஹைதராபாத், பெங்களூர் உள்பட இந்தியாவின் மற்ற விமான நிலையங்களை போல் இல்லை.. சென்னை சர்வதேச விமான நிலையம் சென்னை மாநகருக்குள்ளேயே அமைந்துள்ள விமான நிலையமாக இருக்கிறது. இந்தியாவில் உள்ள மற்ற எல்லா விமான நிலையங்களை ஒப்பிடும் போது, மிகவும் பரபரப்பான விமான நிலையம் ஆகும்.. விமானத்தை ஏர்போர்ட்டில் இறக்குவதற்கு விமானிகளே தவம் இருக்க வேண்டும். ஏனெனில் அவ்வளவு நெருக்கடியான விமான நிலையம் ஆகும். டவுன் பஸ் போல் விமானங்கள் வந்து செல்லும் இடமாக இருக்கிறது.

சென்னை விமான நிலையத்தில் எல்லா நாட்டு விமானங்களும் வந்து செல்கின்றன.. சென்னை விமான நிலையத்தில் தினமும் பல ஆயிரம் பயணிகள் வந்து செல்கிறார்கள். என்னதான் சென்னை விமான நிலையம் பரபரப்பாக இருந்தாலும், பரப்பளவில், ஹைதராபாத், பெங்களூரை விட சிறியது. இதனால் மிகப்பெரிய ராட்சத விமானங்கள் வந்து இறங்குவதில் சிக்கல்கள் உள்ளன. அதேபோல் அங்குள்ள இரண்டு ஓடு பாதைகளும் நேரத்தில் செயல்பாட்டில் இல்லாமல் இருந்து வந்தது.
சென்னை விமான நிலையத்தில் முதல் ஓடுபாதை 3.66 கிலோமீட்டர் நீளமும், 2-வது ஓடுபாதை 2.89 கிலோமீட்டர் நீளமும் இருக்கிறது. இதில் முதல் ஓடுபாதையில் பெரிய ரக விமானங்கள் வந்து தரையிறங்கி, புறப்பட்டு செல்கின்றன. 2-வது ஓடுபாதையில், 76 இருக்கைகள் கொண்ட சிறிய ரக விமானங்கள் மற்றும் தனி விமானங்கள் இயக்கப்படுகிறது. ஆனால் இரண்டு ஓடு பாதையிலும் ஒரே நேரத்தில் இயங்காமல் இருந்து வந்தது. இதனால் விமானங்களை அதிகமாக இயக்க முடியாத நிலை ஒரு காலம் வரை இருந்தது.
இந்த நிலையில் 2 ஓடுபாதைகளையும் ஒரே நேரத்தில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் கூடுதல் விமானங்கள் சென்னை விமான நிலையத்திற்கு வந்து செல்ல முடியும் என்கிற நிலை உருவானது. அதேநேரம் விமான நிலையத்தில் தரையிறங்கும் விமானங்கள், ஒரு ஓடுபாதையில் இருந்து மற்றொரு ஓடுபாதைக்கு செல்ல, ''டாக்ஸி வே'' என்ற இணைப்பு பாதைகளும் பயன்படுத்தப்பட்டன. அதன் பின்னர் கடந்த ஆண்டு சென்னை விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் 2 ஓடுபாதைகளும் பயன்பாட்டிற்கு வந்தது. இதை அடுத்து சென்னை விமான நிலையத்தில் 2-வது ஓடுபாதையில் விமான சேவைகளின் எண்ணிக்கைகள் படிப்படியாக உயர்ந்தது.
இதன்படி சென்னை விமான நிலையத்திற்கு தினந்தோறும் ஏராளமான விமானங்கள் தற்போது வந்த சென்று வருகின்றன. விமான நிலையத்தின் எல்லை பகுதி கொளப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் முடிகிறது. இந்நிலையில் விமான நிலைய விரிவாக்க பணிக்காகவும், விமானங்கள் தரையிறங்குவதில் அங்கிருக்கும் குடியிருப்புகளால் தடை இருப்பதாக கூறி அங்கு இருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகளின் உயரங்களை குறைக்க வேண்டும் என சென்னை விமானத்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது
இந்நிலையில் நேற்று இப்பணிக்காக 15 ஏக்கர் நிலம் எடுக்க உள்ளதாகவும், முதற்கட்டமாக 9 ஏக்கர் நிலம் எடுக்க அங்குள்ள வீடுகளை அளவீடு செய்ய, சென்னை விமான நிலைய விரிவாக்க திட்ட சிறப்பு மாவட்ட அதிகாரிகள் மாங்காடு போலீசாருடன் அங்கு சென்றார்கள். அதற்கு வீட்டின் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் வீடுகளை அளவீடு செய்யாமல் அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில், 'முதலில் வீட்டின் உயரங்களை குறைக்க வேண்டும் என நோட்டீஸ் வழங்கிய நிர்வாகம் வீடுகளை இடிக்க மாட்டோம் என்றார்கள். தற்போது வீடுகளை இடிப்பதற்காக அளவீடு செய்யும் பணியில் ஈடுபடுகிறார்கள். தங்களது வீடுகளை அகற்றினால் மாற்று இடம் கூட இல்லை என அதிகாரிகள் கூறுவதாக மக்கள் குற்றம்சாட்டினார்கள். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
-
வணிக காஸ் சிலிண்டர் ரூ.5000, 6000 என விற்பனை.. சென்னை,கோவையில் மூடப்படும் ஏராளமான உணவங்கள் -
சென்னை மாதவரத்தில் 46 கிலோ தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள்.. சென்னையில் இன்றும் மழை வெளுக்கும்.. 24 ஆம் தேதி வரை விடாது! -
மார்ச் மாதத்தில் நடந்த மேஜிக்.. சென்னையில் அசாதாரணமான மழை.. வெதர்மேன் வெளியிட்ட பதிவு -
சென்னை மாநகர பஸ் பயணிகளுக்கு குட் நியூஸ்! கேஷ்பேக் ஆஃபரில் டிக்கெட்.. உடனே இதை பண்ணுங்க -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு!












Click it and Unblock the Notifications