சென்னை ஏர்போர்ட் மேலே.. நடந்த திடீர் சம்பவம்! மத்திய அரசுக்கே பறந்த ரெட் சிக்னல்! ஷாக்கா இருக்கே
சென்னை: இந்தியாவின் முக்கிய நகரங்களான டெல்லி, கொல்கத்தா, அமிர்தசரஸ், மும்பை, ஹைதராபாத், பெங்களூரு, சென்னை ஆகிய விமான நிலையங்களில் விமானங்கள் ஜிபிஎஸ் திசைதிருப்பல் அல்லது போலியான செயற்கைக்கோள் சிக்னல்களால் பாதிக்கப்படுவதாகப் புகார்கள் பெறப்பட்டுள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்தது.
ஒரு விமானம்.. தான் செல்லும் இடத்தை கண்டறிய ஜிபிஎஸ்ஸை பயன்படுத்தும். ஆனால் இந்த சிக்னில் இயற்கையாகவோ, திட்டமிடப்பட்டோ பிரச்சனைகள் ஏற்பட்டால், விமானங்கள் செல்லும் இடங்களை கண்டறிவதில், தரையிறங்குவதில், ரூட்டை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்படும்.

இந்த நிலையில் விமானங்கள் ஜிபிஎஸ் திசைதிருப்பல் அல்லது போலியான செயற்கைக்கோள் சிக்னல்களால் பாதிக்கப்படுவதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு பதிலளிக்கையில், நவம்பர் முதல் வாரத்தில் டெல்லி விமான நிலையத்தின் சுற்றுப்புறப் பகுதிகளில் சில விமானங்கள் ஜிபிஎஸ் திசைதிருப்பலை எதிர்கொண்டதாக உறுதிப்படுத்தினார்.
ஜிபிஎஸ் திசைதிருப்பல்
ஜிபிஎஸ் திசைதிருப்பல் புதிய பிரச்சனையாக உருவெடுத்து உள்ளது. ஜிபிஎஸ் திசைதிருப்பல் சம்பவங்களைத் தொடர்ந்து, இந்திய விமான நிலைய ஆணையம் (ஏஏஐ) வயர்லெஸ் கண்காணிப்பு அமைப்பை (டபிள்யூஎம்ஓ) விசாரணையை தொடங்கி உள்ளது. சிக்னல் குறுக்கீடு மூலம் விசாரணை செய்து வருகிறோம்.
திசைதிருப்பலின் மூலத்தைக் கண்டறியக் கேட்டுக் கொண்டதாக அமைச்சர் தெரிவித்தார். டிஜிசிஏ மற்றும் ஏஏஐ வழங்கிய தகவல்களின் அடிப்படையில், மூலத்தைக் கண்டறிய முயன்று வருகிறோம். நிறைய டேட்டாக்களை எடுப்பதன் மூலம் ஜிபிஎஸ் திசைதிருப்பல் எங்கிருந்து வருகிறது என்பதை கண்டுபிடிக்க முடியும் என்று கூறினார். ஒய்.எஸ்.ஆர்.சி.பி எம்.பி எஸ்.நிரஞ்சன் ரெட்டி எழுப்பிய கேள்விக்கு நாயுடு பதிலளித்தார்.
அடிக்கடி நடக்கும் சம்பவங்கள்
நவம்பர் மாதத் தொடக்கத்தில் சுமார் ஒரு வாரம் டெல்லி விமான நிலையத்திற்கு 60 நாட்டிகல் மைல்களுக்குட்பட்ட தொலைவில், விமானங்கள் போலியான ஜிஎன்எஸ்எஸ் சிக்னல்களை எதிர்கொண்டதாக கூறப்படுகிறது. இதன் மூலம் விமானங்களின் நிலை குறித்த தவறான தகவல்களும், விமானங்களை வேறு திசைக்கு திசை திருப்பும் சம்பவங்களும் நடக்கின்றன.
பொதுவாக, பாகிஸ்தான் மற்றும் மியான்மர் உடனான இந்திய எல்லைகளில் ட்ரோன் நடவடிக்கைகளை எதிர்கொள்ள ஜிஎன்எஸ்எஸ் திசைதிருப்பல் பயன்படுத்தப்படுவது வழக்கம். இருப்பினும், டெல்லி நிகழ்வுகள் குறித்து எந்தத் தகவலும் இல்லாததால், விமானப் பணியாளர்களும், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களும் ஆச்சரியமடைந்தனர். இது இயல்பான நிகழ்வா? அல்லது திட்டமிடப்பட்ட சதியா? என்று விசாரணை செய்யப்படுகிறது. கடந்த வாரங்களில் சென்னையிலும் இதேபோல் நடந்தது மத்திய அரசுக்கு எச்சரிக்கை மணியை அனுப்பி உள்ளது.
இதனைத் தொடர்ந்து, இந்திய பாதுகாப்புப் படைகள், மும்பை மற்றும் கொல்கத்தா அருகிலுள்ள விமானப் போக்குவரத்துப் பாதைகளில் ராணுவப் பயிற்சிகள் நடைபெறுவதால் சாத்தியமான ஜிஎன்எஸ்எஸ் சிக்னல் தடங்கல் குறித்து விமான ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்தன. டெல்லி சம்பவங்களும் அப்போதைய வடமேற்கு இந்தியாவில் (ராஜஸ்தான் மற்றும் குஜராத் உட்பட) நடைபெற்ற இந்திய ராணுவ முப்படைகளின் பயிற்சிகள் மற்றும் இந்திய விமானப் படையின் 'மகா குஜ் ராஜ்-25' உடனும் தொடர்புடையவை எனப் பலரும் கருதினர்.
ஆனால் சென்னையில் நடந்ததற்கான காரணம் என்ன என்பது தொடர்பான விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. இது தொடர்பான விரிவான விசாரணைகள் நடந்து வருகின்றன.
-
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
பிழைப்பு தேடி தமிழ்நாடு வந்த சிறுவன்..காலி ரயில் பெட்டியில் சீரழித்த கயவர்கள்! துடித்து பலியான சோகம்! -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
எல்லா SP-க்களும் சென்னை நோக்கி.. தலைநகரில் 8 பேருக்கு புதுபொறுப்பு! வெயிட்டிங் லிஸ்ட்க்கு குட்பை -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது -
சிவரஞ்சனியை போட்டு தள்ளிட்டேன், மகளையும் முடிச்சுட்டேன்!" காலங்காத்தாலேயே அம்மாவுக்கு போன் செய்த மகன் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது?












Click it and Unblock the Notifications