Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முதலில் இடியுங்க.. 146 வீடுகளுக்கும் பறந்து வந்த ஏர்போர்ட் நோட்டீஸ்? கொளப்பாக்கத்தில் என்ன நடக்குது?

சென்னை சர்வதேச விமான நிலையத்தின் அருகில் உள்ள கொளப்பாக்கத்தில் உள்ள 146 வீடுகளின் உயரத்தை குறைக்க வேண்டும் என்று விமான நிலைய ஆணையம் அனுப்பிய நோட்டீஸ் சர்ச்சையாகி உள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை சர்வதேச விமான நிலையத்தின் அருகில் உள்ள கொளப்பாக்கத்தில் உள்ள 146 வீடுகளின் உயரத்தை குறைக்க வேண்டும் என்று விமான நிலைய ஆணையம் அனுப்பிய நோட்டீஸ் சர்ச்சையாகி உள்ளது. கொளப்பாக்கம் ஊராட்சியில் வீடு கட்டும்போது சி.எம்.டி.ஏ சான்றுடன் சேர்த்து, விமான நிலைய ஆணையத்திடம் தடையில்லா சான்றிதழ் பெற்றுதான் வீடு கட்டியிருக்கிறார்கள் என்பதால், நோட்டீசுக்கு அந்த கிராமத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

சென்னை மீனாம்பாக்கத்தில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்க தடையாக இருப்பதாக கூறி , கொளப்பாக்கம் ஊராட்சியில் உள்ள 146 வீடுகளின் உயரத்தை குறைக்க, விமான நிலைய அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியதற்கு அந்த கிராமத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்ட எல்லைக்கு உட்பட்ட பகுதி தான் கொளப்பாக்கம் ஊராட்சி. இது சென்னை விமான நிலையத்தின் ஓடுபாதையை ஒட்டி அமைந்துள்ளது. சென்னை புறநகரில் பெரிய வளர்ச்சி ஏற்பட்ட நிலையில், இங்கு ஏராளமான குடியிருப்புகள் உள்ளது. இந்நிலையில் விமான நிலைய விரிவாக்க பணிக்காக இங்குள்ள சில வீடுகளை கையகப்படுத்த போவதாக ஏற்கனவே விமான நிலைய அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கி இருந்தனர் இதற்கு அப்பகுதி மக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தும் வந்தனர்.

வீடுகள் உயரம்

வீடுகள் உயரம்

இந்நிலையில் கொளப்பாக்கத்திலுள்ள 146 வீடுகளின் உயரம், விமானம் தரை இறங்க இடையூறாக இருப்பதாகவும், எனவே அவ்வீடுகளின் உயரத்தை குறைக்க வேண்டுமென விமான நிலைய அதிகாரிகள் கடந்த மாதம் நோட்டீஸ் வழங்கினர். இடத்திற்கு ஏற்றார் போல், ஒவ்வொரு வீட்டின் உயரத்தையும் 5 மீட்டரில் இருந்து 9 மீட்டர் வரை குறைக்க வேண்டும் என அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதாவது உயரமான வீடுகளை இடித்து உயரத்தை குறைக்க வேண்டும் என்பது தான் நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ள உத்தரவாகும்.

ஒரு மாதம் டைம்

ஒரு மாதம் டைம்

ஏன் இந்த நோட்டீஸ் என்றால். சென்னை விமான நிலைய 12-வது ஓடுதளத்தை வந்தடையும் விமானங்களின் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதால் நோட்டீஸ் கொடுக்ககப்பட்டிருக்கிறது. இது பற்றி அந்த கிராமத்தினர் கூறும் போது, நோட்டீஸ் அனுப்பபட்ட 145 வீடுகளுமே சி.எம்.டி.ஏ சான்றுடன் சேர்த்து, விமான நிலைய ஆணையத்திடம் தடையில்லா சான்றிதழ் பெற்றுதான் கட்டப்பட்டவை என்கிறார்கள். அப்படியா சூழலில் திடீரென வீடுகளின் உயரத்தை ஒரு மாதத்தில் குறைக்க கோருவது நியாமில்லை என்று கொதிக்கிறார்கள். அவர்கள் அரசின் கவனத்திற்கும் இந்த நோட்டீஸ் விவகாரத்தை கொண்டு சென்று இருக்கிறார்கள்.

எதிர்ப்பு

எதிர்ப்பு

இதேபோல் கொளப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் மாலதி எசுபாதம் தலைமையில் கொளப்பாக்கம் ஊராட்சி மன்றத்தில் குடியிருப்புகளின் உயரத்தை குறைக்க வலியுறுத்திய விமான நிலைய அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அது மட்டுமின்றி இங்குள்ள விமான நிலைய விரிவாக்க பணிக்காக குடியிருப்புகளை கையகப்படு்த்த கூடாது எனவும் அதற்கு தடையில்லா சான்றுகள் வழங்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

அதிகாரிகள் விளக்கம்

அதிகாரிகள் விளக்கம்

விமான நிலைய ஆணையமே விதிப்படி தான் நோட்டீஸ் அனுப்பி உயரத்தை குறைக்க கோரியிருக்கிறோம் என்று கூறியுள்ளது. விமானம் தரையிறங்க தடையாக உள்ள வீடுகளின் மீது உள்ள வாட்டர் டேங்க், கோபுரங்கள், மரங்கள் போன்றவற்றின் உயரத்தை குறைக்க கோரியுள்ளோம் என்று கூறப்பட்டிருக்கிறது. அரசு அதிகாரிகள் தரப்பிலோ, மக்களின் கோரிக்கைகள் குறித்து விமான நிலைய அதிகாரிகளின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு விரைவில் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்கிறார்கள். நோட்டீஸ் பெற்ற மக்களோ தங்கள் வீடுகள் இடிக்கப்படுமோ என்ற அச்சத்தில் உள்ளார்கள்.

ஏன் இடிக்க வேண்டும்

ஏன் இடிக்க வேண்டும்

146 வீடுகளின் உயரத்தை குறைக்க அளித்திருக்கும் நோட்டீசில் ஊராட்சி மன்ற தலைவரின் வீடும் இருக்கிறது. வீட்டின் உயரங்களை குறைக்க வலியுறுத்தி வரும் விமானத்துறை அதிகாரிகள் அதற்கான இழப்பீடு தொகையை எவ்வாறு வழங்குவார்கள் என்ற கேள்வியையும் கிராமத்தினர் சிலர் முன்வைக்கிறார்கள். தற்போது பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைய உள்ள நிலையில், எதற்காக வீடுகளின் உயரத்தை குறைக்க வேண்டும் என்றும் சிலர் கேள்வி எழுப்பினார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+