Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாதம் 1000 கட்டினால் 16000 .. சென்னையில் மக்களை ஏமாற்றும் சிறுசேமிப்பு திட்டங்கள்.. அறிய வேண்டியவை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்தவர் ராஜேஷ்குமார். இவரும், இவரது மனைவி டெய்சி இசபெல்லா இவர்கள் இருவரும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் ஒன்றை அளித்துள்ளனர். அந்த புகாரில் தங்களுக்கு நன்கு அறிமுகம் ஆன தம்பதி, சிறுசேமிப்பு திட்டம் என்ற பெயரில் நம்ப முடியாத அளவிற்கு பணம் தருவதாக கூறி 66 லட்சம் மோசடி செய்துவிட்டதாக கூறியிருந்தனர். இந்த புகாரின் பேரில் தமிழ்செல்வி மற்றும் பிரபு தம்பதியை கைது செய்தனர்.

மாதம் ரூ.1,000 செலுத்தியிருந்தால், 12 மாதங்கள் கழித்து ரூ.16 ஆயிரம் திருப்பிக்கொடுக்கப்படும் என்று சேமிப்பு திட்டம் என்ற பெயரில் சென்னையில் பல லட்சம் மோசடி நடந்துள்ளது. உண்மையில் இதில் முதலீடு செய்த ஏமாந்தவர்கள் பலர் இருக்கிறார்கள். மாதம் ரூ.1,000 வீதம் 12 மாதங்கள் செலுத்தினால், மொத்தமாக ஒருவர் செலுத்தி முடிக்கும் தொகை ரூ.12,000 ஆகும். இந்த ரூ.12,000 தொகைக்கு, 12 மாதங்கள் முடிவில் ரூ.16,000 திருப்பிக் கொடுக்கப்படும் என்று சேமிப்புத் திட்டத்தில் கூறியிருக்கிறார்கள். அது உண்மையில் நடைமுறைக்கு சாத்தியமே இல்லாதது. மிகவும் அதிகமான வருமானத்தை தருவதாக ஆசை வார்த்தை கூறியிருக்கிறார்கள்.

Chennai Alert The 1 000-to- 16 000 Scheme is a Gimmick Small Savers Beware of Fraud

எப்படி சாத்தியமில்லை

இது ஏன் ஏமாற்று வேலை என்று தெரியாமலேயே பல லட்சங்களை கட்டி ஏமாந்துள்ளார்கள். ரூ.12,000 முதலீட்டிற்கு ரூ.4,000 லாபம் என்பது 12 மாத காலத்தில் மிக மிக அதிகமான வருமான விகிதத்தைக் குறிப்பதாகும். இது முறையான வங்கி அல்லது தபால் அலுவலக சேமிப்புத் திட்டங்களில் கிடைக்கும் வட்டி விகிதங்களை விடப் பல மடங்கு அதிகம். ஏன் பங்குச் சந்தைகள் அல்லது பிற அபாயகரமான முதலீடுகளில் கூட, ஒரு வருடத்தில் இவ்வளவு நிலையான மற்றும் அதிக லாபம் கிடைப்பது எதார்த்தமே இல்லை..

தலைமறைவாகிவிடுவார்கள்

ஆனால் நிறுவனங்கள் சில இப்படி கவர்ச்சி வாக்குறுதி அளிக்கின்றன. ஆனால் இவை பெரும்பாலும் முதலீட்டாளர்களை ஏமாற்றும் பொன்சி அல்லது பிரமிட் திட்டங்களின் அடையாளங்கள் ஆகும். இதில், புதிய முதலீட்டாளர்களிடம் இருந்து பெறும் பணத்தைக் கொண்டே பழைய முதலீட்டாளர்களுக்குத் திருப்பிக் கொடுப்பார்கள். ஒரு கட்டத்தில் புதிய முதலீட்டாளர்கள் வராதபோது, ​​கடையை மூடிவிட்டு தலைமறைவாகிவிடுவார்கள். அப்படித்தான் சென்னையில் நடந்துள்ளது.

மாத சிறுசேமிப்பு திட்டம்

சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்தவர் ராஜேஷ்குமார். இவரும், இவரது மனைவி டெய்சி இசபெல்லாவும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் பரபரப்பு புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த புகார் மனுவில் அவர் கூறுகையில், "ராஜேஷ்குமார் டெய்சி இசபெல்லா ஆகிய எங்களுக்கு தமிழ்செல்வி (வயது 38), அவரது கணவர் பிரபு (41) ஆகியோர் நன்கு அறிமுகம் ஆனவர்கள் ஆவார். தமிழ் செல்வி, பிரபு தம்பதி சேர்ந்து மாத சிறுசேமிப்பு திட்டம் என்ற பெயரில் ஒரு திட்டம் ஆரம்பித்தார்கள். அந்த திட்டத்தின்படி ஏராளமான நபர்களிடம் மாதந்தோறும் பணம் வசூலித்தார்கள்.

16000 பணம்

அந்த தம்பதி, மாதம் ரூ.1,000 செலுத்தியிருந்தால், 12 மாதங்கள் கழித்து ரூ.16 ஆயிரம் திருப்பிக்கொடுக்கப்படும் என்று அறிவித்திருந்தார்கள். இந்த சிறுசேமிப்பு திட்டத்தில் நாங்களும் ரூ.8.5 லட்சம் செலுத்தினோம். எங்களை போல் ஏராளமான பேர் பணம் கட்டினார்கள். ஒருகட்டத்தில் வசூலித்த பணம் எதையும் திருப்பிக் கொடுக்காமல் தமிழ்செல்வியும் அவரது கணவர் பிரபுவும் தங்களது நிறுவனத்தை மூடிவிட்டு தலை மறைவாகிவிட்டார்கள். சுமார் 38 பேர்களிடம் ரூ.66 லட்சம் வரை வசூலித்து மோசடி செய்து விட்டார்கள். அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து, அவர்கள் ஏமாற்றிய பணத்தை வசூலித்து தரும்படி கேட்டுக்கொள்கிறாம்" இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

3 பேர் கைது

இதுதொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். மோசடி நபர்களான வியாசர்பாடியை சேர்ந்த தமிழ்செல்வியும், அவரது கணவர் பிரபுவும் கைது செய்யப்பட்டனர். மோசடிக்கு துணையாக செயல்பட்ட தமிழ்செல்வியின் தாயார் சரஸ்வதி (65) என்பவரும் கைதானார். கைதான 3 பேரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+