வாடிக்கையாளரின் புத்தம் புதிய காரை.. சென்டர் மீடியனில் ஏற்றி உடைத்த சென்னை உணவக ஊழியர்
சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டையில் ஓட்டலுக்கு புத்தம் புதிய காரை வாடிக்கையாளர் ஓட்டி வந்த நிலையில், அந்த காரை ஓரமாக நிறுத்துவதற்காக எடுத்து சென்ற உணவக ஊழியர், சென்டர்மீடியனில் மோதி, மற்றொரு காரில் மோதி காரை உடைத்துவிட்டார்.
புத்தம் புதுசா கார் வாங்கிவிட்டு வந்து அந்த கார் உடனே உடைந்து போனாலோ, விபத்தில் சிக்கினாலோ அது கார் ஓனருக்கு தீராத வலியை ஏற்படுத்தும். அதுவும் அவர் ஓட்டாமல், சம்பந்தமே இல்லாத வேறு ஒருவர் ஓட்டி சென்று விபத்தை ஏற்படுத்தினால், நொந்து போய்விடுவார். அப்படியான ஒரு சம்பவம் தான் சென்னை ஆழ்வார்பேட்டை பகுதியில் நடந்துள்ளது.

சென்னை ஆழ்வார்பேட்டை கஸ்தூரி ரங்கா சாலை 3வது தெருவில் பிரபலமான உணவகம் ஒன்று செயல்படுகிறது. இந்த உணவகத்திற்கு கடந்த அக்டோபர் 15ம் தேதி (ஞாயிறு) அன்று இரவு 9.30 அளவில் வாடிக்கையாளர் ஒருவர் புத்தம் புதிய காரை எடுத்துக் கொண்டு வந்துள்ளார்
காரை கடையின் முன்பு நிறுத்தினால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்று கூறி, காரை பக்கத்து தெருவில் நிறுத்துகிறேன். அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படாது என்று கூறியிருக்கிறார் உணவக ஊழியர் காளிராஜ். இதனால் வாடிக்கையாளரும் ஆசையாய் வாங்கிய புத்தம் புதிய காருக்கு எந்த பிரச்சனையும் வந்துவிடக்கூடாது என்று கருதி காளிராஜிடம் சாவியை கொடுத்துள்ளார்.
உணவக ஊழியர் காளிராஜ் காரை அருகில் உள்ள தெருவில் நிறுத்தாமல், கதீட்ரல் சாலையை நோக்கி காரை ஓட்டினார் . காரை அவர் மிகவும் அலட்சியமாக வேகமாக ஓட்டிச் சென்றதால், முதலில் மற்றொரு காரின் மீது சட்டென மோதியது, பின்னர் சென்டர் மீடியனில் மோதி அதன் மீது ஏறி அபாயரகமாக தொங்கியபடி நின்றது.
உணவக ஊழியர் காளிராஜ் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார், ஆனால் இந்த விபத்தில் காரின் முன் பகுதி முற்றிலும் சேதமடைந்தது. மேலும் இந்த விபத்தால் கதீட்ரல் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கார் விபத்து ஏற்பட்டதை அடுத்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அசோக் நகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் நேரில் வந்து காரை சென்டர் மீடியனில் இருந்து இறக்கி, காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, ஓட்டுநர் காளிராஜை கைது செய்து, அவரிடம் முறையான ஓட்டுனர் உரிமம் உள்ளதா என விசாரித்து வருகின்றனர்.
புத்தம் புதிய காரை ஓரமாக நிறுத்துவதாக கூறி உணவக ஊழியர் விபத்தை ஏற்படுத்தியதை கேட்டு அந்த காரின் உரிமையாளர் நொந்துபோனார். இந்த விபத்தால் சென்னை ஆழ்வார்பேட்டை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications