அசந்துபோய் நின்ற அம்பத்தூர்.. அள்ளி கொடுத்த அமைச்சர்கள்! 6,000 பேருக்கு வீட்டுமனைப் பட்டா விநியோகம்
சென்னை: அம்பத்தூர் தொகுதியில் 6,007 பேருக்கு வீட்டுமனை பட்டாக்களை வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ். முத்துசாமி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஆகியோர் வழங்கியுள்ளனர்.
நேற்று நடந்த இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் திட்டத்தின் கீழ் 2,445 பட்டாக்களும், நகர்ப்புற நில வருவாய் திட்டத்தின் கீழ் 3,500 பட்டாக்களும் வழங்கப்பட்டுள்ளன. இது தவிர, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் திட்டங்களின் கீழ் 62 பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில், 6,007 பட்டாக்களும் கணினி பட்டாக்கள் என்பதுதான். கணினி பட்டாக்களால், திட்ட அனுமதி பெறுவதற்கும், தங்கள் வீட்டு மனையினை மகன் மற்றும் மகளின் பெயரில் பத்திரபதிவு செய்வதற்கும், விற்பனை செய்வதற்கும், வங்கியில் கடன் பெறுவதற்கும் எந்த தடையும் இருக்காது.
இது தொடர்பாக அரசு தரப்பில் விடுக்கப்பட்டிருந்த அறிவிப்பில், "சென்னை மாவட்டம் மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் வீட்டுமனைப் பட்டா வழங்குவதில் உள்ள நடைமுறை சிக்கல்களுக்கு தீர்வுகாண தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுரைக்கிணங்க, தமிழ்நாடு துணை முதலமைச்சர் மேற்கொண்ட கலந்தாலோசனை கூட்டத்தை தொடர்ந்து, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் தலைமையில், வீட்டுவசதி (ம) நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர், குறு, சிறு (ம) நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர், மருத்துவம் (ம) மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு செயலாளர்கள் மற்றும் துறைத் தலைவர்கள் ஆகியோர் உறுப்பினர்களாக கொண்ட மாநில அளவிலான உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் கணினி பட்டாக்கள் விநியோகிக்கப்பட்டிருக்கின்றன. கணினி பட்டாக்கள் வழங்குவதன் மூலம் திட்ட அனுமதி பெறுவதற்கும் தங்கள் வீட்டு மனையினை மகன் மற்றும் மகளின் பெயரில் பத்திரபதிவு செய்வதற்கும், விற்பனை செய்வதற்கும், வங்கியில் கடன் பெறுவதற்கும் இருந்த தடைகள் நீக்கப்பட்டு வாழ்வில் முன்னேற்றம் அடைய வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அம்பத்தூர் என்பது திருவள்ளூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தாலும், அது வடசென்னையின் ஓர் அங்கமாகவே அறியப்படுகிறது. இங்கு வாழும் மக்கள் பல ஆண்டுகளாக பட்டா கோரி அரசிடம் விண்ணப்பித்திருந்தனர். இதனையடுத்து தற்போது பட்டா விநியோகிக்கப்பட்டிருப்பது மக்களிடையே வரவேற்பை பெற்றிருக்கிறது.
-
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்












Click it and Unblock the Notifications