சென்னை தொழிலதிபருக்கு மறக்க முடியாத பரிசு.. ஆங்கிலோ இந்திய பெண், கணவருடன் சிக்கியது எப்படி?
சென்னை: சென்னை ஓட்டேரி பகுதியை சேர்ந்த சார்சல் என்ற தொழில் அதிபரை உல்லாசமாக இருக்கலாம் வாங்க, என்று அழைத்து தொழில் அதிபரை தாக்கி நகை, பணத்தை பறித்த வழக்கில் தலைமறைவாக இருந்த ஆங்கிலோ இந்திய பெண்ணும், அவரது காதல் கணவரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் எப்படி சிக்கினார்கள் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
சென்னை ஓட்டேரி பகுதியை சேர்ந்த 50 வயதாகும் சார்லஸ் என்ற தொழில் அதிபர் தேக்குமரம் உள்ளிட்ட பல்வேறு மரங்களை மொத்தமாக வாங்கி விற்பனை செய்யும் கடையை நடத்தி வருகிறார். இவர் அண்ணா நகரில் உள்ள மசாஜ் கிளப்பிற்கு சென்று மசாஜ் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த கிளப்பில் ஆண்ட்ரியா என்ற ஆங்கிலோ-இந்திய பெண் பணியாற்றி உள்ளார். அவருடன் சார்லசுக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி வந்தார்களாம்.

கடந்த மே மாதம் 29-ந்தேதி ஆண்ட்ரியா, தொழிலதிபர் சார்லசுக்கு செல்போனில் அழைத்து பேசினாராம். அப்போது சூளைமேட்டில் வசிக்கும் தனக்கு தெரிந்த 60 வயதாகும் ரேகா சாவித்திரி என்பவர் சொகுசு விடுதி நடத்தி வருவதாகவும். அங்கு வித்தியாசமான உல்லாசத்தை அனுபவிக்கலாம் என்றும் கூறினாராம். சூளைமேடு சொகுசு விடுதியில் இன்ப விருந்து காத்திருக்கிறது என்றும் சார்லசுக்கு அழைத்தாராம். இதனை நம்பி சபலப்பட்டு சார்லஸ், சூளைமேட்டில் உள்ள சொகுசு விடுதிக்கு சென்றாராம்.
அங்கே ரேகா சாவித்திரி என்ற பெண்ணும் 2 இளைஞர்களும் இருந்தனர். விடுதிக்குள் சென்ற உடனேயே அங்கிருந்த ஆண்கள் இருவரும் தங்களை காவலர்கள் என்று அறிமுகம் செய்துகொண்டு, சார்லசை கடுமையாக தாக்கினார்களாம். இதில் சார்லஸ் அதிர்ச்சி அடைந்த நிலையில், அவர் அணிந்திருந்த 20 பவுன் தங்கச்சங்கிலி, கைச்சங்கிலி ஆகியவற்றையும் விலை உயர்ந்த கைக்கடிகாரத்தை பறித்துவிட்டார்களாம். 'கூகுள் பே' மூலம் சார்லசின் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.40 ஆயிரத்தையும் பறித்தார்களாம். பின்னர் சார்லசை அங்கிருந்து விரட்டி அடித்தனர். வெளியில் சொன்னால் அசிங்கம் என்று நினைத்து விட்டுவிடுவார் என நினைத்த கொள்ளையர்களுக்கு அதன்பின்னர் தான் சிக்கல் வந்தது.
இதுகுறித்து சார்லஸ் தைரியமாக போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து சூளைமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். குறிப்பிட்ட சொகுசு விடுதிக்கும் சென்று போலீசார் விசாரித்தனர். ஆனால் அந்த சொகுசு விடுதியில் யாரும் இல்லை என்று கூறப்படுகிறது மசாஜ் அழகி ஆண்ட்ரியாவும் அவரது காதல் கணவர் கோகுல கிருஷ்ணனும்தான் சார்லஸ் தாக்கப்பட்டு நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டதற்கு மூளையாக செயல்பட்டதை விசாரணையில் போலீசார் கண்டுபிடித்தனர். இதனிடையே போலீஸ் தேடுவதை அறிந்த அவர்கள் இருவரும் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.
மசாஜ் செய்து பணம் பறிப்பில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ரேகா சாவித்திரி என்ற பெண்ணும் போலீஸ்காரராக நடித்த நவீன்குமார் (23) என்ற இளைஞர் மட்டும் அப்போது கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் தலைமறைவான ஆண்ட்ரியாவையும், அவரது காதல் கணவர் கோகுல கிருஷ்ணனையும் போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். இதற்கிடையே நேற்றுமுன்தினம் அவர்கள் இருவரும் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து நகைகள் மீட்கப்பட்டன. அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
-
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
15 out of 16: சென்னை மாவட்டத்தில் எத்தனை தொகுதிகளில் திமுக போட்டி? சத்யராஜ் மகளுக்கு சீட் இல்லை! -
அண்ணா நகர் முதல் வில்லிவாக்கம் வரை.. சென்னையில் 6 சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு ‘கல்தா’.. லிஸ்ட் -
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
Vijay: வேணும்னே பண்றாங்க.. 10 குற்றச்சாட்டுகளுடன் தலைமை செயலகத்துக்கு நேரில் போன விஜய்! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
நிலத்தைத் தோண்டும்போது தங்கம், சிலைகள் கிடைத்தால் செய்ய வேண்டியவை? கவனிக்காவிட்டால் ஜெயில் நிச்சயம் -
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
சென்னையில் வீடுகளுக்கு குழாய் மூலம் கேஸ்.. கட்டணம், பாதுகாப்பு எப்படி.. அதிகாரி விளக்கம் -
சென்னையில் ஓஎம்ஆர், தி நகரில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி.. தேடி வந்து விதிக்கப்படும் அபராதம் -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா!











Click it and Unblock the Notifications