சென்னை உள்பட 4 மாவட்டங்களில் இன்று முதல் ரூ 1000.. வீட்டுக்கே வந்து விநியோகம் செய்யும் அதிகாரிகள்
சென்னை: முழு ஊரடங்கு அமலில் உள்ள சென்னை, காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்டங்களில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ 1000 நிவாரணம் வழங்கப்படுகிறது. அந்த உதவி அவர்களின் இருப்பிடங்களுக்கே சென்று விநியோகம் செய்யப்படுகிறது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் தினமும் கொரோனாவால் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகிறார்கள்.

கொரோனா பரவலை தடுக்க கடந்த 19-ஆம் தேதி முதல் இந்த மாதம் முடிய 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணத் தொகையாக தலா ரூ 1000 வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். இதனை செயல்படுத்தும் விதமாக இன்று முதல் 26-ஆம் தேதி வரை 5 நாட்கள் ரேஷன் கடைகள் செயல்படாது என்றும் ஜூன் மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்களை பெறாதவர்கள் 27-ஆம் தேதி முதல் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
-
சர்க்கரை அட்டை உங்களிடம் இருக்கா? சென்னை மக்களுக்கு ஒரே நாளில் பெயர் மாற்றத் தீர்வு தரும் தமிழக அரசு -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
இதுதான் மாற்றமா? சென்னை அரசு மருத்துவமனையில்.. இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்! மக்கள் ஷாக் -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா!












Click it and Unblock the Notifications