சென்னை புறநகர் பகுதியில் குபீர்னு ஏறிய அரிசி விலை..ஒரு மூட்டை அரிசி எவ்ளோனு பாருங்க.. என்ன நடக்குது
சென்னை: திடீரென தமிழகத்தில் அரிசி விலை உயர்ந்துள்ளது.. பருவமழை தொடங்கியிருக்கிறது என்றாலும், இந்த அரிசி விலை உயர்வால், ஏழை, எளிய மக்கள் வெகுவாக பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.
அரிசியின் விலை, 2 மாதங்களுக்கு முன்பே உயர்ந்துவிட்டது.. இந்த விலை உயர்வுக்கு அப்போது சில காரணங்கள் சொல்லப்பட்டன.. குறிப்பாக தமிழகத்துக்கு கிடைக்கவேண்டிய பருவமழை குறைந்துவிட்டதால்தான், அரிசி விலை உயர்ந்துள்ளது என்றார்கள்..

இயற்கை சீற்றம்: மழை, வெள்ளம் காரணமாக வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் நெல், அரிசி போன்றவற்றின் வரத்து குறைந்துவிட்டதுதான் காரணம் என்றார்கள்.. பேக்கேஜ் செய்யப்பட்ட அரிசி, சோளம் போன்றவற்றை, 5 சதவீத ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வருவதற்கான அறிவிப்பு வெளியானதுதான், இந்த விலை உயர்வுக்கு காரணம் என்றும் சொன்னார்கள்.
தமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக குறுவை சாகுபடி வெகுவாக குறைந்துள்ளதாகவும், இதனாலேயே அரிசி விலையும் வெகுவாக உயர்ந்துவிட்டதாகவும் தஞ்சை, நாகை மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்ட விவசாயிகள் காரணம் தெரிவித்தார்கள்.. எனினும், காவிரி நீர் பற்றாக்குறைதான் இதற்கெல்லாம் பிரதான காரணம் என்று குமுறி தீர்த்துவிட்டார்கள் டெல்டா விவசாயிகள்..
காவிரி நீர்: குறுவை விளைச்சல் கடுமையான பாதிக்கப்பட்டுவிட்டதால், கர்நாடகாவிலிருந்து டெல்டா மாவட்டங்களுக்கு வரும் அரிசி லோடுகளின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது. அதனாலேயே, கடந்த மாதங்களில், கர்நாடக பொன்னி, மைசூர் பொன்னி அரிசிகளின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.4 வீதம் மூட்டை ஒன்றுக்கு ரூ.100 வரை விலை அதிகரித்தது, இது அடுத்தடுத்த மாதங்களில் அரிசியின் விலையை மேலும் உயர வாய்ப்புள்ளது என்று வியாபாரிகள் கவலை தெரிவித்திருந்தனர்.
அவர்கள் பயந்ததுபோலவே, அரிசியின் விலை இப்போது மறுபடியும் உயர்ந்துவிட்டது.. கடந்த 2 வாரமாகவே, விலை அதிகமாக காணப்படுகிறது.. சென்னை மற்றும் புறநகர் மாவட்ட பகுதியில் அனைத்து அரிசி வகையும் 25 கிலோ மூட்டை ரூ.200 வரை அதிகரித்திருக்கிறதாம்.. ரூ.900 ஆக இருந்த சாப்பாடு அரிசி, இந்த 10 நாட்களில் 50 ரூபாய் வீதம் படிப்படியாக அதிகரித்து, ரூ.1100-க்கு விற்பனைக்கு செய்யப்படுகிறது.
பச்சரிசி விலை: ரூ.1200 ஆக இருந்த உயர்ரக சாப்பாடு அரிசி மூட்டை ரூ.1400 ஆக அதிகரித்துள்ளது.. ரூ.1400 ஆக இருந்த மூட்டை ரூ.1550 வரை உயர்ந்தது. பச்சரிசி 26 கிலோ மூட்டை ரூ.1350ஆக இருந்தது, கிலோ 56க்கு விற்கப்பட்டது.. இப்போது மூட்டை ரூ.1450 ஆக எகிறிவிட்டது. இதே போல் இட்லி அரிசி விலையும் அதிகரித்துள்ளது.. நெல்வரத்து பற்றாக்குறையானதுதான், இதற்கெல்லாம் என்று அரிசி உற்பத்தியாளர்கள் மீண்டும் காரணம் தெரிவித்துள்ளனர்.
ஆந்திரா, கர்நாடகாவிலிருந்து 100 லாரிகளில் வரவேண்டிய நெல், தற்போது 10 லாரிகள்தான் வருகிறதாம். இதே நிலை நீடித்தால், டிசம்பர் மாதம் வரை விலை உயரும் என்றும், ஜனவரி மாதம் புது நெல் வந்தபிறகு தான் விலை குறையும் என்றாலும், பழைய அரிசிக்கு தான் தேவை அதிகரிக்கும் என்பதால், ஜனவரி மாதம் வரை அரிசி விலை உயர்வாகவே இருக்கும் என்று அரிசி வியாபாரிகள் அச்சம் தெரிவிக்கிறார்கள்..
பருவமழை: இந்த திடீர் அரிசி உயர்வால், வெகுஜன மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.. எனினும், தற்போது பருவமழை தொடங்கியிருப்பதால், எப்படியும் இந்த அரிசி விலை விரைவில் குறைந்துவிடும் என்று நம்பப்படுகிறது. பார்ப்போம்..!!!!
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications