சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இலங்கை குண்டுவெடிப்பு எதிரொலி.. பை எடுத்து வராதீங்க.. சென்னை அண்ணா நகர் தேவாலயம் தடை

Google Oneindia Tamil News

Recommended Video

    இலங்கை குண்டுவெடிப்பு எதிரொலி... மதுரை ரயில் நிலையத்தில் பலத்த பாதுகாப்பு-வீடியோ

    சென்னை: இலங்கை குண்டுவெடிப்பு எதிரொலியாக சென்னை அண்ணா நகர் செயின்ட் லூக்ஸ் தேவாலயத்தில் பை எடுத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சர்ச் வளாகத்துக்குள் பொதுமக்கள் வாகனம் நிறுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் தினத்தின் போது தேவலாயங்களை குறித்து தற்கொலை தீவிரவாதிகள் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்த்தினர். கொடூரமாக நிகழ்த்தப்பட்ட இந்த சம்பவத்தில் 360ககும் மேற்பட்டோர் உடல் சிதறி உயிரிழந்தனர். நேற்றும் மனித வெடிகுண்டுகள் நடத்திய குண்டுவெடிப்பில் 15 பேர் இலங்கையில் கொல்லப்பட்டனர்.

    Chennai Anna Nagar St. Lukes church ban to take the bag

    இந்த வெடிகுண்டு பீதி தமிழகத்திலும் காணப்படுகிறது. தமிழகத்திற்கு தீவிரவாதிகள் நுழைந்துவிட்டதாக பரவும் வதந்திகள் காரணமாகவும். தமிழகத்தில் அச்சம் நிலவுகிறது.

    வளர்த்தவரை கொத்த வந்த பாம்பை கடித்து கொன்ற பப்பி நாய்.. விஷம் ஏறியதால் உயிர் விட்டதுவளர்த்தவரை கொத்த வந்த பாம்பை கடித்து கொன்ற பப்பி நாய்.. விஷம் ஏறியதால் உயிர் விட்டது

    குறிப்பாக குண்டுவெடிப்பு பீதி காரணமாக சென்னையில் உள்ள தேவலாயங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் சர்ச்களுக்கு பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணாநகரில் உள்ள செயின்ட் லூக்ஸ் என்ற தேவாலயத்தில் புதிய அறிவிப்பு ஞாயிற்றுக்கிழமையான இன்று வெளியிடப்பட்டு இருந்தது.

    Chennai Anna Nagar St. Lukes church ban to take the bag

    இதன்படி தேவாலயத்துக்கு வரும் நபர்கள் தங்களது வாகனங்களை சர்ச் வளாகத்துக்குள் நிறுத்தக்கூடாது. மேலும் பை (Bag) கொண்டுவரக்கூடாது என்று பொதுமக்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

    English summary
    Chennai Anna Nagar St. Luke's church banned to take the bag inside church
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X