Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பீறிட்ட சபலம்.. ஆடி ஆஃபரில் வந்த "ஆயில் மசாஜ்".. சென்னை அண்ணாநகர் மசாஜ் சென்டரில் யாருங்க அந்த பொண்ணு

Subscribe to Oneindia Tamil

சென்னை: அண்ணா நகர் கிழக்கு பகுதியில் வசித்து வருகிறார் அந்த இளைஞர்.. 25 வயதாகிறது.. ஒரு கம்பெனியில் சாப்ட்வேர் என்ஜினியராக வேலை பார்த்து வருகிறார்.

இவருடைய வீட்டுக்கு பக்கத்திலேயே இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார்.. அக்கம்பக்கம் வீடு என்பதால், இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. எங்கே வேலை பார்க்கிறீர்கள் என்று கேட்டதற்கு, ஒரு தனியார் நிறுவனம் பெயரை சொன்னாராம் அந்த பெண்..

Chennai Annanagar Oil Massage and What happened to the young man at the Massage Center

நெருக்கம்: நாளுக்கு நாள் இருவருக்குள்ளும் நெருக்கம் அதிகமாகி உள்ளது.. ஆனால், அந்த பெண்ணின் நடவடிக்கையில், இளைஞருக்கு திடீர் சந்தேகம்..

இறுதியில், அந்த பெண், அண்ணா நகரில் உள்ள, ஒரு மசாஜ் சென்டரில் வேலை பார்த்து வருவதை இளைஞர் உறுதிசெய்துவிட்டார். இதை பற்றி கேட்டதற்கு முதலில் மறுத்தாலும், பிறகு, ஆதாரத்துடன் இளைஞர் சொன்னதை வைத்து, வேறு வழியின்றி அந்த பெண் ஒப்புக்கொண்டாராம்.

ஆயில் மசாஜ்: அதற்கு பிறகு, மசாஜ் சென்டர் என்றால் என்ன? அங்கு என்னவெல்லாம் நடக்கும்? என்பது குறித்து விலாவரியாக இளைஞருக்கு விளக்கி உள்ளார்.. அதில் ஒன்றுதான் ஆயில் மசாஜ். சொக்கவைக்கும் இந்த ஆயில் மசாஜ் பற்றி கேட்டவுடனேயே, இளைஞருக்கு ஆர்வம் அதிகரித்தது.. ஆசையும் அதிகரித்தது. நாளடைவில் ஆயில் மசாஜ்ஜூக்கு அடிமையும் ஆகிவிட்டார் அந்த இளைஞர்.

ஆயில் மசாஜ் இடங்களை பற்றியெல்லாம் விவரம் சேகரித்தார்.. எங்கெல்லாம் ஆயில் மசாஜ் செய்வதாக, தன்னுடைய வாட்ஸ்அப்புக்கு மெசேஜ் வருகிறதோ, அங்கெல்லாம் போக ஆரம்பித்தார்.. இதற்காக, அந்த பெண், இளைஞரிடம் பணம் வாங்கி வந்திருக்கிறார்.. ஒருகட்டத்தில் இருவருக்குள்ளும் தகராறு வெடிக்கவும், அந்த பெண்ணுடன் பழகுவதை இளைஞர் நிறுத்திவிட்டார். இதனால் உச்சக்கட்ட ஆத்திரத்துக்கு போன அந்த பெண், இளைஞரை பழிவாங்க முடிவு செய்தார்.

மசாஜ் சென்டர்: அதற்காக, வேறொரு மசாஜ் சென்டரில் இருந்து அனுப்புவதுபோல, தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து, அந்த இளைஞருக்கு மெசேஜ் அனுப்பியிருக்கிறார் இளம்பெண்.. ஆனால், இது தெரியாத இளைஞரோ, புதிய மசாஜ் சென்டர் என்பதால், சபலப்பட்டுள்ளார்.. எனினும் அந்த நேரத்தில் டியூட்டியில் இருந்தால், மெசேஜ்ஜை அப்படியே விட்டுவிட்டார்.

இதற்குநடுவில், மெசேஜ் அனுப்பியும், இளைஞரிடமிருந்து பதில் வராததால், அந்த கும்பல் இளைஞருக்கு நேரடியாகவே போன் செய்துள்ளது.. இளைஞரிடம் ஒரு பெண் போனில் பேசியுள்ளார்.

சபலப்பேர்வழி: எங்கள் ஸ்பாவில் ஆடி ஆஃபர் தருகிறோம்.. அதனால் கட்டணமும் குறைவு... ஒருமுறை வந்து பாருங்கள் என்று அழைத்துள்ளார். உடனே இந்த இளைஞரும், அந்த மசாஜ் சென்டருக்கு சென்றிருக்கிறார்.

அங்கே பார்த்தால், இளம்பெண்ணுடன், 5 இளைஞர்கள் இருந்திருக்கிறார்கள்.. அனைவரும் சேர்ந்து இளைஞரை சரமாரியாக தாக்கி உள்ளனர். அங்கேயே நிர்வாணமாக்கினார்கள்.. அத்துடன், தவறு செய்ததற்கு மன்னித்து விடுங்கள் என்று எழுதி வாங்கி கொண்டு, இளைஞரிடமிருந்த 15,000 ரூபாயையும், டெபிட் கார்டில் இருந்து, 3,000 ரூபாயையும் எடுத்துக்கொண்டு பறந்தது அந்த கும்பல்.

மூலகாரணம் : இதனால் நிலைகுலைந்துபோன இளைஞர், அண்ணா நகர் போலீசில் புகார் தந்தார். இந்த புகாரின்பேரில் சம்பந்தப்பட்ட பெண் உட்பட அவரது நண்பர்கள் 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். இதில் ஒருவர் கைதும் செய்யப்பட்டுள்ளார். ஆனால், இதற்கெல்லாம் மூலகாரணமான அந்த பெண்ணின் பெயர் ஆண்டன் பெனினா.. அவர் இப்போது மும்பைக்கு எஸ்கேப் ஆகிவிட்டாராம்.. அவரை கைது செய்யும் முயற்சியில் நம் போலீசார் இறங்கி உள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+