தமிழர்களின் பெருமையை உலகிற்கு அறிய செய்தவர்.. டெல்லிக்கு மாற்றம்.. யார் இந்த அமர்நாத் ராமகிருஷ்ணன்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தொல்லியல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த அமர்நாத் ராமகிருஷ்ணன் டெல்லிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னையில் பணியாற்றி வந்தவரை டெல்லிக்கு பணியிட மாற்றம் செய்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

சிவகங்கை மாவட்டம், கீழடி அகழாய்வை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தவர் தொல்லியல் துறை அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்னண். கீழடி அகழாய்வு பெரியளவில் பேசப்படுவதற்கு இவரும் முக்கிய காரணமாக இருந்தார்.

Chennai Archaeological Superintendent Amarnath Ramakrishnan transferred to Delhi

சிவகங்கை மாவட்டம், கீழடி அகழாய்வை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தவர் தொல்லியல் துறை அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்னண். கீழடி அகழாய்வு பெரியளவில் பேசப்படுவதற்கு அமர்நாத் ராமகிருஷ்ணன் முக்கிய காரணம் ஆவார்.

தமிழ்நாட்டின் முக்கியமான கோவில் நகரமான திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பிறந்தவர் அமர்நாத் ராமகிருஷ்ணன். பெங்களூரு சரகத்தில் கண்காணிப்பாளராக 2014 - 15களில் பணியாற்றினார். அப்போது வைகை நதி கரையோர பண்டைய தமிழ் குடி மக்களின் நாகரிகத்தை ஆவண செய்யும் நோக்கில் பல்வேறு ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார். அந்த தேடலின் பலனாக தமிழரின் பழம்பெரும் நாகரிக அடையாளமாக போற்றப்படும் கீழடி அகழாய்வு பணியினை செய்தார். அமர்நாத் ராமகிருஷ்ணனின் ஆய்வு மூலமாக உலகிற்கு கீழடி குறித்து தெரியவந்துள்ளது.

கீழடியில் தோண்ட தோண்ட தமிழர்கள் பெருமையை உலகிற்கு சொல்லும் வெளிச்சத்திற்கு வந்து கொண்டே இருந்தது. பல கட்டங்களாக அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது. ஆனால் கீழடியின் முதல் இரண்டு அகழாய்வு பணிகளை மேற்கொண்டவர் தான் தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தான். கீழடி சர்வதேச அளவில் பேசு பொருளான நிலையில் அமர்நாத் ராமகிருஷ்ணனை, மத்திய அரசு வேறு மாநிலத்திற்கு 2017-இல் பணியிட மாற்றம் செய்தது.

இந்நிலையில் கீழடி நாகரிகத்தை உலகறிய செய்து விடக்கூடாது என மேற்கொள்ளப்பட்ட சதி வேலை என தமிழகத்தில் கண்டனங்கள் எழுந்தன. தொடர்ந்து அமர்நாத்தை தமிழ்நாட்டில் பணி மாற்றம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கையும் வைக்கப்பட்டன. சட்டப்போராட்டமும் நடந்தது. இந்த நிலையில் 2021ம் ஆண்டு மீண்டும் அவர் தமிழ்நாட்டில் பணி மாற்றம் செய்யப்பட்டார். இந்த முறை சென்னை சரக ஆலய ஆய்வுப் பிரிவுக்கு கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.

தென்னிந்திய கோயில் ஆய்வுத்துறையின் தொல்லியல் கண்காணிப்பளராக பணியாற்றி வந்த அமர்நாத் ராமகிருஷ்ணன், டெல்லிக்கு பணியிட மாற்றம் செய்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+