சென்னையில் நடிகை மீனாட்சி கோவிந்தராஜனை செருப்பால் அடித்த நபர்.. 5 வருடம் கழித்து பழி வாங்கிய ஜேம்ஸ்
சென்னை வளசரவாக்கம் அடுத்த ஆலப்பாக்த்தில் துணை நடிகை மீனாட்சி கோவிந்தராஜன் , மற்றும் அவரது தாயாரையும் செருப்பால் அடித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தகராறை தொடர்ந்து, தற்போது பழிவாங்கும் நோக்கில் செருப்பால் அடித்ததாக கைதான நபர் போலீசாரிடம் வாக்குமூலம் தந்துள்ளார். யார் அவர், என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் நாம் பார்ப்போம்.
சென்னை , ஆலப்பாக்கம், சாலிகிராமம், மதுரவாயல், விருகம்பாக்கம், வடபழனி, கோடம்பாக்கம் ஆகியவை அடுத்தடுத்து உள்ளன. குறித்து விரும்பாக்கம் தொடங்கி, சாலிகிராமம்,வளசரவாக்கம், ஆலப்பாக்கம் பகுதியில் ஏராளமான திரைப்பட நடிகர்கள், நடிகைககள் குடியிருக்கிறார்கள். பெரும்பாலான சீரியல் நடிகர், நடிகைகள் இங்கு தான் வசிக்கிறார்கள். இந்த பகுதியில் ஏராளமான துணை நடிகைகளும், துணை நடிகர்களும் வசித்து வருகிறார்கள்,

இந்நிலையில் மதுரவாயல் அடுத்து உள்ள ஆலப்பாக்கத்தில் துணை நடிகை மீனாட்சி கோவிந்தராஜன் என்பவர் தனது 50 வயது தாயாருடன் வசித்து வருகிறார். துணை நடிகை மீனாட்சி பல்வேறு திரப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக கென்னடி கிளப், வேலன், கோப்ரா, வீரபாண்டியபுரம், டிமாண்டி காலனி 2, உள்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
இவரது வீட்டின் கதவை நேற்று இரவு மர்ம நபர் ஒருவர் தட்டியதாக கூறப்படுகிறது. கதவை மீனாட்சியின் தாயார் திறந்துள்ளார். அப்போது கண் இமைக்கும் நேரத்தில் துணை நடிகை மீனாட்சி கோவிந்தராஜனை தாயாரை தனது செருப்பால் அந்த மர்ம நபர் தாக்கினாராம். சத்தம் கேட்டு வந்த நடிகை மீனாட்சியையும் அந்த நபர் செருப்பால் ஆவேசமாக தாக்கினாராம். இதை சற்றும் எதிர்பார்க்காத அவர்கள் கூச்சலிட்டனர். இதையடுத்து சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் உடனே அந்த நபரை பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்ததனர்.
இதனிடையே மீனாட்சி தரப்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் பிடிப்பட்ட நபரை போலீசார் கைது செய்தனர். அவரை விசாரித்த போது, அவர் பெயர் ஜேம்ஸ் (42) என்பதும் , ஆலப்பாக்கத்தில் மளிகை கடை நடத்தி வருபவர் என்பதும் தெரியவந்தது.
அவரிடம் எதற்காக நடிகை துணை நடிகை மீனாட்சி கோவிந்தராஜனை செருப்பால் அடித்தாய் என்று போலீசார் விசாரித்துள்ளனர். அதற்கு, அந்த நபர், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தன்னை துணை நடிகை மீனாட்சி கோவிந்தராஜனி தாயார் செருப்பால் அடித்ததால், அவரை பழிவாங்கும் நோக்கில் செருப்பால் தாக்கியதாக ஜேம்ஸ் கூறியுள்ளார். கைதான ஜேம்ஸ் மீது அத்துமீறி நுழைதல், பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
பிரபல துணை நடிகை தீபாவின் தந்தைக்கு அரிவாள் வெட்டு.. டீக்கடையில் பயங்கரம்! என்ன நடந்தது? -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications