சென்னையில் மாலை 5 மணி நிலவரம்! வாக்கு சதவீதத்தில் ஆர்.கே.நகர் டாப்! மயிலாப்பூருக்கு என்னாச்சு?
சென்னை: சென்னையில் மாலை 5 மணி நிலவரப்படி மொத்தம் 81.34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில் எந்த தொகுதியில் அதிக வாக்குகள், எங்கு குறைவான வாக்குகள் பதிவாகியுள்ளன என்பதையும் பார்க்கலாம்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது. சென்னை மாவட்டத்தில் மாலை 5 மணி நிலவரப்படி 81.34 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

சென்னை மண்டலத்தில் மொத்தம் 16 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அதில் விருகம்பாக்கத்தில 83.84 சதவீதம், திநகரில் 81.82 சதவீதம், வேளச்சேரியில் 82.16 சதவீதம், கொளத்தூரில் 83.58 சதவீதம், அண்ணா நகரில் 83.44 சதவீதம், வில்லிவாக்கத்தில் 83.56 சதவீதம், பெரம்பூரில் 86.74 சதவீதம், ஆயிரம்விளக்கில் 81 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
அது போல் ஆர்.கே.நகரில் 87.12 சதவீதமும் சைதாப்பேட்டையில் 75.92 சதவீதமும் எழும்பூரில் 82.71 சதவீதமும் சேப்பாக்கத்தில் 81.89 சதவீதமும், துறைமுகம் தொகுதியில் 80.61%, மயிலாப்பூரில் 72.79 சதவீதமும், ராயபுரத்தில் 76.73 சதவீதமும் திருவிக நகரில் 76.09 சதவீதம் வாக்குகளும் பதிவாகியுள்ளன.
ஆர்.கே.நகரில்தான் அதிகபட்சமாக 87.12 சதவீதம் வாக்குகளும் மயிலாப்பூரில் குறைந்தபட்சமாக 72.79 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. இது 5 மணி நிலவரம்தான்! போக போக எந்த தொகுதியில் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்பதை பார்க்கலாம்.
வாக்களிப்பதற்காக சொந்த ஊர்களுக்கு செல்ல மக்கள் பேருந்து நிலையங்களில் காத்திருக்கிறார்கள். ஆனால் போதிய அளவில் பேருந்துகள் இல்லாததால் வாக்களிக்க செல்ல முடியாமல் தவித்து வருகிறார்கள். இதனால் எஸ்ஐஆருக்கு பின்பும் வாக்குப் பதிவு அதிகரிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
தாறுமாறாக சரிந்த தங்கம்.. தொடர்ந்து இன்னும் சரியுமா? விலை வீழ்ச்சிக்கு காரணம் என்ன? -
சர்க்கரை அட்டை உங்களிடம் இருக்கா? சென்னை மக்களுக்கு ஒரே நாளில் பெயர் மாற்றத் தீர்வு தரும் தமிழக அரசு -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
இதுதான் மாற்றமா? சென்னை அரசு மருத்துவமனையில்.. இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்! மக்கள் ஷாக் -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..! -
சென்னையில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவது ஏன்? அதிகாரிகளுக்கு மட்டுமே தெரிந்த உண்மை -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய்












Click it and Unblock the Notifications