காதலியை பெட்ரோலுடன் ஓடிப்போய் கட்டிப்பிடித்து கொண்ட ஆட்டோ டிரைவர்.. ஒரு நொடியில் ஆடிப்போன சென்னை!
சென்னை: சென்னையில் கள்ளக்காதல் விவகாரங்கள் கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கும் நிலையில், அது தொடர்பான குற்றங்களும் பெருகி வருகின்றன.. சென்னை மட்டுமில்லை, உறவு சிக்கல்களால், குடும்பங்கள் பிரிந்து, குழந்தைகளும் நடுத்தெருவுக்கு வந்துவிடும் சூழல் இன்று நாடு முழுவதுமே ஏற்பட்டுள்ளது. இதோ இப்போது மீண்டும் சென்னையில் ஒரு கொடுமை நடந்துள்ளது. மனம் திரும்பி வாழ நினைத்தபோதும் இப்படி ஒரு துயரம் ஏற்பட்டிருக்கிறது.
சென்னை எர்ணாவூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் அபிபுல்லா.. இவருக்கு 50 வயதாகிறது.. இவரது மனைவி பெயர் நூரிஷா . இவருக்கு 42 வயதாகிறது.. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் இருக்கிறார்கள்.

இவர்கள் ஏற்கனவே திருவொற்றியூர் தாங்கல் பகுதியில் வசித்து வந்தனர்.. அப்போது நூரிஷாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் டெல்லிபாபு என்பவருக்கும் விரும்பத்தகாத உறவு நீடித்து வந்தது..
தகாத உறவு
இந்த விஷயம் அபிபுல்லாவுக்கு தெரியவந்ததுமே, அந்த வீட்டை காலி செய்துவிட்டு கடந்த 3 மாதத்துக்கு முன்புதான் எர்ணாவூர் பகுதியில் சுனாமி குடியிருப்பில் குடியேறினார். இதனால் ஆட்டோ டிரைவர் டில்லிபாபுவுக்கு, நூரிஷாவுடன் பேச முடியாமல் போனது. இதற்காக பலமுறை முயற்சி செய்தும் தோல்வியே கிடைத்தது.
பெட்ரோல்
இந்நிலையில், கடந்த 9ம் தேதி டில்லிபாபு, நூரிஷாவின் வீட்டுக்கு வந்து, "ஏன் என்னிடம் பேசுவதை தவிர்க்கிறாய்" என்று கேட்டுள்ளார்... அதற்கு நூரிஷா, இத்தனை நாள் நான் தவறு செய்துவிட்டேன்.. இப்போது மனம் திருந்திவிட்டேன்.. உன்னிடம் பேச விருப்பம் இல்லை, இனிமேல் என்னுடைய வாழ்க்கையில் குறுக்கிடாதே" என்று கண்டிப்புடன் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த டில்லிபாபு, நூரிஷாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்..
இறுதியில் உச்சக்கட்ட கோபம் கொண்ட டெல்லி பாபு, தான் கையோடு பாட்டிலில் கொண்டு வைத்திருந்த பெட்ரோலை தன்னுடைய உடம்பில் ஊற்றி லைட்டர் மூலம் தீ வைத்துக் கொண்டார். இது பார்த்து அதிர்ச்சியடைந்த நூரிஷா கூச்சல் போடவும், அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர்.. ஆனால் அதற்குள் உடல் முழுவதும் தீ பற்றிய நிலையில் திடீரென்று நூரிஷாவை கட்டிப்பிடித்து கொண்டார் ஆட்டோ டிரைவர்.
சென்னையில் பரிதாபம்
இதில் தூரிஷா மீதும் தீப்பற்றி கொண்டு, உடல் முழுவதும் எரிந்தது.. இருவருமே உடல் கருகி போராடியபோது அக்கம்பக்கத்தினர் தீயை அணைத்துள்ளனர். இவர்களை காப்பாற்ற முயன்ற நூரிஷாவின் அம்மா ஜெனிமா (80) என்பவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது.
இதுபற்றி அறிந்ததும் எண்ணுார் போலீசார் வந்து 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில், நூரிஷா பரிதாபமாக இறந்தார். டெல்லிபாபு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
டீசல் + ஐசோபியூட்டனால்.. மத்திய அரசின் அடுத்த மெகா திட்டம்.. இதுமட்டும் நடந்துட்டா போதும்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை












Click it and Unblock the Notifications