Chennai lease : சென்னையில் லீஸ் வீடு.. நோ புரோக்கர் ஆப்பில் விளம்பரம் போட்டு ஏமாத்திகிட்டு இருக்கான்.. மக்கள் பேட்டி
சென்னை: சென்னையின் புறநகர் பகுதியான ஆவடியில் 4.5 லட்சம் லீஸ் அக்ரிமெண்ட் போட்டு, எங்களை ஒருவர், இரண்டு பிளாட்டை காண்பித்து 10 பேரை ஏமாற்றி உள்ளார். கிட்டத்தட்ட 3 கோடி அளவிற்கு மோசடி நடந்துள்ளது. எங்களுக்கு எங்கு தான் நியாயம் கிடைக்க போகிறது. நான் ஒரு சாதாரண ஆட்டோ ஓட்டும் தொழிலாளி. என் வாழ்க்கையில் 4.5லட்சம் என்பது பல வருட உழைப்பு.. உங்களால் என்ன பண்ண முடியுமோ.. பண்ணுங்க என்று மோசடி செய்த நபர் கூறுகிறார் என்று பாதிக்கப்பட்ட நபர் விரக்தியுடன் பேட்டி அளித்தார்.
சென்னை, தாம்பரம், ஆவடி உள்ளிட்ட பெருநகர பகுதிகளில் லீசுக்கு வீடு தேடுபவர்களை குறிவைத்து ஏமாற்றுவது அதிகமாக நடக்கிறது. ஏனெனில் இவர் தான் வீட்டின் உரிமையாளர் என்று யாரும் கண்டுபிடிக்க முடியாது. வாடகைக்கு இருக்கும் வீட்டை லீஸ் என்ற பெயரில் ஏமாற்றுவது அதிகமாக நடக்கிறது. லீசுக்கு வாங்கிய வீட்டை மறுபடியும் ஒருவருக்கு லீசுக்கு விடுவது, லீசுக்கு வந்த வீட்டை வாடகைக்கு விடுவது போன்ற சம்பவங்களும் நடக்கிறது.

சென்னையில் குத்தகைக்கு வீடுவாங்குவோர் முதலில் அவர் தான் வீட்டின் உரிமையாளரா என்பதை உறுதி செய்யாமல் குத்தகைக்கு வீடு பார்ப்பது ஆபத்தானதாக இருக்கிறது. இபி பில்லை வாங்கி பார்த்துதான் வீட்டின் உரிமையாளரை அறிய முடியும்ம். ஏனெனில் சென்னையில் புதிதாக வந்தவர்கள்,குறைவான லீஸ் தொகையில் வீடு தேடுபவர்களை கூறிவைத்து ஏமாற்றுவது அதிகமாகிவிடுகறிது. ஏன் வீட்டின் உரிமையாளர்களுமே இந்த குத்தகை வீடு விவகாரத்தில் ஏமாறுவது நடக்கிறது. 5 லட்சம், 6லட்சம் என தொகைகளை வாங்கி ஒரே வீட்டை காட்டி மோசடி செய்து வருகிறார்கள்.. சென்னை ஆவடியில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.
லீஸ் வீட்டுக்கு போக ஆசைப்பட்டு ஆவடியில் பாதிக்கப்பட்ட நபர்கள் அளித்த பேட்டியில், "சென்னையின் புறநகர் பகுதியான ஆவடியில் 4.5 லட்சம் லீஸ் அக்ரிமெண்ட் போட்டு, எங்களை ஒருவர், இரண்டு பிளாட்டை காண்பித்து 10 பேரை ஏமாற்றி உள்ளார். அதுமட்டுமின்றி கெருகம்பாக்கம் ஏரியாவில் அதே நபர் 20 பேரை ஏமாற்றி உள்ளார். கிட்டத்தட்ட 3 கோடி அளவுக்கு மோசடி நடந்துள்ளது. இதுபற்றி நாங்கள் புகார் அளித்தோம். இரண்டு நாள் முன்பு செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டான்.
நாங்கள் வண்டியை சேஸ் பண்ணி பிடித்துவிட்டோம்.. அவரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தோம். அனால் அவர், உங்களால் என்ன பண்ண முடியுமோ.. பண்ணுங்க, பணம் வாங்கவில்லை.. என்னிடம் பணம் இல்லை என்று மோசடி செய்த நபர் கூறுகிறார். எங்களுக்கு எங்கு தான் நியாயம் கிடைக்க போகிறது. நான் ஒரு சாதாரண ஆட்டோ ஓட்டும் தொழிலாளி. என் வாழ்க்கையில் 4.5லட்சம் என்பது பல வருட உழைப்பு.. முதல்வர் ஸ்டாலினின் பெயரை மிஸ்யூஸ் செய்து மோசடியாளன் பேசுகிறான்.காவல் ஆய்வாளர் விசாரிக்கிறார்.. ஆனால் அவரிடம் அவன் அலட்சியமாக பதில் சொல்கிறான்...
இத்தனை பேரின் கண்ணீருக்கு மதிப்பு இல்லையா? நான் ஆட்டோ ஓட்டி ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கவே படாதபாடு பட வேண்டும். 4.5லட்சம் என்பது எனக்கு ஈஸியா.. அவன் படிச்சவன் சார்.. எவ்வளவு அழகாக பிளான் பண்ணி ஏமாத்துறான் தெரியுமா? இவ்வளவு பேரு விசாரிக்குறாங்க.. அவன் உங்களால் என்ன பண்ண முடியுமோ பண்ணுங்க என்கிறான்.. நோ புரோக்கர் ஆப்ல விளம்பரம் போட்டு ஏமாத்திகிட்டு இருக்கான் சார் " இவ்வாறு வேதனையுடன் ஆட்டோ டிரைவர் பேசினார் .












Click it and Unblock the Notifications