ஐயோ! நான்-ஸ்டாப் ஃப்ளைட்டை விட குறைந்த நேரத்தில்! சென்னையிலிருந்து பெங்களூருக்கு ரயிலில் பறக்கலாம்!
சென்னை: சென்னையிலிருந்து பெங்களூருக்கு வெறும் 30 நிமிடங்களில் பயணிக்கலாம். அதுவும் பிளைட் செல்லும் நேரத்தை விட குறைந்த நேரத்தில்!
ஒவ்வொரு ஊருக்கு செல்லும் போது அது தூர தேசத்தை போல் இருக்கும். அது பஸ்ஸாக இருந்தாலும் ரயிலாக இருந்தாலும் பிளைட்டாக இருந்தாலும் சரி! இதனால் மேற்கண்ட எந்த போக்குவரத்தில் சொகுசாக சென்றாலும் எப்போது செல்லுமிடத்தை அடைவோம் என்பதில்தான் நம் எண்ணம் இருக்கும்.

இதற்காகவே இடைநில்லா பேருந்து நான் ஸ்டாப் பிளைட், எக்ஸ்பிரஸ், சூப்பர் பாஸ்ட் ரயில்கள் இயக்கப்படுகின்றன. புல்லட் ரயில்கள் 300 கி.மீ. வேகத்தில் செல்லும். இதனால் பயண தூரம் வெகுவாக குறையும். அந்த வகையில் தற்போது வந்தே பாரத், எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இந்த நிலையில் புல்லட் ரயிலை காட்டிலும் 4 மடங்கு வேகத்தில் செல்லும் ஹைபர்லூப் தொழில்நுட்பத்தை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது ஒவ்வொரு நாட்டின் கனவு திட்டமாகும். அந்த வகையில் இது எலான் மஸ்க்கின் கனவு திட்டமும் கூட! இந்த தொழில்நுட்பத்தை சென்னை ஐஐடி மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.
ஹைப்பர்லூப் போக்குவரத்து என்பது காற்று புகாத ஒரு வெற்றிட குழாய்களை உருவாக்கி அதில் மின்காந்த அலைகளின் உதவியுடன் கேப்சூல் போன்ற பெட்டிகளை மின்னல் வேகத்தில் பயணிக்கச் செய்வது ஆகும். இந்த தொழில்நுட்பத்திற்கு காப்புரிமைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் சென்னை மற்றும் பெங்களூர் இடையே 350 கி.மீ. தொலைவுக்கு ஹைபர்லூப் வழித்தடத்தை உருவாக்க இந்த ஐஐடி குழு செயல்பட்டு வருகிறது.
இதனால் இரு நகரங்களையும் வெறும் 30 நிமிடங்களில் அடையலாம். இருபது ஆண்டுகளுக்குள் இந்தியாவின் முதல் ஹைபர்லூப் வழித்தடத்தை உருவாக்க கால திட்டம் வகுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட குழுவினர்தான் ஆவிஷ்கார் ஹைபர்லூப் குழுவினர். 2019 ஆம் ஆண்டு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் போட்டியில் 1600 குழுக்களில் ஒன்றாக இவர்களும் கலந்து கொண்டனர்.
இந்த போட்டியில் முதல் 10 இடங்களுக்குள் ஆவிஷ்கார் அணி வந்ததுடன் இறுதிச் சுற்றுக்கு வந்த முதல் ஆசிய அணியாகவும் திகழ்ந்துள்ளது. 400 மீட்டர் தூர ஹைபர்லூப் அமைக்கும் பணிகள் இந்திய ரயில்வே துறையின் நிதியுதவியுடன் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில் கிரவுண்டில் இயங்குவதற்கு பதில் ரயில்கள் டியூப்பில் இயங்கும். இதற்கு காரணம் காற்று புகாத வெற்றிடத்தில் பயணிக்கும் போது மின்னல் வேகம் இருக்கும். இதனால் ஆற்றலும் குறையும்.
சென்னையில் இருந்து கொண்டோ பெங்களூரில் இருந்து கொண்டோ வேலை செய்யலாம். வேறு இடத்தில் வேலை கிடைத்துவிட்டால் அந்த இடத்திற்கு குடி பெயர வேண்டும் என்ற அவசியமே இல்லை. இது ரயில் போல்தான், விமான நிலையம் போல் இருக்காது. அனைத்து இடங்களிலும் இந்த ரயிலை ஆக்சஸ் செய்யும் வகையில் இருக்கும். இவ்வாறு ஆராய்ச்சி மாணவர்கள் தெரிவிக்கிறார்கள்.
பொதுவாக நான்ஸ்டாப் விமானத்தில் சென்னையிலிருந்து பெங்களூர் செல்ல குறைந்தது 55 நிமிடங்கள் ஆகும். ஆனால் இந்த ஹைபர்லூப் டெக்னிக் மூலம் ரயிலில் செல்லும் போது வெறும் 30 நிமிடங்களே ஆகும்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications