சென்னை கடற்கரை-செங்கல்பட்டு, சென்ட்ரல்-கூடூர் மின்சார ரயில்கள் பகுதியாக ரத்து.. முழு விவரம்
சென்னை: சென்னை எழும்பூர்-விழுப்புரம் வழித்தடத்தில் உள்ள காட்டாங்கொளத்தூர் பணிமனையில் வரும் ஜூன் 1-ந்தேதி காலை 11.45 மணி முதல் மாலை 3.15 மணி வரையில் (3 மணி நேரம் 30 நிமிடம்) பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட இருக்கிறது. எனவே, சில மின்சார ரயில் சேவை மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
* சென்னை கடற்கரையில் இருந்து வரும் ஜூன் 1-ந்தேதி காலை 11, 11.45, மதியம் 12.30,1.45 ஆகிய நேரங்களில் புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில்கள் கூடுவாஞ்சேரி-செங்கல்பட்டு இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு கூடுவாஞ்சேரியில் இருந்து புறப்படும்.

* சென்னை கடற்கரையில் இருந்து ஜூன் 1-ந்தேதி மதியம் 12.45 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில் தாம்பரத்தில் இருந்து புறப்படும்.
* செங்கல்பட்டில் இருந்து ஜூன் 1-ந்தேதி மதியம் 12,1,1.50 மாலை 3.05 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரயில்கள் கூடுவாஞ்சேரியில் இருந்து புறப்படும்
* செங்கல்பட்டில் இருந்து இதே தேதியில் மதியம் 2.25 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரயில் தாம்பரத்தில் இருந்து புறப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே சென்னை சென்ட்ரல்-சூலூர்பேட்டை இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 19 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை சென்ட்ரல்-கூடூர் வழித்தடத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி பணிமனை-கவரப்பேட்டை ரயில் நிலையம் இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் நாளை (சனிக்கிழமை) மற்றும் ஜூன் 2-ந் தேதி மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
அதன்படி, சென்ட்ரலில் இருந்து நாளை மற்றும் ஜூன் 2-ந் தேதி காலை 10.30, 11.35 மணிக்கு புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. அதேபோல, கும்மிடிப்பூண்டியில் இருந்து மதியம் 1, 2.30, 3.15 மணிக்கு புறப்பட்டு சென்ட்ரல் வரும் ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.
சென்ட்ரலில் இருந்து காலை 10.15, மதியம் 12.10, 1.5 மணிக்கு புறப்பட்டு சூலூர்பேட்டை செல்லும் மின்சார ரயில்களும், சூலூர்பேட்டையில் இருந்து மதியம் 1.15, 3.10, இரவு 9 மணிக்கு புறப்பட்டு சென்ட்ரல் வரும் மின்சார ரயில்களும் ரத்து செய்யப்படுகிறது.
கடற்கரையில் இருந்து காலை 9.40, மதியம் 12.40 மணிக்கு புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயில்களும், கும்மிடிப்பூண்டியில் இருந்து காலை 10.55 மணிக்கு புறப்பட்டு கடற்கரைக்கு வரும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.சூலூர்பேட்டையில் இருந்து மதியம் 3.50 மணிக்கு புறப்பட்டு ஆந்திர மாநிலம் நெல்லூர் செல்லும் பயணிகள் ரெயிலும், நெல்லூரில் இருந்து மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு சூலூர்பேட்டை வரும் ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது. சென்ட்ரலில் இருந்து இரவு 11.40 மணிக்கு புறப்பட்டு ஆவடி செல்லும் ரயில் ரத்து செய்யப்படுகிறது.
இதையொட்டி நாளை மற்றும் ஜூன் 2-ந் தேதி ஆகிய 2 நாட்களும் சென்ட்ரல்-பொன்னேரிக்கு காலை 10.30 மணிக்கும், சென்ட்ரல்-மீஞ்சூருக்கு காலை 11.35 மணிக்கும், கடற்கரை-பொன்னேரிக்கு மதியம் 12.40 மணிக்கும், பொன்னேரி-சென்ட்ரலுக்கு மதியம் 1.18, 3.33 மணிக்கும், மீஞ்சூர்-சென்ட்ரலுக்கு மதியம் 2.59 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது" இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications