சென்னை கடற்கரை- தாம்பரம் இடையே மின்சார ரயில் நாளை ரத்து.. மொத்தம் 53 ரயில்கள் இயங்காதாம்!
சென்னை: சென்னை எழும்பூர்- விழுப்புரம் வழித்தடத்தில் நாளை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் சென்னை கடற்கரை- தாம்பரம் இடையே மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை புறநகர் ரயிலில் தினமும் லட்சக்கணக்கானோர் பணி நிமித்தமாகவும் படிப்பதற்காகவும் சொந்த அலுவல்களுக்காகவும் பயணித்து வருகிறார்கள். இது ஒரு விதத்தில் போக்குவரத்தை நெரிசலை குறைக்கிறது.

எரிவாயுவையும் அதற்கான பணத்தையும் சேமிக்கிக்கிறது. எனவே சென்னையின் பிரதான பொது போக்குவரத்து சேவையாகவே புறநகர் ரயில் சேவையும் மெட்ரோ ரயில் சேவையும் மாறிவிட்டது. உடல் அலுப்பே இல்லாமல் செய்கிறது இந்த ரயில் பயணம்.
இந்த நிலையில் சென்னை எழும்பூர்- விழுப்புரம் வழித்தடத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படவுள்ளதால் நாளை கடற்கரை- தாம்பரம் இடையே மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் இந்த தகவலை தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் வரை இயக்கப்படும் ரயில்கள் காலை 10.20 முதல் 2.45 மணி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படும்.
அது போல் தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு இயக்கப்படும் ரயில்கள் காலை 9.08 மணி முதல் பகல் 3.20 வரை முழுவதும் ரத்து செய்யப்படுகிறது. செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் காலை 11 மணி முதல் பிற்பகல் 2.20 மணி ரத்து செய்யப்பட்டுள்ளது.
அது போல் காஞ்சிபுரத்தில் இருந்து காலை 9.30 மணிக்கு புறப்படும் ரயில், திருமால்பூரில் இருந்து காலை 11.05 மணிக்கு புறப்படும் ரயில்களும் செங்கல்பட்டில் இருந்து காலை 10 மணிக்கு புறப்படும் ரயில்களும் என முற்றிலுமாக நாளை ரத்து செய்யப்படுகிறது.
தாம்பரம்- செங்கல்பட்டு இடையே பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. தாம்பரம்- செங்கல்பட்டு இடையே காலை 11.51 மணிக்கு, பகல் 12.35 மணிக்கு, பிற்பகல் 1.15 மணிக்கு , 1.35 மணிக்கு, 1.55 மணிக்கு , 2.45 மணிக்கு, மாலை 3.10, 3.30 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவுள்ளன. அது போல் செங்கல்பட்டு- தாம்பரம் இடையே காலை 9.30 மணி முதல் பகல் 12 மணி, 1 மணி, 1.15 மணி, பிற்பகல் 2.20 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
-
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க












Click it and Unblock the Notifications