சென்னை மக்களே நோட் பண்ணுங்க.. இன்று முதல் கடற்கரை - தாம்பரம் மின்சார ரயில் ரத்து! எத்தனை நாள்?
சென்னை: பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை ரயில் நிலையம் - தாம்பரம் ரயில் நிலையம் இடையிலான நாளின் கடைசி இரவு நேர மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது.
சென்னை மக்களின் பிரதான போக்குவரத்தாக மின்சார ரயில் இருந்து வருகிறது. சென்னை மன்னடி அருகே உள்ள கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து மாநகரின் பல்வேறு நகரங்கள் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு மின்சார ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள், பெண்கள், முதியோர்கள், வியாபாரிகள் என பல லட்சக்கணக்கானோர் பயனடைந்து வருகின்றனர். சென்னையின் முக்கிய போக்குவரத்தாக பார்க்கப்படும் இந்த மின்சார ரயில் சேவை அவ்வப்போது பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பராமரிப்பு காரணமாக இன்று முதல் கடற்கரை ரயில் நிலையம் - தாம்பரம் ரயில் நிலையம் இடையிலான இரவு மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது. இன்று முதல் டிசம்பர் 14 ஆம் தேதி வரை சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம் ரயில் நிலையம் செல்லும் நாளின் கடைசி இரவு நேர ரயில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்து இருக்கிறது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் வெளியிட்டு இருக்கும் செய்திக் குறிப்பில், "பயணிகளின் பாதுகாப்பு கருதி தாம்பரம் ரயில் நிலையத்தில் நவம்பர் 29 ஆம் தேதி முதல் டிசம்பர் 14 ஆம் தேதி வரை நள்ளிரவு 12.25 முதல் அதிகாலை 2.25 வரை பொறியியல் வேலைகள் மற்றும் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதனால், அந்த நாட்களில் சென்னை கடற்கரையிலிருந்து இரவு 11.59 மணிக்கு தாம்பரம் செல்லும் மின்சார ரயிலும், மறு மார்க்கமாக தாம்பரத்திலிருந்து இரவு 11.40 மணிக்கு கடற்கரைக்கு செல்லும் ரயிலும் முழுமையாக ரத்து செய்யப்படும்" என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இரவு வரை பணி, வியாபாரம் செய்து முடித்துவிட்டு வீடு திரும்புவோர் பலர் இந்த கடைசி ரயிலை பயன்படுத்தி வந்த நிலையில், இந்த சேவை ரத்து செய்யப்பட்டு இருப்பதால் மாற்று போக்குவரத்து வழியை நாடும் நிலை ஏற்பட்டு உள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications