அந்த பக்கம் போகாதீங்க.. கடற்கரை டூ தாம்பரம் ரூட்டிற்கு வந்த அறிவிப்பு.. சென்னை தடுமாறுது.. மீண்டும்?
சென்னை: சென்னை கடற்கரை டூ தாம்பரம் வழித்தடத்திலுள்ள மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பை வெளியிட்டுள்ளது.. என்ன காரணம்?
சென்னையை பொறுத்தவரை மின்சார ரயில்களின் தேவை அதிகமாகவே இருந்து வருகிறது.. தினமும் லட்சக்கணக்கானோர் மின்சார ரயில்களை பயன்படுத்தி கொண்டிருக்கிறார்கள். அந்தவகையில், சென்னையில் 4 வழித்தடங்களில் மின்சார ரயில்கள் ஓடுகின்றன. இதில் கடற்கரை தாம்பரம் இடையேயான வழித்தடம் மிகவும் முக்கியமான வழித்தடம் ஆகும்.

திடீர் ரத்து: அதனால்தான் இந்த வழித்தடத்தில் அடிக்கடி மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.. ஆனால், கடந்த சில வாரங்களாகவே, பாராமரிப்பு பணிகள் காரணமாக மின்சார ரயில்கள் கணிசமாக ரத்து செய்யப்பட்டு வருகிறது.
குறிப்பாக, வார இறுதி நாட்களில் இந்த பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே, மின்சார ரயில்களும் ரத்து செய்யப்பட்டு வருகின்றன.. ஒரு மாத காலமாகவே, இந்த ரயில்கள் வார இறுதிகளில் ரத்து செய்யப்படுகிறது.
அறிவிப்பு: அந்தவகையில் தற்போதும், பராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை-தாம்பரம் மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.. தற்போது தாம்பரம் யார்டு பகுதியில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சென்னை கடற்கரை - தாம்பரத்திற்கு நள்ளிரவு 11.59 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயிலும் (40149), தாம்பரம் - சென்னை கடற்கரை இரவு 11.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயிலும் (40150) இன்று (மார்ச் 13) முதல் 16ம் தேதி வரையிலும், 18 முதல் 23ம் தேதி வரையிலும் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்சார ரயில்கள்: அதேபோல் சென்னை பீச் to தாம்பரத்திற்கு இரவு 11.59 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயிலும் (40419), தாம்பரம் to சென்னை பீச்-க்கு இரவு 11.35 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயிலும் (40420) 17ம் தேதி முதல் 24ம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தாம்பரத்தில் இருந்து கடற்கரைக்கு இரவு 11.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் நேற்று நள்ளிரவு முதல் 16-ந்தேதி வரையிலும், 18-ந்தேதி முதல் 23-ந்தேதி வரையிலும் ரத்தாகி உள்ளது, பயணிகளுக்கு அதிருப்தியையும், அலைச்சலையும் தந்து வருகிறது.
மெட்ரோ ரயில்: கடந்த வாரமும் இப்படித்தான் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. எனினும், பொதுமக்களின் வசதிக்காக 7 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படுவதாக அறிவித்திருந்தது, சென்னைவாசிகளுக்கு நிம்மதியை தந்திருந்தது. அதுபோன்ற அறிவிப்பு தற்போதும் வெளியாகுமா? என்று தெரியவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம்..!!












Click it and Unblock the Notifications