வேலூர் ரயில் நீட்டிப்பு.. இனி தினமும் சென்னை பீச் டூ திருவண்ணாமலை ஈஸியாக செல்லலாம்.. ஹேப்பி நியூஸ்
சென்னை: திருவண்ணாமலை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, தினசரி சென்னை கடற்கரையிலிருந்து வேலூர் கண்டோன்மெண்ட் வரை இயக்கப்படும் ரயில்கள், இனி திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்திருக்கிறது. அத்துடன் மேலும் சில ரயில்களின் சேவைகளும் நீட்டிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
நீண்ட நாள் கோரிக்கை: வட மாவட்டங்களில் திருவண்ணாமலைக்கு ரயில் சேவை என்பது மிக குறைந்த அளவிலேயே இருந்து வருகிறது. சித்ரா பௌர்ணமி, கிரிவலம் உள்ளிட்ட குறிப்பிட்ட சில நாட்களில் மட்டும் சென்னை கடற்கரையிலிருந்து வேலூர் கண்டோன்மெண்ட் வரை இயக்கப்படும் ரயில்கள், திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்பட்டு வந்தது. இந்த ரயில் சேவையை நிரந்தரமாக திருவண்ணாமலை வரை இயக்கப்பட வேண்டும் என்பது திருவண்ணாமலை, வேலூர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.

திருவண்ணாமலை: இந்நிலையில் தற்போது இந்த ரயில் சேவை இனி வரும் நாட்களில் நிரந்தரமாக நீட்டிக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்திருக்கிறது. அதாவது, தினமும் சென்னை கடற்கரையிலிருந்து மாலை 6 மணிக்கு வண்டி எண் 06033 எனும் பாசஞ்சர் ரயில் வேலூர் கண்டோன்மெண்ட் வரை இயக்கப்படும். வரும் மே மாதம் 2ம் தேதியிலிருந்து இந்த ரயில் வேலூர் கண்டோன்மெண்ட்டுடன் நிற்காமல் பென்னாத்தூர், கண்ணமங்கலம், ஒன்னுபுரம், சேதாரம்பட்டு, ஆரணி ரோடு, மதிமங்கலம், போளூர் என திருவண்ணாமலை வரை இரவு 12.05க்கு சென்று சேரும்.
அதேபோல, மே மாதம் 3ம் தேதியிலிருந்து திருவண்ணாமலையிலிருந்து விடியற்காலை 4 மணிக்கு வண்டி எண் 06033 எனும் பாசஞ்சர் ரயில் புறப்பட்டு காலை 9.50 மணிக்கு சென்னை கடற்கரை வந்து சேரும். இந்த ரயில் சேவை அடுத்த மாதம் 3ம் தேதி முதல் இயக்கப்படும்.
விழுப்புரம் டூ திருவாரூர்: இது தவிர, விழுப்புரத்திலிருந்து மாலை 6.25க்கு புறப்பட்டு இரவு 9.20க்கு மயிலாடுதுறை வரை சென்று சேரும் வண்டி எண் 06877 எனும் பாசஞ்சர் ரயில், மே மாதம் 2ம் தேதியிலிருந்து பேராளம், பூந்தோட்டம், நன்னிலம் வழியாக இரவு 10.45க்கு திருவாரூர் வரை இயக்கப்படும். அதேபோல திருவாரூரிலிருந்து அதிகாலை 5.10க்கு புறப்படும் வண்டி எண் 06690 கொண்ட பாசஞ்சர் ரயில் காலை 6 மணிக்கு மயிலாடுதுறைக்கும், காலை 9.15க்கு விழுப்புரத்திற்கும் வந்து சேரும்.
விருத்தாசலம் டூ விழுப்புரம்: அதேபோல திருச்சியிலிருந்து விருத்தாசலத்திற்கு இயக்கப்படும் பாசஞ்சர் ரயில் இனி விழுப்புரம் வரை நீட்டிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது வண்டி எண் 06892 எனும் பாசஞ்சர் ரயில் தினசரி திருச்சியிலிருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு இரவு 9 மணிக்கு விருத்தாசலம் சென்று சேர்கிறது. இந்த ரயில் வரும் மே மாதம் 2ம் தேதி முதல் விருத்தாசலத்துடன் நிற்காமல், உளுந்தூர்பேட்டை, பரிக்கல், திருவெண்ணெய்நல்லூர் ரோடு வழியாக இரவு 10.30 மணிக்கு விழுப்புரம் வந்து சேரும்.
மறுமார்க்கமாக வண்டி எண் 06871 எனும் பாசஞ்சர் ரயில் மே மாதம் 3ம் தேதி முதல் அதிகாலை 4.45 மணிக்கு திருவாரூரிலிருந்த புறப்பட்டு, காலை 5.45க்கு தஞ்சாவூருக்கும் காலை 7 மணிக்கு திருச்சி ரயில் நிலையத்திற்கும் வந்து சேரும்.
கடலூர் துறைமுகம் ஜங்ஷன்: இது தவிர சேலத்திலிருந்து விருத்தாசலம் வரை தினசரி இயக்கப்படும் பாசஞ்சர் ரயில், இனி கடலூர் துறைமுகம் வரை நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. வண்டி எண் 06122 எனும் பாசஞ்சர் ரயில் தினமும் சேலத்திலிருந்து மாலை 6.20க்கு புறப்பட்டு இரவு 9.10 மணிக்கு விருத்தாசலம் வந்தடைகிறது. இனி மே மாதம் 2ம் தேதி முதல் இந்த ரயில் உத்தங்கல் மங்கலம், நெய்வேலி, வடலுர், குறிஞ்சிப்பாடி என இரவு 10.25க்கு கடலூர் துறைமுகம் ஜங்ஷனுக்கு வந்து சேரும்.
மறுமார்க்கமாக வண்டி எண் 06121 எனும் பாசஞ்சர் ரயில் மே மாதம் 3ம் தேதி முதல் அதிகாலை 5 மணிக்கு கடலூர் துறைமுகம் ஜங்ஷனிலிருந்து புறப்பட்டு, காலை 6.15க்கு விருத்தாசலத்திற்கும் காலை 9.5 மணிக்கு சேலம் ரயில் நிலையத்திற்கும் வந்து சேரும்.
திருச்சி-திருவாரூர்: மற்றுமொரு ரயில் சேவையும் இதேபோல நீட்டிக்கப்பட்டிருக்கிறது. திருச்சிலிருந்து தஞ்சாவூர் வரை இயக்கப்படும் பாசஞ்சர் ரயில் இனி திருவாரூர் வரை நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது வண்டி எண் 06876 எனும் பாசஞ்சர் ரயில் தினசரி இரவு 8.28 மணிக்கு திருச்சிலிருந்து புறப்பட்டு இரவு 9.40 மணிக்கு தஞ்சாவூர் வரும். இந்த ரயில், மே மாதம் 2ம் தேதியிலிருந்து சலியமங்கலம், நீடாமங்கலம், கொரடாச்சேரி வழியாக இரவு 11.5 மணிக்கு திருவாரூர் சென்று சேரும்.
மறுமார்கமாக வண்டி எண் 06871 எனும் பாசஞ்சர் ரயில் மே மாதம் 3ம் தேதி முதல் அதிகாலை 4.45 மணிக்கு திருவாரூரிலிருந்த புறப்பட்டு, காலை 5.45க்கு தஞ்சாவூருக்கும் காலை 7 மணிக்கு திருச்சி ரயில் நிலையத்திற்கும் வந்து சேரும்.
அகஸ்தியம்பள்ளி: அதேபோல திருத்துறைப்பூண்டியிலிருந்து வாரத்திற்கு 5 நாட்கள் அகஸ்தியம்பள்ளிக்கு இயக்கப்படும் பாசஞ்சர் ரயில், இனி திருவாரூர் வரை நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த சேவை மே மாதம் 3ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. மேலும் திருவாரூரிலிருந்து வாரத்திற்கு 5 நாட்கள் என பட்டுக்கோட்டைக்கு பாசஞ்சர் ரயில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இவை அனைத்தும் ரயில் பயணிகளின் நீண்ட நாள் எதிர்பார்ப்பாகும். எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் ரயில் சேவை நீட்டிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிப்பதாக பயணிகள் கூறியுள்ளனர்.




-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications