சென்னையில் குத்துச்சண்டை வீரர் வெட்டிக்கொலை! 9 பேரை கைது செய்து போலீஸ் விசாரணை
சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் குத்துச்சண்டை வீரர் வெட்டிக்கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை தொடர்பாக 9 பேரை கைது செய்துள்ள போலீஸ் தீவிர விசாரணை மேற்கொண்டிருக்கிறது.
24 வயதான தனுஷ் குத்துச்சண்டை வீராக இருந்திருக்கிறார். நேற்று நள்ளிரவில், திருவல்லிக்கேணியில் உள்ள தனது வீட்டின் அருகே நண்பருடன் பேசிக்கொண்டு இருந்திருக்கிறார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் தனுஷை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனை தடுக்க முயன்ற தனுஷின் நண்பருக்கு கழுத்தில் வெட்டு விழுந்திருக்கிறது. தற்போது தனுஷ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து உயிரிழந்த தனுஷின் தாயார் கூறியதாவது “நண்பர்களை சந்தித்துவிட்டு வருவதாக கூறி நேற்றிரவு வீட்டிலிருந்து மகன் புறப்பட்டான். அவன் சென்ற பின்னர் நான் சோர்வில் சற்று கண்ணயர்ந்துவிட்டேன். கண் முழித்து பார்த்தபோது தனுஷ் வீட்டிற்கு வந்து சேரவில்லை. எனவே ஃபோன் அடித்து எங்கே இன்னும் ஆளை காணவில்லை என்று கேட்டான். நண்பர்களுடன் இருப்பதாகவும், சற்று நேரத்தில் வந்துவிடுவதாகவும் கூறினான்.
மணி இரவு 12 இருக்கும். ஒரு பையன் ஓடிவந்து வேகமாக வீட்டு கதவை தட்டினான். என்னப்பா என்று விசாரித்தபோதுதான் தனுஷை வெட்டிவிட்டார் என்று தெரிய வந்தது. வேக, வேகமாக சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தால் மகனை சரமாரியாக வெட்டியிருக்கிறார்கள். தலையின் பின்பகுதியை காணவில்லை. கைவிரல்கள் எல்லாம் துண்டு துண்டாக கிடந்திருக்கின்றன. உயிர் இருந்தது. மூன்றுமுறை அவன் துடித்ததை என்னால் பார்க்க முடிந்தது. ஆனால், அதன் பின்னர் உயிர் பிரிந்துவிட்டது.
இதுபோன்று அநியாயம் யாருக்காவது நடக்குமா? வீட்டிற்கு ஒரே மகன் அவன். நன்றாக படித்து வேலைக்கு சென்று சொந்தமாக பைக் வாங்கினான். வீட்டிற்கு ஏசி மாட்டினான். போலீசில் சேர வேண்டும் என்பதுதான் அவனது விருப்பமே. ஆனால் 24 வயதில் இப்படி ஒரு சோகம் நடந்துவிட்டது. அவனுக்கு திருமணத்திற்காக பெண் கூட பார்க்க முடிவெடுத்திருந்தோம். அதற்குள் இப்படி நடந்துவிட்டது. இந்த குற்றத்தில் ஈடுபட்டவர்களை சும்மா விடக்கூடாது” என்று தாய் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
-
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
தஞ்சையில் கள்ளக்காதல்.. நள்ளிரவில் புருஷன்- சொந்த அக்காவை தீயில் கொளுத்திய அமுதா -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications