சென்னையின் கனவு திட்டம்.. பக்கிங்ஹாம் கால்வாயில் ₹2,388 கோடி செலவில் நடக்க போகும் பெரிய மாற்றம்
சென்னை: சென்னையில் சிவானந்தா சாலை முதல் மயிலாப்பூர், மந்தைவெளி கடந்து ராஜா அண்ணாமலைபுரம் வரை உள்ளவர்ளுக்கு பக்கிங்ஹாம் கால்வாயின் அருமை இப்போது நன்றாகவே தெரிந்திருக்கும். இந்த கால்வாய் சரியாக இருந்தால் மட்டுமே வெள்ள பாதிப்பு ஏற்படாது. பக்கிங்ஹாம் கால்வாய் திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு முதல் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணம் வரை 167 கிலோமீட்டர் தூரத்திற்கு நீண்டுள்ளது. இந்த கால்வாயை ₹2,388 கோடி செலவில் மீட்டெடுக்க பொதுப்பணித் துறை மிகப்பெரிய திட்டம் வகுத்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பழவேற்காடு முதல் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணம் வரை 167 கிலோமீட்டர் தூரத்திற்கு பக்கிங்ஹாம் கால்வாய் நீண்டுள்ளது. பக்கிங்ஹாம் கால்வாய் வடக்கு, மத்திய மற்றும் தெற்கு 157.69 கி.மீ. நீளம் ஓடுகிறது. பழவேற்காடு ஏரி முதல் கூவம் ஆறு கலக்கும் இடம் வரையிலான சுமார் 58 கி.மீ. நீளம், வடக்கு பக்கிங்ஹாம் கால்வாய் என வகைப்படுத்தப்படுகிறது.

கூவம் ஆறும் அடையாறு ஆறும் கலக்கும் இடத்திற்கு இடையேயான 7.2 கி.மீ. நீளப் பகுதி, மத்திய பக்கிங்ஹாம் கால்வாய் என்று அழைக்கப்படுகிறது. அடையாறு ஆறு முதல் மரக்காணம் வரையிலான சுமார் 102 கி.மீ. நீளம் இருப்பது தெற்கு பக்கிங்ஹாம் கால்வாய் என அழைக்கப்படுகிறது. பெருநகரச் சென்னை மாநகராட்சியின் மழைநீர் வடிகால்கள் மூலம் வெளியேறும் நீர், இந்த மத்திய பக்கிங்ஹாம் கால்வாயில் தான் கலக்கிறது.
ஒரு காலத்தில் மிக முக்கியமான நீர்வழித்தடமாக இருந்திருக்கிறது. இப்போது சிதிலம் அடைந்து சேதமாகிவிட்டது. சென்னை மாநகருக்குள் நிலைமை மோசமாக இருக்கிறது. குறிப்பாக சிவானந்தா சாலை லாக் நகர் முதல் ஆர்.ஏ.புரம் வரை 7.315 கி.மீட்டர் நீளத்துக்கு மிக மோசமாக இருக்கிறது.
இந்த பக்கிங்ஹாம் கால்வாய், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, மந்தைவெளி, நந்தனம், மயிலாப்பூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியிலிருந்து வடியும் வெள்ள நீர் கால்வாயாகவும், கூவம் நதி மற்றும் அடையாறு நதியின் மூலம் வெள்ள நீரை கடலுக்கு செலுத்துகிற வெள்ள நீர் கடத்தி கால்வாயாகவும் செயல்பட்டு வருகிறது. இந்த கால்வாய் கூவம் அடையாறுக்கு இணைப்பு பாலமாக இருக்கிறது. அப்படியே பல நீர்வழித்தடங்களைஇணைக்கும் வகையில் தான் இருக்கிறது. இந்த கால்வாயில் வானந்தா சாலை லாக் நகர் முதல் ஆர்.ஏ.புரம் வரை 7.315 கி.மீட்டர் நீளத்துக்கு 31 கோடியில் சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.
இது ஒருபுறம் எனில், பொதுப்பணித் துறை 167 கிலோமீட்டர் தூரத்திற்கு நீண்டுள்ள பக்கிங்ஹாம் கால்வாயை மீட்டெடுப்பதற்காக ₹2,388 கோடி மதிப்பீட்டில் ஒரு பூர்வாங்க திட்டத்தை தயாரித்துள்ளது. இந்த திட்டத்தின் படி, பழவேற்கோடு முதல் மரக்காணம் வரை, 167 கி.மீ. நீளத்திற்கும், சராசரியாக 40 மீட்டர் அகலத்திற்கும், கால்வாயில் உள்ள மண் மற்றும் சேற்றை 1.50 மீட்டர் முதல் 3 மீட்டர் ஆழத்திற்குத் தூர்வாரி, ஆழப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.. கால்வாயை மீட்டெடுப்பதற்கான விரிவான திட்ட அறிக்கைக்காக (DPR) மத்திய அரசிடம் இருந்து கூடுதலாக ₹20 கோடி நிதியைத் தமிழக அரசு கோரியுள்ளதாக பொதுப்பணித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் (Indian Maritime University) பட்டமளிப்பு விழாவின் போது, மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவாலிடம் தமிழகத் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா வைத்த வேண்டுகோளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.. இந்தக் கால்வாயை மீட்டெடுப்பது, போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கும், உள்ளூர் வர்த்தகத்தை ஊக்குவிப்பதற்கு உதவும். மேலும் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம் வரை கடலோரப் பகுதிகளில் காலநிலை மாற்றங்களை கவனித்து நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்கும் முக்கியமானது என்று கருதப்படுகிறது.
இது ஒருபுறம் எனில் சென்னையின் நகர்ப்புறப் போக்குவரத்து முறைகளைப் பல்வகைப்படுத்தவும், நகரின் சுற்றுலாத் திறனை மேம்படுத்தவும், கொச்சியின் முன்னோடி மாதிரியைப் பின்பற்றி நீர் மெட்ரோ அமைக்கும் சாத்தியக்கூறுகளை சென்னை மாநகராட்சி ஆராய்ந்து வருகிறது. கொச்சியில் உள்ளது போல் வாட்டர் மெட்ரோ திட்டத்தை செயல்படுத்த அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறாரகள். நேப்பியர் பாலம் முதல் முட்டுக்காடு வரை 53 கி.மீ. நீள வழித்தடத்தில் மின்சார அல்லது ஹைப்ரிட் படகுகளை இயக்க அரசு திட்டமிட்டு வருகிறது.
-
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
சென்னையில் 20 லட்சம் கொடுத்து ஆசை ஆசையாக லீசுக்கு குடியேறிய வீடு.. இப்படியும் ஏமாறலாம் மக்களே -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
அசுர வேகத்தில் தயாராகும் சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே! பயண நேரத்தில் அதிரடி மாற்றம் ஜூன் 2026 -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம்












Click it and Unblock the Notifications