Chennai Budget 2025: சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் செய்து அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார் மேயர் பிரியா!
சென்னை: சென்னை மாநகராட்சியின் 2025-26 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ளது. சென்னை மாநகராட்சி மேயர் பிரியா சென்னை மாநகராட்சி பட்ஜெட்டை தாக்கல் செய்து, அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
இந்த பட்ஜெட்டில் பல்வேறு சிறப்பு திட்டங்கள் இடம்பெறும் எனவும் கடந்த நிதி ஆண்டை போலவே இந்த நிதி ஆண்டிலும் கல்வி உள்ளிட்டவைகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள்
சென்னை மாநகராட்சியின் 2024-25 ஆம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர், மாநகராட்சி அலுவலகத்தில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கி உள்ளது. இதில் மாநகராட்சி பகுதிகளில் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் மற்றும் அதற்கான நிதி ஒதுக்கீடு குறித்து மேயர் பிரியா அறிவிக்கிறார்.
சென்னை பள்ளிகளில் போட்டி தேர்வுகள் நடத்தி பரிசுகள் வழங்க, சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் ரூ.86.70 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறும் மாணாக்கர்களுக்கு பரிசுகளும் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு ஊக்கத்தொகையும் வழங்க ரூ.86.70 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு திட்டங்கள்
சென்னை பள்ளிகளில் 10ஆம் வகுப்பு, 11மற்றும் 12ஆம் வகுப்பில் படிக்கும் ஆர்வமுள்ள மாணவ மாணவியர்களை தேர்ந்தெடுத்து ஆலோசனைகள் வழங்கவும். போட்டித் தேர்விற்கு விண்ணப்பிக்க விழிப்புணர்வு ஏற்படுத்த மாணவ மாணவியர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப பள்ளி ஒன்றுக்கு ஊக்கத்தொகையாக ரூபாய் 15,000 முதல் ரூபாய் 150,000-வரை வழங்கவும் ரூபாய் 40.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெறும் பள்ளிகளைக் கண்டறிந்து, அப்பள்ளிகளில் விருப்பத்துடன் பணியாற்ற விரும்பும் ஆசிரியர்களைக் கொண்டு மண்டலம் வாரியாக வளமிகு ஆசிரியர் குழு (Pooling of Resource Teachers) அமைக்கப்படும். அக்குழுவின் ஆசிரியர்களைக் கொண்டு. அம்மண்டலத்திற்குட்பட்ட பள்ளிமாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும். இதற்காக 75 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து 2024-25 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை, வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழு தலைவர் சர்பஜெயாதாஸ் தாக்கல் செய்யவுள்ளார். இந்த பட்ஜெட்டில் புதிய திட்டங்கள், வளர்ச்சி பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் எனவும், சிங்கார சென்னை திட்டத்தின் கீழ் அழகுப்படுத்தும் பணிகள், போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிய மேம்பாலங்கள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு திட்டங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு!












Click it and Unblock the Notifications