சென்னையே திணறுது.. பஸ்களில் நெருக்கியடிக்கும் பயணிகள் கூட்டம்.. ரயில்கள் ரத்தால் நடந்த மாற்றம்!
சென்னை: சென்னை கடற்கரை - தாம்பரம் மார்க்கத்தில் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டதன் காரணமாக பேருந்துகளில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக 55 மின்சார ரயில்கள் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மார்க்கத்தில் நேற்றும் இன்றும் காலை 9.30 மணி முதல் இரவு 10.40 மணி வரை இயக்கப்படும் சில மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னை கடற்கரை- தாம்பரம் இடையே காலை 9.40 முதல் இரவு 11.59 மணிவரை இயக்கப்படும் சில மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. சென்னை கடற்கரை - கூடுவாஞ்சேரி இடையே இரவு 7.19, 8.15, 8.45, 8.55 மற்றும் 9.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதேபோல் தாம்பரம் - சென்னை கடற்கரை மார்க்கத்தில் காலை 10.30 மணி முதல் இரவு 11.40 மணி வரை இயக்கப்படும் சில மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு - கும்மிடிப்பூண்டி இடையே காலை 10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயிலும், காஞ்சிபுரம் - சென்னை கடற்கரை மார்க்கத்தில் காலை 9.30 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதன் காரணமாக, கூடுதல் எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தடுக்க கூடுதல் காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், இன்று சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. ரயில்கள் ரத்து காரணமாக பெரும்பாலானோர், பேருந்து போக்குவரத்தை தேர்வு செய்து வருகின்றனர்.
இதன் காரணமாக முக்கிய வழித்தடங்களில் ஓடும் பேசுந்துகளில் மக்கள் அதிகளவில் பயணம் செய்து வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமையான இன்று பேருந்து நிறுத்தங்களில் நூற்றுக்கணக்கான மக்கள் காத்திருந்து பயணித்து வருகின்றனர்.
-
சென்னை உட்பட.. 15 மாவட்டங்களுக்கு மழை! உஷார் மக்களே.. வானிலை மையம் வார்னிங்! -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்!












Click it and Unblock the Notifications