தாம்பரம்-போரூர் பைபாஸ்.. 20 கிமீ யாருமே கிராஸ் பண்ண முடியாது... ஆனால் பேரிகார்டுகளால் ட்விஸ்ட்
சென்னை: தாம்பரம்-போரூர் பைபாஸ் சாலை என்பது 20 கிமீ நீளமுள்ள ஒரே ரோடு ஆகும். நடுவில் யாரும் உள்ளே வர முடியாது. ரோடு கிராஸ் பண்ண வாய்ப்பே இல்லை. யூடர்ன் கிடையாது. இப்படிப்பட்ட ரோட்டில், பாதியில் எதுக்காக 4 இடத்தில் பேரிகேட் வச்சாங்க என்று தெரியவில்லை. நன்றாக போக வேண்டிய வாகனங்கள், திடீரென என ப்ளாக் ஆவதாக நெட்டிசன் தான்ஸ் என்பவர் குற்றம்சாட்டியுள்ளார்.
பெருங்களத்தூர் (தாம்பரம்) போரூர் பைபாஸ் சாலை போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக கட்டப்பட்டது. இது மொத்தம் 32 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலையாகும். இந்த சாலை தாம்பரத்தில் ஆரம்பித்து, புழலில் முடிகிறது. இந்த சாலை வழியாகவே கோயம்பேடுக்கு செல்லும் வாகனங்கள், போரூர் செல்லும் வாகனங்கள், அம்பத்தூர், ஆவடி செல்லும் வாகனங்கள், சென்னை நகருக்குள் வராமல் செல்ல விரும்பும் வாகனங்கள் சென்று வருகின்றன.

அம்பத்தூர் தொழிற்பேட்டையில் இருந்தோ அல்லது ரெட் ஹில்ஸ் மற்றும் புழலில் இருந்தோ அல்லது கோயம்பேடு, மதுரவாயலில் இருந்தோ தாம்பரம், பெருங்களத்தூருக்கு வாகன ஓட்டிகள் வர சென்னை பைபாஸ் சாலை என்று அழைக்கப்படும், இந்த சாலை முக்கியமானது.
மற்ற சாலைகளை போல் இந்த சாலை கிடையாது. எங்குமே குறுக்கிட முடியாது. சாலையில் ஒரு பக்கம் ஏறினால் மறுபக்கம் இறங்க 20 கிமீ காத்திருக்க வேண்டும். எந்த இடத்திலும் சாலையில் குறுக்கீடு இருக்காது. இதனால் எளிதாக கோயம்பேட்டில் இருந்து பெருங்களத்தூர் வந்து அப்படியே நகரத்தை விட்டு பேருந்து உள்ளிட்ட வாகனங்களால் செல்ல முடிகிறது.
ஆனால் தாம்பரம்-போரூர் பைபாஸ் சாலை என்பது 20 கிமீ நீளமுள்ள ஒரே ரோடு ஆகும். நடுவில் யாரும் உள்ளே வர முடியாது. ரோடு கிராஸ் பண்ண வாய்ப்பே இல்லை. யூடர்ன் கிடையாது. இப்படிப்பட்ட ரோட்டில், பாதியில் நான்கு இடங்களில் பேரிகார்டர் வைக்கப்பட்டுள்ளதாக நெட்டிசன்கள் கூறுகிறார்கள். இதனால் நன்றாக போக வேண்டிய வாகனங்கள், திடீரென என ப்ளாக் ஆகி விபத்துக்கு வழிவகுப்பதாக நெட்டிசன் தான்ஸ் என்பவர் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வீடியோவும் வெளியிட்டுள்ளார்.
20 கிமீ ஒரே ரோடு, நடுல யாரும் உள்ளேவர முடியாது,ரோடு கிராஸ் பண்ண வாய்ப்பே இல்லை, யூடர்ன் கிடையாது இப்படிப்பட்ட ரோட்ல பாதில எதுக்காக 4 இடத்தில் பேரிகேட் வச்சாங்க என தெரியல. ஸ்மூத்தா போகும் ட்ராஃபிக் இங்க திடீர் என ப்ளாக் ஆகி விபத்துக்கு வழிவகுக்குது.
— Dhans (@dhans4all) May 26, 2025
பேரிகேடால் இன்றைய விபத்து pic.twitter.com/Bthy7t91Hx
விபத்து ஏற்படுவதை தடுக்க இந்த பேரிகார்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், பேரிகார்டுகள் தான் விபத்துக்கு காரணமாக உள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நெட்டிசன் கூறும் போது, தான் 4 வருடமாக இந்த சாலையில் பயணம் செய்கிறேன். பேரிகேட் வைத்த பிறகு இங்கு விபத்துகள் அதிகமானது தான் உண்மை. இங்க யாரும் குறுக்கே வர முடியாது, சாலையை கடக்க முடியாது, ஒரு வழிப்பாதை இதில் எப்படி விபத்து ஏற்படும் என்று கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் பேரிகார்டுகளை அகற்றி விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்க போலீசார் முன்வர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications