அலறிய நபர்.. கோயம்பேடு பாலத்தில் ஓடும் கார் திடீரென தீ பிடித்த கொடூரம்.. பரிதாப பலி.. எப்படி நடந்தது
சென்னை: கோயம்பேடு மேம்பாலத்தில் ஓடும் காரில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமீப காலமாக சென்னையில் ஓடும் கார்கள் தீ பிடித்து விபத்துக்கு உள்ளாகும் கொடூரம் அடிக்கடி நடக்கிறது. ஓடிக்கொண்டு இருக்கும் போதே கார் திடீரென தீ பற்றி, அருகில் இருக்கும் கார்களுக்கு பரவும் சம்பவங்களும் அடிக்கடி நடக்கின்றன.
டீசல் கசிவு, மின் கசிவு, என்ஜின் கோளாறு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இப்படி கார்கள் பொது இடங்களில் தீ பிடிக்கும் சம்பவங்கள் நடக்கின்றன.

சென்னை
அதேபோல் இன்றும் கோயம்பேடு மேம்பாலத்தில் ஓடும் காரில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கோயம்பேடு மேம்பாலத்தில் கார் ஓடிக்கொண்டு இருக்கும் போதே திடீரென பின் சீட் பக்கம் தீ பிடித்தது. ஒரே நொடியில் பின் சீட் முழுக்க தீ மளமளவென பரவியது,

முன் சீட்
காரில் தீ பிடித்த உடனே முன் சீட்டில் இருந்த டிரைவர் வேகமாக அங்கிருந்து வெளியேறி தப்பித்துள்ளார். ஆனால் பின் சீட்டில் தீ வேகமாக பரவியதால், டோர் லாக் ஆகி இருந்ததாலும் காரின் பின் சீட்டில் இருந்த அர்ஜுனன் என்ற நபர் உள்ளேயே சிக்கினார். காருக்குள் தீ பிடித்த நிலையில் இவரின் அலறல் சத்தம் மட்டும் கேட்டது.

மரணம்
கார் முழுக்க தீ பரவிய நிலையில் அர்ஜுனன் சம்பவ இடத்திலேயே பலியானார். கார் ஓட்டுநர் சுனில் காயங்களோடு தப்பித்தார். இவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் கோயம்பேடு பாலத்தில் பெரிய அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

காரணம்
கார் பின்புறம் இருந்த அர்ஜுனன் பெயிண்ட் பாட்டில்களை கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அசம்பாவிதம் ஏதாவது ஏற்பட்டு, விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. போலீசார் இது பற்றி விசாரித்து வருகிறார்கள்.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications