சென்னையில் லாவகமாக சைடு லாக்கை உடைத்து இருசக்கர வாகனம் திருட்டு.. வெளியான சிசிடிவி காட்சி
சென்னை: சென்னை மதுரவாயலில் பரபரப்பான சாலையில் லாவகமாக சைடு லாக்கை உடைத்து இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
சென்னை மதுரவாயில் அடுத்த மலையப்பா நகரைச் சேர்ந்தவர் சந்திரசேகர் இவர் வேலையை முடித்துவிட்டு, வீட்டு வாசலில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு சென்றுள்ளார். பிறகு சிறிது நேரம் கழித்து பார்த்த போது அவரின் இரு சக்கர வாகனம் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்பு இதுகுறித்து மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மதுரவாயல் போலீசார் அருகே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

சிசிடிவி காட்சி
அதில் ஒரு வாலிபர் இருசக்கர வாகனத்தை நோட்டமிட , மற்றொரு வாலிபர் வாகனம் மீது அமர்ந்து காலால் லாவகமாக் சைட் லாக்கை உடைத்து இருசக்கர வாகனத்தை திருடி சென்றது தெரியவந்தது. மதுரவாயலில் பரபரப்பான சாலையில் இளைஞர்கள் இரு சக்கர வாகனத்தை திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

லாரி கிளீனர்
சென்னையில் தாழ்வான மின்சார உயர் கண்டைனர் பெட்டியில் உரசியதால் கிளீனர் பரிதாபமாக உயிரிழந்தார். சென்னையை அடுத்த மணலி புதுநகர் சாலையில் கருப்பையா என்பவர் லாரி ஓட்டுனர் மதுபாலன் என்பவர் கிளீனர் இருவரும் ஒரு லாரியை ஓட்டி வந்தனர். அப்போது டீசல் தீர்ந்து விட்டதால் எதிரில் வந்த லாரியை மறித்து லாரி கிளீனர் மதுபாலன் வயது 23 லிப்ட் கேட்டு ஏறிக் கொண்டார்.

உயிரிழப்பு
விச்சூர் சாலையில் செல்லும் போது தாழ்வாக இருந்த மின்சார வயர் கண்டைனர் பெட்டியில் உரசி இடது பக்கமிருந்த மதுபாலன் கைகளிலும் பட்டது இதனால் அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார் இதுகுறித்து தகவலறிந்த உதவி ஆய்வாளர் திருப்பதி அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்.

மணலி
லாரியை ஓட்டி வந்த சதீஷ் என்பவரிடம் போலீஸ் விசாரணை செய்து வருகின்றனர் மணலி புது நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பல இடங்களில் உயர் அழுத்த மின்சார ஒயர்கள் தாழ்வாக செல்வதாக பல குற்றச்சாட்டுகள் இருந்தபோதும் இந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது












Click it and Unblock the Notifications