சென்னை டூ நாகர்கோவில்! சம்மர் ஸ்பெஷல் ரயில்.. புறப்படும் நேரம் மாற்றம்.. பயணிகளே நோட் பண்ணுங்க
சென்னை டூ நாகர்கோவில்! சம்மர் ஸ்பெஷல் ரயில்.. புறப்படும் நேரம் மாற்றம்.. பயணிகளே நோட் பண்ணுங்க
சென்னை: சென்னை சென்ட்ரலில் இருந்து சேலம் வழியாக நாகர்கோவில் செல்லும் சம்மர் ஸ்பெஷல் ரயில் புறப்படும் நேரம் இன்று மாற்றப்பட்டுள்ளது. இணை ரயில் வர தாமதம் ஆனதால் 6 மணி நேரம் தாமதமாக புறப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

கோடைக்காலத்தை முன்னிட்டு பலரும் சொந்த ஊர் செல்வது, திரும்பவும் சென்னை வருவது என அடிக்கடி பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். பள்ளிகள் திறப்பு தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளதால் குடும்பத்துடன் சொந்த ஊர் சென்றவர்களும் கிராமங்களில் இருந்து சென்னை உள்ளிட்ட ஊர்களில் வசிக்கும் உறவினர் வீட்டிற்கு வந்தவர்களும் திரும்பி செல்ல ஆயத்தமாகி வருகிறார்கள்.
இதனால், ரயில், பேருந்துகளில் கடந்த சில நாட்களாகவே பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. கோடை காலத்தில் பயணிகள் சிரமம் இன்றி பயணிக்க ஏதுவாக சிறப்பு ரயில்களை அறிவித்திருந்தது ரயில்வே. அந்த வகையில், சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில் இடையிலான வாராந்திர சிறப்பு ரயில் (Train No. 06022) அறிவிக்கப்பட்டது.
இந்த ரயில் நாகர்கோவிலில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு ஞாயிற்றுக்கிழமை இயக்கப்படும். அதேபோல், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு திங்கள் கிழமைகளில் இயக்கப்படுகிறது. சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 3.10 மணிக்கு புறப்படும் இந்த ரயில் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போதனூர், பாலக்காடு, திரிசூர், எர்ணாகுளம், செங்கன்னூர், கொல்லம், திருவனந்தபுரம் வழியாக நாகர்கோவிலுக்கு மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்றடையும்.
இந்த நிலையில், இந்த சிறப்பு ரயில் புறப்படும் நேரம் இன்று மாற்றப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 3.10 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 6 மணி நேரம் தாமதாக 19.10 மணிக்கு புறப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இணை ரயில் 4 மணி நேரம் 20 நிமிடங்கள் தாமதாக வருவதால் ரயில் புறப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து நாகர்கோவில் சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்கள் செல்ல வசதியாக இந்த ரயில் இருந்ததால் பயணிகள் அதிக அளவில் இந்த ரயிலில் பயணம் செய்து வந்தனர். அதேபோல சேலம், ஈரோடு, திருப்பூர் செல்லும் பயணிகளுக்கு இந்த ரயில் வசதியாக இருந்தது. இன்றைய தினம் ரயில் புறப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளதால், பயணிகள் கவனத்தில் கொண்டு சிரமம் இன்றி பயணிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications